அத்தியாயம்: 13, பாடம்: 37, ஹதீஸ் எண்: 1981

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَخِي مُطَرِّفِ بْنِ الشِّخِّيرِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُطَرِّفًا ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏
‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ لِرَجُلٍ ‏ ‏هَلْ صُمْتَ مِنْ ‏ ‏سُرَرِ ‏ ‏هَذَا الشَّهْرِ شَيْئًا ‏ ‏يَعْنِي شَعْبَانَ ‏ ‏قَالَ لَا قَالَ فَقَالَ لَهُ إِذَا أَفْطَرْتَ رَمَضَانَ فَصُمْ يَوْمًا ‏ ‏أَوْ يَوْمَيْنِ ‏ ‏شُعْبَةُ ‏ ‏الَّذِي شَكَّ فِيهِ قَالَ وَأَظُنُّهُ قَالَ يَوْمَيْنِ ‏

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ قُدَامَةَ ‏ ‏وَيَحْيَى اللُّؤْلُؤِيُّ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏النَّضْرُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ هَانِئِ ابْنِ أَخِي مُطَرِّفٍ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمِثْلِهِ

நபி (ஸல்) ஒருவரிடம், “இந்த மாத -அதாவது ஷஅபான்- இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?” என்று கேட்டார்கள். அவர், “இல்லை” என்றார். அதற்கு நபி (ஸல்), “நீர் ரமளான் நோன்பை முடித்ததும் ஒரு நாள், அல்லது இரண்டு நாட்கள்’ நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

குறிப்பு : “இரண்டு நாட்கள் என்று கூறியதாகவே நான் கருதுகிறேன்” என்று அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) ஐயத்துடன் குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 13, பாடம்: 37, ஹதீஸ் எண்: 1980

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏عَنْ ‏ ‏الْجُرَيْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفٍ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ لِرَجُلٍ ‏ ‏هَلْ صُمْتَ مِنْ ‏ ‏سُرَرِ ‏ ‏هَذَا الشَّهْرِ شَيْئًا قَالَ لَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِذَا أَفْطَرْتَ مِنْ رَمَضَانَ فَصُمْ يَوْمَيْنِ مَكَانَهُ

நபி (ஸல்) ஒருவரிடம், “நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?” என்று கேட்டார்கள். அவர், “இல்லை’ என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீர் ரமளான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக முதர்ரிஃப் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 37, ஹதீஸ் எண்: 1979

حَدَّثَنَا ‏ ‏هَدَّابُ بْنُ خَالِدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفٍ ‏ ‏وَلَمْ أَفْهَمْ ‏ ‏مُطَرِّفًا ‏ ‏مِنْ ‏ ‏هَدَّابٍ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ لَهُ ‏ ‏أَوْ لِآخَرَ ‏ ‏أَصُمْتَ مِنْ ‏ ‏سُرَرِ ‏ ‏شَعْبَانَ قَالَ لَا قَالَ فَإِذَا أَفْطَرْتَ فَصُمْ يَوْمَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் (அல்லது வேறொருவரிடம்), “நீர் ஷஅபான் மாதத்தின் இறுதியில் நோன்பு நோற்றீரா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை’ என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “நீர் (ரமளான்) நோன்பை முடித்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக முதர்ரிஃப் (ரஹ்)