அத்தியாயம்: 1, பாடம்: 60, ஹதீஸ் எண்: 195

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ الْحَضْرَمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏مُخْتَارِ بْنِ فُلْفُلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏:‏

عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏ ‏إِنَّ أُمَّتَكَ لَا يَزَالُونَ يَقُولُونَ مَا كَذَا مَا كَذَا حَتَّى يَقُولُوا هَذَا اللَّهُ خَلَقَ الْخَلْقَ فَمَنْ خَلَقَ اللَّهَ ‏


حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْمُخْتَارِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ ‏ ‏غَيْرَ أَنَّ ‏ ‏إِسْحَقَ ‏ ‏لَمْ يَذْكُرْ قَالَ قَالَ اللَّهُ إِنَّ أُمَّتَكَ ‏

“உம்முடைய சமுதாயத்தார், இது யாரால் படைக்கப்பட்டது?; இது யாரால் படைக்கப்பட்டது?; என்று (ஒவ்வொன்றாகக்) கேட்டுக்கொண்டே வந்து இறுதியில், படைபிப்பினங்களை அல்லாஹ் படைத்தான்; அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்றும் கேட்பார்கள் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் கூறினான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி).


குறிப்பு:

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) வழி வரும் அறிவிப்பில், இந்த ஹதீஸ்அல்லாஹ் கூறியதாகக் குறிப்பிடப்படவில்லை.

அத்தியாயம்: 1, பாடம்: 60, ஹதீஸ் எண்: 194

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏كَثِيرُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ بُرْقَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ الْأَصَمِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏:‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيَسْأَلَنَّكُمْ النَّاسُ عَنْ كُلِّ شَيْءٍ حَتَّى يَقُولُوا اللَّهُ خَلَقَ كُلَّ شَيْءٍ فَمَنْ خَلَقَهُ ‏

“நிச்சயமாக (சில) மனிதர்கள் உங்களிடம் (படைப்பினம்) ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வந்து இறுதியில், எல்லாவற்றையும் அல்லாஹ் படைத்தான்; எனில், அவனைப் படைத்தவன் யார்? என்றும் கேட்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 60, ஹதீஸ் எண்: 193

و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ الرُّومِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏النَّضْرُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ وَهُوَ ابْنُ عَمَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏ ‏

قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يَزَالُونَ يَسْأَلُونَكَ يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏حَتَّى يَقُولُوا هَذَا اللَّهُ فَمَنْ خَلَقَ اللَّهَ قَالَ فَبَيْنَا أَنَا فِي الْمَسْجِدِ إِذْ جَاءَنِي نَاسٌ مِنْ ‏ ‏الْأَعْرَابِ ‏ ‏فَقَالُوا يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏هَذَا اللَّهُ فَمَنْ خَلَقَ اللَّهَ قَالَ فَأَخَذَ حَصًى بِكَفِّهِ فَرَمَاهُمْ ثُمَّ قَالَ قُومُوا قُومُوا صَدَقَ خَلِيلِي ‏

“அபூஹுரைரா! உம்மிடம் (சிலர்) கேள்வி கேட்டுக் கொண்டே வந்து இறுதியில், (எல்லாவற்றையும்) படைத்தவன் அல்லாஹ்; அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்று கேட்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறி (முன்னறிவிப்புச் செய்து) இருந்தார்கள்.

ஒரு நாள் நான் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கையில் என்னிடம் கிராமவாசிகளில் சிலர் வந்து, “அபூஹுரைரா! (எல்லாவற்றையும்) படைத்தவன் அல்லாஹ்; அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?” என்று கேட்டார்கள். உடனே நான் எனது உள்ளங்கை நிறைய பொடிக்கற்களை அள்ளி, அவர்கள் மீது வீசியெறிந்தேன். பிறகு “எழுந்திருங்கள்; எழுந்திருங்கள்! என் உற்ற தோழர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உண்மையே உரைத்தார்கள்” என்றேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 60, ஹதீஸ் எண்: 192

حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَزَالُ النَّاسُ يَسْأَلُونَكُمْ عَنْ الْعِلْمِ حَتَّى يَقُولُوا هَذَا اللَّهُ خَلَقَنَا فَمَنْ خَلَقَ اللَّهَ قَالَ وَهُوَ آخِذٌ بِيَدِ رَجُلٍ فَقَالَ صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ قَدْ سَأَلَنِي اثْنَانِ وَهَذَا الثَّالِثُ أَوْ قَالَ سَأَلَنِي وَاحِدٌ وَهَذَا الثَّانِي ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَيَعْقُوبُ الدَّوْرَقِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏لَا يَزَالُ النَّاسُ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏عَبْدِ الْوَارِثِ ‏ ‏غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْإِسْنَادِ وَلَكِنْ قَدْ قَالَ فِي آخِرِ الْحَدِيثِ صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ ‏

“(சில) மனிதர்கள் அறிவுபூர்வமான (சில) கேள்விகளை உங்களிடம் கேட்டுக் கொண்டே வந்து இறுதியில், நம்மை அல்லாஹ் படைத்தான்; அல்லாஹ்வை யார் படைத்தார்? என்று கேட்பார்கள்” என்று நபி (ஸல்) கூறி (முன்னறிவிப்புச் செய்து) இருந்தார்கள். “அல்லாஹ்வும் அவனின் தூதரும் உண்மையே உரைத்தனர். (அந்தக் கேள்வியை ஏற்கனவே) என்னிடம் இருவர் கேட்டுவிட்டனர்; இவர் மூன்றாமவர் அல்லது (ஏற்கனவே) என்னிடம் ஒருவர் கேட்டுவிட்டார்; இவர் இரண்டாமவர்” என்று (அவ்வாறு வினவிய) ஒருவரது கையைப் பிடித்தவராக அபூஹுரைரா (ரலி) கூறினார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு:

