حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ دَاوُدَ عَنْ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ :
قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ابْنُ جُدْعَانَ كَانَ فِي الْجَاهِلِيَّةِ يَصِلُ الرَّحِمَ وَيُطْعِمُ الْمِسْكِينَ فَهَلْ ذَاكَ نَافِعُهُ قَالَ لَا يَنْفَعُهُ إِنَّهُ لَمْ يَقُلْ يَوْمًا رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ
“அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் உறவுகளைப் பேணி நடப்பவராகவும் ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இப்னு ஜுத்ஆன் இருந்தார். (மறுமையில்) அவை அவருக்குப் பயனளிக்குமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அவருக்குப் பயனளிக்கா; அவர் ஒருநாள்கூட ‘இறைவா! விசாரணை நாளில் என் பாவத்தை மன்னித்தருள்வாயாக!’ என்று பிரார்த்தித்ததில்லை” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)