அத்தியாயம்: 13, பாடம்: 32, ஹதீஸ் எண்: 1951

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏طَلْحَةَ بْنِ يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏عَمَّتِهِ ‏ ‏عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ‏ ‏قَالَتْ ‏

‏دَخَلَ عَلَيَّ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ يَوْمٍ فَقَالَ ‏ ‏هَلْ عِنْدَكُمْ شَيْءٌ فَقُلْنَا لَا قَالَ فَإِنِّي إِذَنْ صَائِمٌ ثُمَّ أَتَانَا يَوْمًا آخَرَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ أُهْدِيَ لَنَا ‏ ‏حَيْسٌ ‏ ‏فَقَالَ أَرِينِيهِ فَلَقَدْ أَصْبَحْتُ صَائِمًا فَأَكَلَ

நபி (ஸல்) ஒரு நாள் என்னிடம் வந்து, “உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நாங்கள், “இல்லை” என்றோம். “அப்படியானால் நான் (இன்று) நோன்பாளியாக இருந்துகொள்கிறேன்” என்றார்கள். பிறகு மற்றொரு நாள் அவர்கள் எம்மிடம் வந்தபோது, “அல்லாஹ்வின் தூதரே! நமக்கு ‘ஹைஸ்’ எனும் பலகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது” என்றோம். அதற்கு அவர்கள், “எனக்கு அதைக் காட்டு. நான் இன்று காலை நோன்பு நோற்றிருந்தேன்” என்று கூறிவிட்டு, அதை(வாங்கி)ச் சாப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 32, ஹதீஸ் எண்: 1950

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏طَلْحَةُ بْنُ يَحْيَى بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَتْنِي ‏ ‏عَائِشَةُ بِنْتُ طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ يَوْمٍ يَا ‏ ‏عَائِشَةُ ‏ ‏هَلْ عِنْدَكُمْ شَيْءٌ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا عِنْدَنَا شَيْءٌ قَالَ فَإِنِّي صَائِمٌ قَالَتْ فَخَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأُهْدِيَتْ لَنَا هَدِيَّةٌ ‏ ‏أَوْ جَاءَنَا ‏ ‏زَوْرٌ ‏ ‏قَالَتْ فَلَمَّا رَجَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أُهْدِيَتْ لَنَا هَدِيَّةٌ ‏ ‏أَوْ جَاءَنَا زَوْرٌ ‏ ‏وَقَدْ خَبَأْتُ لَكَ شَيْئًا قَالَ مَا هُوَ قُلْتُ ‏ ‏حَيْسٌ ‏ ‏قَالَ هَاتِيهِ فَجِئْتُ بِهِ فَأَكَلَ ثُمَّ قَالَ قَدْ كُنْتُ أَصْبَحْتُ صَائِمًا ‏

‏قَالَ ‏ ‏طَلْحَةُ ‏ ‏فَحَدَّثْتُ ‏ ‏مُجَاهِدًا ‏ ‏بِهَذَا الْحَدِيثِ فَقَالَ ‏ ‏ذَاكَ بِمَنْزِلَةِ الرَّجُلِ يُخْرِجُ الصَّدَقَةَ مِنْ مَالِهِ فَإِنْ شَاءَ أَمْضَاهَا وَإِنْ شَاءَ أَمْسَكَهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு நாள் என்னிடம் (வந்து), “ஆயிஷா! உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் எதுவுமில்லை” என்றேன். உடனே “அவ்வாறாயின் நான் நோன்பாளியாக இருந்துகொள்கிறேன்” என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார்கள். பின்னர் எங்களைச் சந்திக்கச் சிலர் (அன்பளிப்புடன்) வந்தனர் (அல்லது) எங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திரும்பிவந்தபோது, நான் “அல்லாஹ்வின் தூதரே! நம்மைச் சந்திக்கச் சிலர் (அன்பளிப்புடன்) வந்தனர். (அல்லது) நமக்கு ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. (அதிலிருந்து) சிறிதளவைத் தங்களுக்காக நான் எடுத்து வைத்துள்ளேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “அது என்ன?” என்று கேட்டார்கள். நான், “ஹைஸ் எனும் பலகாரம்” என்று சொன்னேன். “அதைக் கொண்டு வா” என்று சொன்னார்கள். நான் அதைக் கொண்டுவந்தேன். அவர்கள் உண்டார்கள். பிறகு, “நான் இன்று காலையில் நோன்பு நோற்றி(ட எண்ணியி)ருந்தேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்புகள் : “நான் இந்த ஹதீஸை முஜாஹித் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், ‘இ(வ்வாறு நோற்க எண்ணியிருந்த நோன்பை விட்டுவிடுவதான)து, ஒருவர் தமது செல்வத்திலிருந்து தர்மப் பொருளை(த் தனியே) எடுத்துவைப்பதைப் போன்றதுதான். அவர் நாடினால், அதை வழங்கலாம்; நாடினால் தம்மிடமே அதை வைத்துக்கொள்ளலாம்’ என்று கூறினார்கள்” என்பதாக இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான தல்ஹா பின் யஹ்யா (ரஹ்) கூறினார்.

ஹைஸ் என்பது, பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் பலகாரமாகும்.