இஸ்மாயீல் இபுனு உலய்யா (ரஹ்) இடம்பெறும் முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்) வழி அறிவிப்பில், நபி (ஸல்) கூறியது பதிவு செய்யப் படாமல் “அல்லாஹ்வும் அவனின் தூதரும் உண்மையே உரைத்தனர் …” என்று அபூஹுரைரா (ரலி) தொடங்குவதாகக் காணப்படுகிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 60, ஹதீஸ் எண்: 191

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَعْقُوبَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُولَ مَنْ خَلَقَ كَذَا وَكَذَا حَتَّى يَقُولَ لَهُ مَنْ خَلَقَ رَبَّكَ فَإِذَا بَلَغَ ذَلِكَ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ وَلْيَنْتَهِ ‏


حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَأْتِي الْعَبْدَ الشَّيْطَانُ فَيَقُولُ مَنْ خَلَقَ كَذَا وَكَذَا مِثْلَ حَدِيثِ ‏ ‏ابْنِ أَخِي ابْنِ شِهَابٍ ‏

“உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, இதைப் படைத்தவன் யார்?; இதைப் படைத்தவன் யார்? என்று (ஒவ்வொன்றாகக்)கேட்டுக்கொண்டே வந்து, உன் இறைவனைப் படைத்தவன் யார்? என்று கேட்கும் கட்டத்தை எட்டுவான். அப்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி (அவனது கேள்விகளை) முடிவுக்குக் கொண்டு வந்துவிடவும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஓர் அடியானிடம் ஷைத்தான் வந்து, இதைப் படைத்தவன் யார்?; இதைப் படைத்தவன் யார்? என்று (ஒவ்வொன்றாகக்)கேட்டுக்கொண்டே வந்து …” என்று தொடங்குகிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 60, ஹதீஸ் எண்: 190

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ مَعْرُوفٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِهَارُونَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يَزَالُ النَّاسُ يَتَسَاءَلُونَ حَتَّى يُقَالَ هَذَا خَلَقَ اللَّهُ الْخَلْقَ فَمَنْ خَلَقَ اللَّهَ فَمَنْ وَجَدَ مِنْ ذَلِكَ شَيْئًا فَلْيَقُلْ آمَنْتُ بِاللَّهِ ‏


و حَدَّثَنَا ‏ ‏مَحْمُودُ بْنُ غَيْلَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو النَّضْرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَعِيدٍ الْمُؤَدِّبُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُولُ مَنْ خَلَقَ السَّمَاءَ مَنْ خَلَقَ الْأَرْضَ فَيَقُولُ اللَّهُ ثُمَّ ذَكَرَ بِمِثْلِهِ وَزَادَ وَرُسُلِهِ ‏

“எல்லாப் படைப்பினங்களையும் அல்லாஹ் படைத்தான்; அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?” என்று நீட்சியடையும் கேள்வி கேட்கும் குழப்ப நிலைக்கு மக்கள் உள்ளாவார்கள். (உங்களுள்) ஒருவருக்கு இதுபோன்ற குழப்ப எண்ணம் ஏற்பட்டால் ‘நான் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன்’ என்று கூறி (அதில் அவர் உறுதி அடைந்து) கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு:

ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து ‘வானத்தைப் படைத்தவன் யார்? பூமியைப் படைத்தவர் யார்?’ என்று கேட்பான். அவர் ‘அல்லாஹ்’ என்று பதிலளிப்பார். (தொடர்ந்து, அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்றும் கேட்பான்) என்றும் ‘அத்தகைய எண்ணங்கள் ஏற்பட்டால் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டேன்’ என்று கூறுங்கள்” என்றும் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 60, ஹதீஸ் எண்: 189

حَدَّثَنَا ‏ ‏يُوسُفُ بْنُ يَعْقُوبَ الصَّفَّارُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ عَثَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏سُعَيْرِ بْنِ الْخِمْسِ ‏ ‏عَنْ ‏ ‏مُغِيرَةَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏ ‏‏

سُئِلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الْوَسْوَسَةِ قَالَ ‏ ‏تِلْكَ ‏ ‏مَحْضُ ‏ ‏الْإِيمَانِ ‏

நபி (ஸல்) அவர்களிடம் மனத்தடுமாற்றைப் பற்றி வினவப்பட்டபோது, “அதுதான் தெளிவான இறைநம்பிக்கை” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 60, ஹதீஸ் எண்: 188

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏ ‏

جَاءَ نَاسٌ مِنْ ‏ ‏أَصْحَابِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلُوهُ إِنَّا نَجِدُ فِي أَنْفُسِنَا مَا يَتَعَاظَمُ أَحَدُنَا أَنْ يَتَكَلَّمَ بِهِ قَالَ ‏ ‏وَقَدْ وَجَدْتُمُوهُ قَالُوا نَعَمْ قَالَ ذَاكَ ‏ ‏صَرِيحُ ‏ ‏الْإِيمَانِ ‏


و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ جَبَلَةَ بْنِ أَبِي رَوَّادٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو الْجَوَّابِ ‏ ‏عَنْ ‏ ‏عَمَّارِ بْنِ رُزَيْقٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ ‏

நபித்தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்கள் உள்ளத்தில் சில (தடுமாற்றமான) நினைவுகள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ)காரியமாகக் கருதுகின்றோம்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்), “உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு, “அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)