அத்தியாயம்: 1, பாடம்: 52, ஹதீஸ் எண்: 170

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ مُوسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ الْبُنَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏:‏

‏لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ ‏[يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ]  ‏إِلَى آخِرِ الْآيَةِ جَلَسَ ‏ ‏ثَابِتُ بْنُ قَيْسٍ ‏ ‏فِي بَيْتِهِ وَقَالَ أَنَا مِنْ أَهْلِ النَّارِ وَاحْتَبَسَ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَعْدَ بْنَ مُعَاذٍ ‏ ‏فَقَالَ يَا ‏ ‏أَبَا عَمْرٍو ‏ ‏مَا شَأْنُ ‏ ‏ثَابِتٍ ‏ ‏اشْتَكَى ‏ ‏قَالَ ‏ ‏سَعْدٌ ‏ ‏إِنَّهُ لَجَارِي وَمَا عَلِمْتُ لَهُ بِشَكْوَى قَالَ فَأَتَاهُ ‏ ‏سَعْدٌ ‏ ‏فَذَكَرَ لَهُ قَوْلَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏ثَابِتٌ ‏ ‏أُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ وَلَقَدْ عَلِمْتُمْ أَنِّي مِنْ أَرْفَعِكُمْ صَوْتًا عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَنَا مِنْ أَهْلِ النَّارِ فَذَكَرَ ذَلِكَ ‏ ‏سَعْدٌ ‏ ‏لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَلْ هُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ‏


و حَدَّثَنَا ‏ ‏قَطَنُ بْنُ نُسَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏ ‏كَانَ ‏ ‏ثَابِتُ بْنُ قَيْسِ بْنِ شَمَّاسٍ ‏ ‏خَطِيبَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَلَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ بِنَحْوِ حَدِيثِ ‏ ‏حَمَّادٍ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِهِ ذِكْرُ ‏ ‏سَعْدِ بْنِ مُعَاذٍ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَحْمَدُ بْنُ سَعِيدِ بْنِ صَخْرٍ الدَّارِمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏لَمَّا نَزَلَتْ ‏‏[لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ] ‏‏وَلَمْ يَذْكُرْ ‏ ‏سَعْدَ بْنَ مُعَاذٍ ‏ ‏فِي الْحَدِيثِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏هُرَيْمُ بْنُ عَبْدِ الْأَعْلَى الْأَسَدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏يَذْكُرُ عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ وَاقْتَصَّ الْحَدِيثَ وَلَمْ يَذْكُرْ ‏ ‏سَعْدَ بْنَ مُعَاذٍ ‏ ‏وَزَادَ فَكُنَّا ‏ ‏نَرَاهُ يَمْشِي بَيْنَ أَظْهُرِنَا رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ

“இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்” எனும் இந்த (49 : 2ஆவது) வசனம் அருளப்பெற்றபின் ஸாபித் பின் கைஸ் (ரலி), “நான் நரகவாசிகளில் ஒருவன்” என்று கூறிக்கொண்டு, நபி(ஸல்) அவர்களின் முன்வராமல் (வீட்டிலேயே) அடைந்து கிடந்தார்கள். எனவே, நபி (ஸல்), (ஸாபித் குறித்து) ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களிடம் “அபூ அம்ரே! ஸாபித்துக்கு என்ன ஆயிற்று? அவருக்கு உடல் நலமில்லையா?” என்று கேட்டார்கள் அதற்கு ஸஅத் (ரலி, “அவர் என் பக்கத்து வீட்டுகாரர்தாம். அவருக்கு எந்த நோயுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். பிறகு ஸஅத் (ரலி), ஸாபித் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டதைப் பற்றிச் சொன்னார்கள்.

அப்போது ஸாபித் (ரலி), “இந்த (49 :2 ஆவது) வசனம் அருளப்பெற்றுள்ளது. உங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் குரலை உயர்த்திப் பேசுபவன் நான் என்பதை நீங்கள் அறிந்தே உள்ளீர்கள். ஆகவே நான் நரகவாசிகளில் ஒருவன்தான்” என்று கூறினார்கள். இதை ஸஅத் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இல்லை. அவர் சொர்க்கவாசிகளில் ஒருவர் ஆவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு:

இதே ஹதீஸ் ஜஅஃபர் பின் ஸுலைமான் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அன்ஸாரீகளின் பேச்சாளராக இருந்தார்” என்ற கூடுதல் தகவல் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதில் ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களைப் பற்றியக் குறிப்பேதுமில்லை.

ஸுலைமான் பின் அல்-முகைரா (ரஹ்) வழி அறிவிப்பு, “உங்கள் குரல்களை நபியின் குரலைவிட உயர்த்தாதீர்கள் எனும் (49:2 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது…” என்று தொடங்குகிறது. அந்த ஹதீஸிலும் ஸஅத் பின் முஆத்(ரலி) அவர்களைப் பற்றியப் குறிப்பில்லை.

முஃதமிர் பின் ஸுலைமான் (ரஹ்) வழி அறிவிப்பிலும் ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களைப் பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை. ஆனால், “எங்களிடையே நடமாடிய ஒரு சொர்க்கவாசியாகவே நாங்கள் ஸாபித் (ரலி) அவர்களைக் கருதி வந்தோம்” என்று அனஸ் (ரலி) கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.