அத்தியாயம்: 13, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1961

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ أَبِي خَلَفٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَصُومُ حَتَّى يُقَالَ قَدْ صَامَ قَدْ صَامَ وَيُفْطِرُ حَتَّى يُقَالَ قَدْ أَفْطَرَ قَدْ أَفْطَرَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்களோ, நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்களோ என்று சொல்லப்படும் அளவிற்கு நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்கள். நோன்பே நோற்கமாட்டார்களோ, நோன்பே நோற்க மாட்டார்களோ என்று சொல்லப்படும் அளவிற்கு நோன்பு நோற்காமலும் இருந்து விடுவார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1960

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ حَكِيمٍ الْأَنْصَارِيُّ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏سَعِيدَ بْنَ جُبَيْرٍ ‏ ‏عَنْ صَوْمِ رَجَبٍ وَنَحْنُ يَوْمَئِذٍ فِي رَجَبٍ ‏ ‏فَقَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُا ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ ‏

‏و حَدَّثَنِيهِ ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ مُوسَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ حَكِيمٍ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمِثْلِهِ

நாங்கள் ரஜப் மாதத்தில் இருந்தபோது நான் ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம் ரஜப் மாதத்தில் நோன்பு நோற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இனி விடாமல்) நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்கள். (இனி) நோன்பே நோற்கமாட்டார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு நோன்பு நோற்காமலும் இருப்பார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி), கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக உஸ்மான் பின் ஹகீம் அல் அன்ஸாரி (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1959

حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏مَا صَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَهْرًا كَامِلًا قَطُّ غَيْرَ رَمَضَانَ وَكَانَ يَصُومُ إِذَا صَامَ حَتَّى يَقُولَ الْقَائِلُ لَا وَاللَّهِ لَا يُفْطِرُ وَيُفْطِرُ إِذَا أَفْطَرَ حَتَّى يَقُولَ الْقَائِلُ لَا وَاللَّهِ لَا يَصُومُ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏غُنْدَرٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بِشْرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏شَهْرًا مُتَتَابِعًا مُنْذُ قَدِمَ ‏ ‏الْمَدِينَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் மாதம் முழுக்க நோன்பு நோற்கமாட்டார்கள். நோன்பு நோற்கத் தொடங்கிவிட்டால், அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் இனி விடாமல் (தொடர்ந்து) நோன்பு நோற்றுக் கொண்டே இருப்பார்களோ என்று எண்ணுமளவிற்கு நோன்பு நோற்றுக் கொண்டே இருப்பார்கள். நோன்பை அவர்கள் விடத் தொடங்கினால், அல்லாஹ்வின் மீதாணையாக! இனிமேல் நோன்பே நோற்க மாட்டார்களோ என்று எண்ணுமளவிற்கு நோன்பு நோற்காமலும் இருந்துவிடுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

குறிப்பு : ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவிற்கு வந்ததிலிருந்து (ரமளானில் தவிர) தொடர்ந்து ஒரு மாதம் நோன்பு நோற்றதில்லை” என்று தொடங்குகிறது.

அத்தியாயம்: 13, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1958

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الشَّهْرِ مِنْ السَّنَةِ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ وَكَانَ يَقُولُ ‏ ‏خُذُوا مِنْ الْأَعْمَالِ مَا تُطِيقُونَ فَإِنَّ اللَّهَ لَنْ ‏ ‏يَمَلَّ ‏ ‏حَتَّى ‏ ‏تَمَلُّوا ‏ ‏وَكَانَ يَقُولُ أَحَبُّ الْعَمَلِ إِلَى اللَّهِ مَا دَاوَمَ عَلَيْهِ صَاحِبُهُ وَإِنْ قَلَّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஓராண்டில் ஷஅபான் மாதத்தைவிட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. “நற்செயல்களில் உங்களால் இயன்றதையே செய்யுங்கள். நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ் சலிப்படையமாட்டான்” என்று அவர்கள் கூறுவார்கள். மேலும், “குறைவாக இருந்தாலும் தொடர்ந்து ஒருவர் செய்துவரும் நற்செயலே அல்லாஹ்விற்கு மிக விருப்பமானதாகும்” என்றும் கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1957

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي لَبِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏

‏عَنْ صِيَامِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ كَانَ ‏ ‏يَصُومُ حَتَّى نَقُولَ قَدْ صَامَ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ قَدْ أَفْطَرَ وَلَمْ أَرَهُ صَائِمًا مِنْ شَهْرٍ قَطُّ أَكْثَرَ مِنْ صِيَامِهِ مِنْ شَعْبَانَ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ إِلَّا قَلِيلًا

