அத்தியாயம்: 13, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1897

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏كَانَتْ ‏ ‏قُرَيْشٌ ‏ ‏تَصُومُ عَاشُورَاءَ فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصُومُهُ فَلَمَّا هَاجَرَ إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ فَلَمَّا فُرِضَ شَهْرُ رَمَضَانَ قَالَ ‏ ‏مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَذْكُرْ فِي أَوَّلِ الْحَدِيثِ وَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصُومُهُ وَقَالَ فِي آخِرِ الْحَدِيثِ وَتَرَكَ عَاشُورَاءَ فَمَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ وَلَمْ يَجْعَلْهُ مِنْ قَوْلِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَرِوَايَةِ ‏ ‏جَرِيرٍ

அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நாடு துறந்து மதீனாவுக்குச் சென்றதும் (அங்கும்) ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு (மக்களையும்) பணித்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், “நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு : இபுனு நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள்“ எனும் குறிப்பு ஹதீஸின் தொடக்கத்தில் இடம்பெறவில்லை. ஹதீஸின் இறுதியில் கூடுதலாக, “(ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும்) முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விட்டுவிட்டார்கள். எனவே, நாடியவர் அந்நாளில் நோன்பு நோற்றனர்; நாடியவர் அதை விட்டுவிட்டனர்” என்றும் இடம்பெற்றுள்ளது.

ஜரீர் (ரஹ்) அறிவிப்பில் உள்ளதுபோல், “நாடியவர் நோற்கலாம்; நாடியவர் விட்டுவிடலாம்” என்பது நபி (ஸல்) கூற்றாக இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 13, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1896

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرِ بْنِ الْأَشَجِّ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏عَنْ ‏ ‏مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏إِنَّ النَّاسَ شَكُّوا فِي صِيَامِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ ‏ ‏عَرَفَةَ ‏ ‏فَأَرْسَلَتْ إِلَيْهِ ‏ ‏مَيْمُونَةُ ‏ ‏بِحِلَابِ ‏ ‏اللَّبَنِ وَهُوَ وَاقِفٌ فِي الْمَوْقِفِ فَشَرِبَ مِنْهُ وَالنَّاسُ يَنْظُرُونَ إِلَيْهِ

அரஃபா நாளின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அரஃபாவில் தங்கியிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் நான் பால் கொடுத்தனுப்பினேன். மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதை அருந்தினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை மைமூனா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1895

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا النَّضْرِ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏عُمَيْرًا ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏أُمَّ الْفَضْلِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏تَقُولُ ‏

‏شَكَّ نَاسٌ مِنْ ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي صِيَامِ يَوْمِ ‏ ‏عَرَفَةَ ‏ ‏وَنَحْنُ بِهَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَرْسَلْتُ إِلَيْهِ بِقَعْبٍ فِيهِ لَبَنٌ وَهُوَ ‏ ‏بِعَرَفَةَ ‏ ‏فَشَرِبَهُ

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபா நாளில் நோன்பு நோற்றிருக்கின்றார்களா?” என்று நபித்தோழர்களில் சிலர் சந்தேகம் தெரிவித்தனர். (அன்றைய தினம்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அரஃபாவில்தான் இருந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பாலிருந்த ஒரு கிண்ணத்தை நான் கொடுத்தனுப்பினேன். அதை அவர்கள் அருந்தினார்கள்.

அறிவிப்பாளர் : உம்முல் ஃபள்லு பின்த் அல்ஹாரிஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1894

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏عُمَيْرٍ ‏ ‏مَوْلَى ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ ‏

‏أَنَّ نَاسًا ‏ ‏تَمَارَوْا ‏ ‏عِنْدَهَا يَوْمَ ‏ ‏عَرَفَةَ ‏ ‏فِي صِيَامِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ بَعْضُهُمْ هُوَ صَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ لَيْسَ بِصَائِمٍ فَأَرْسَلْتُ إِلَيْهِ بِقَدَحِ لَبَنٍ وَهُوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ ‏ ‏بِعَرَفَةَ ‏ ‏فَشَرِبَهُ ‏

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَذْكُرْ وَهُوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ وَقَالَ عَنْ ‏ ‏عُمَيْرٍ ‏ ‏مَوْلَى ‏ ‏أُمِّ الْفَضْلِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ أَبِي النَّضْرِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏وَقَالَ عَنْ ‏ ‏عُمَيْرٍ ‏ ‏مَوْلَى ‏ ‏أُمِّ الْفَضْلِ

அரஃபா நாளின்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பு நோற்றிருக்கின்றார்களா? இல்லையா? என்பது பற்றி எனக்கருகே மக்கள் சிலர் விவாதித்தனர். சிலர் “அவர்கள் நோன்பாளி” என்றனர். மற்றும் சிலர் “அவர்கள் நோன்பு நோற்கவில்லை” என்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு கோப்பை பாலை நான் கொடுத்தனுப்பினேன்; அப்போது அவர்கள் அரஃபாப் பெருவெளியில் ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருந்தார்கள். அதை அவர்கள் அருந்தி(தாம் நோன் பாளியல்லர் என்பதை உணர்த்தி)னார்கள்.

அறிவிப்பாளர் : உம்முல் ஃபள்லு பின்த் அல்ஹாரிஸ் (ரலி)

குறிப்பு : ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், ‘’ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருந்தார்கள்” எனும் குறிப்பில்லை. மேலும் இந்த ஹதீஸை, “உம்முல் ஃபள்லு (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த உமைர் (ரஹ்) அறிவித்தார்” என்று இடம்பெற்றுள்ளது.