அத்தியாயம்: 12, பாடம்: 28, ஹதீஸ் எண்: 1710

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏ابْنُ أَبِي مُلَيْكَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عَبَّادَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ‏ ‏أَخْبَرَهُ عَنْ ‏ ‏أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ‏

‏أَنَّهَا جَاءَتْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ يَا نَبِيَّ اللَّهِ لَيْسَ لِي شَيْءٌ إِلَّا مَا أَدْخَلَ عَلَيَّ ‏ ‏الزُّبَيْرُ ‏ ‏فَهَلْ عَلَيَّ جُنَاحٌ أَنْ ‏ ‏أَرْضَخَ ‏ ‏مِمَّا يُدْخِلُ عَلَيَّ فَقَالَ ‏ ‏ارْضَخِي ‏ ‏مَا اسْتَطَعْتِ وَلَا ‏ ‏تُوعِي ‏ ‏فَيُوعِيَ ‏ ‏اللَّهُ عَلَيْكِ

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் நபியே! எனக்கு (என் கணவர்) ஸுபைர் (ரலி) அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் கிடையாது. அவர் அளிப்பவற்றில் சிலவற்றை நான் தர்மம் செய்தால் அது குற்றமாகுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்), “உன்னால் இயன்ற மட்டும் தர்மம் செய். பையில் (முடிந்து) வைத்துக்கொள்ளாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும் உன் விஷயத்தில் (தன் அருள் வளங்களைப் பொழியாமல்) முடிந்து வைத்துக்கொள்வான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்மா பின்த் அபீபக்ரு (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 28, ஹதீஸ் எண்: 1709

و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ خَازِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبَّادِ بْنِ حَمْزَةَ ‏ ‏وَعَنْ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ ‏ ‏عَنْ ‏ ‏أَسْمَاءَ ‏ ‏قَالَتْ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏انْفَحِي أَوْ ‏ ‏انْضَحِي ‏ ‏أَوْ ‏ ‏أَنْفِقِي وَلَا ‏ ‏تُحْصِي ‏ ‏فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ وَلَا ‏ ‏تُوعِي ‏ ‏فَيُوعِيَ ‏ ‏اللَّهُ عَلَيْكِ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبَّادِ بْنِ حَمْزَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَسْمَاءَ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ لَهَا ‏ ‏نَحْوَ حَدِيثِهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அறவழியில் அள்ளிப் பொழி! வாரி வழங்கு! தாராளமாகக் கொடு! கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே! அப்படிச் செய்தால், அல்லாஹ்வும் உனக்குக் கணக்குப் பார்த்தே வழங்குவான். பையில் (முடிந்து) வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால், அல்லாஹ்வும் உன் விஷயத்தில் (தனது அருள் வளங்களைப் பொழியாமல்) முடிந்து வைத்துக்கொள்வான் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்மா பின்த் அபீபக்ரு (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 28, ஹதீஸ் எண்: 1708

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصٌ يَعْنِي ابْنَ غِيَاثٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ ‏ ‏عَنْ ‏ ‏أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْفِقِي أَوْ ‏ ‏انْضَحِي ‏ ‏أَوْ ‏ ‏انْفَحِي وَلَا ‏ ‏تُحْصِي ‏ ‏فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “அறவழியில் செலவழி! – தாராளமாகக் கொடு! அள்ளிப் பொழி! வாரி வழங்கு! கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே! அப்படிச் செய்தால், அல்லாஹ்வும் உனக்குக் கணக்குப் பார்த்தே வழங்குவான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்மா பின்த் அபீபக்ரு (ரலி)