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நோன்பு குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பு நோற்பதை விடமாட்டார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்கள்; நோன்பே (இனிமேல்) நோற்கமாட்டார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு நோன்பு நோற்காமலும் இருந்துவிடுவார்கள். அவர்கள் ஷஅபானைத் தவிர வேறெந்த மாதத்திலும் அதிக நாட்கள் நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. ஷஅபான் மாதம் முழுவதும் அவர்கள் நோன்பு நோற்றிருக்கின்றார்கள். ஷஅபானில் சில நாட்கள் மட்டும் நோன்பு நோற்றும் இருக்கின்றார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1956

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏مَوْلَى ‏ ‏عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ وَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ قَطُّ إِلَّا رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ فِي شَهْرٍ أَكْثَرَ مِنْهُ صِيَامًا فِي شَعْبَانَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பை விடவேமாட்டார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்கள்; (அதுபோல்) நோன்பு நோற்கவேமாட்டார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு அவர்கள் நோன்பு நோற்காமல் இருந்துவிடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் மாதம் முழுக்க நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. ஷஅபானைத் தவிர வேறெந்த மாதத்திலும் அதிகமாக நோன்பு நோற்றதையும் நான் கண்டதில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1955

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏وَهِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ ‏ ‏قَالَ ‏ ‏حَمَّادٌ ‏ ‏وَأَظُنُّ ‏ ‏أَيُّوبَ ‏ ‏قَدْ سَمِعَهُ مِنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏عَنْ ‏

‏صَوْمِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ كَانَ ‏ ‏يَصُومُ حَتَّى نَقُولَ قَدْ صَامَ قَدْ صَامَ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ قَدْ أَفْطَرَ قَدْ أَفْطَرَ قَالَتْ وَمَا رَأَيْتُهُ صَامَ شَهْرًا كَامِلًا مُنْذُ قَدِمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏إِلَّا أَنْ يَكُونَ رَمَضَانَ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏بِمِثْلِهِ وَلَمْ يَذْكُرْ فِي الْإِسْنَادِ ‏ ‏هِشَامًا ‏ ‏وَلَا ‏ ‏مُحَمَّدًا

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் நோன்பு குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) (தொடர்ந்து) நோன்பு நோற்கின்றார்கள், (விடாமல்) நோன்பு நோற்கின்றார்கள் என்று நாங்கள் எண்ணுமளவிற்கு நோன்பு நோற்றுக்கொண்டிருப்பார்கள்; நோன்பு நோற்கவில்லை, நோன்பே நோற்கவில்லை என்று நாங்கள் எண்ணுமளவிற்கு நோன்பு நோற்காமலும் இருந்துவிடுவார்கள். மேலும், அவர்கள் மதீனாவிற்கு வந்ததிலிருந்து ரமளானைத் தவிர வேறு எந்த மாதத்திலும் மாதம் முழுக்க நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1954

و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏كَهْمَسٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏

أَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصُومُ شَهْرًا كُلَّهُ قَالَتْ ‏ ‏مَا عَلِمْتُهُ صَامَ شَهْرًا كُلَّهُ إِلَّا رَمَضَانَ وَلَا أَفْطَرَهُ كُلَّهُ حَتَّى يَصُومَ مِنْهُ حَتَّى ‏ ‏مَضَى لِسَبِيلِهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ரமளானைத் தவிர வேறு மாதங்களில்) ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்றார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் ஒரு மாதம் முழுவதும் நானறிந்து நோன்பு நோற்றதில்லை. அவர்கள் இறக்கும்வரை எந்தவொரு மாதத்திலும் ஒரு சில நாட்களேனும் நோன்பு நோற்காமல் இருந்ததுமில்லை” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1953

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ الْجُرَيْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏

‏هَلْ كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصُومُ شَهْرًا مَعْلُومًا سِوَى رَمَضَانَ قَالَتْ وَاللَّهِ ‏ ‏إِنْ صَامَ شَهْرًا مَعْلُومًا سِوَى رَمَضَانَ حَتَّى ‏ ‏مَضَى لِوَجْهِهِ ‏ ‏وَلَا أَفْطَرَهُ حَتَّى يُصِيبَ مِنْهُ

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) ரமளானைத் தவிர வேறெந்தக் குறிப்பிட்ட மாதத்திலாவது (மாதம் முழுக்க) நோன்பு நோற்றிருக்கிறார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) இறக்கும்வரை ரமளான் அல்லாத வேறெந்தக் குறிப்பிட்ட மாதத்திலும் (மாதம் முழுக்க) நோன்பு நோற்றதுமில்லை; ஒரு சில நாட்களாவது நோன்பு நோற்காமல் எந்த மாதத்தையும் விட்டதுமில்லை” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்)