அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1991

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏جَبَلَةَ ‏ ‏وَمُحَارِبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَحَيَّنُوا ‏ ‏لَيْلَةَ الْقَدْرِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ أَوْ قَالَ فِي التِّسْعِ الْأَوَاخِرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் (ரமளானின்) இறுதிப் பத்து இரவுகளில், அல்லது இறுதி ஒன்பது இரவுகளில் லைலத்துல் கத்ரு இரவைத் தேடிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1990

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏جَبَلَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يُحَدِّثُ ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏مَنْ كَانَ مُلْتَمِسَهَا فَلْيَلْتَمِسْهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ

“அந்த (லைலத்துல் கத்ரு) இரவைத் தேடுபவர் ரமளானின் இறுதிப் பத்து இரவுகளில் தேடிக்கொள்ளட்டும்!” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1989

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عُقْبَةَ وَهُوَ ابْنُ حُرَيْثٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُا ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ ‏ ‏يَعْنِي لَيْلَةَ الْقَدْرِ ‏ ‏فَإِنْ ضَعُفَ أَحَدُكُمْ أَوْ عَجَزَ فَلَا يُغْلَبَنَّ عَلَى السَّبْعِ الْبَوَاقِي

“நீங்கள் அந்த (லைலத்துல் கத்ரு) இரவை (ரமளானின்) இறுதிப் பத்து இரவுகளில் தேடிக்கொள்ளுங்கள். உங்களில் ஒருவருக்குப் பலவீனம், அல்லது இயலாமை ஏற்பட்டாலும் எஞ்சிய ஏழு இரவுகளில் (அதைத் தேடும் முயற்சியில்) தளர்ந்துவிட வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1988

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ لِلَيْلَةِ الْقَدْرِ ‏ ‏إِنَّ نَاسًا مِنْكُمْ قَدْ أُرُوا أَنَّهَا فِي السَّبْعِ الْأُوَلِ وَأُرِيَ نَاسٌ مِنْكُمْ أَنَّهَا فِي السَّبْعِ ‏ ‏الْغَوَابِرِ ‏ ‏فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ ‏ ‏الْغَوَابِرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) லைலத்துல் கத்ரு இரவு தொடர்பாகக் கூறுகையில், “உங்களில் சிலர், ரமளானின் முந்தைய ஏழு இரவுகளில் (ஒன்றில்) லைலத்துல் கத்ரு இரவு இருப்பதாகக் (கனவில்) காட்டப் பெற்றனர்; உங்களில் வேறுசிலர் ரமளானின் பிந்தைய ஏழு இரவுகளில் (ஒன்றில்) லைலத்துல் கத்ரு இரவு இருப்பதாகக் (கனவில்) காட்டப்பெற்றனர். நீங்கள் ரமளானின் பிந்தைய பத்தில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1987

و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏رَأَى رَجُلٌ أَنَّ لَيْلَةَ الْقَدْرِ لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرَى رُؤْيَاكُمْ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فَاطْلُبُوهَا فِي ‏ ‏الْوِتْرِ ‏ ‏مِنْهَا

ஒருவர் இருபத்தேழாவது இரவில் லைலத்துல் கத்ரு இரவு இருப்பதாக, (தமது கனவில்) கண்டார். அப்போது நபி (ஸல்), “ரமளானின் இறுதிப் பத்து இரவுகளில் உங்கள் கனவுகள் ஒத்திருப்பதாகக் கருதுகின்றேன். எனவே, ரமளானின் இறுதிப் பத்தில் ஒற்றைப்படையான இரவுகளில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1986

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏تَحَرَّوْا ‏ ‏لَيْلَةَ الْقَدْرِ فِي السَّبْعِ الْأَوَاخِرِ

“லைலத்துல் கத்ரு இரவை (ரமளானின்) இறுதி ஏழு இரவுகளில் தேடிக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1985

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّ رِجَالًا مِنْ ‏ ‏أَصْحَابِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُرُوا لَيْلَةَ الْقَدْرِ فِي الْمَنَامِ فِي السَّبْعِ الْأَوَاخِرِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرَى رُؤْيَاكُمْ قَدْ ‏ ‏تَوَاطَأَتْ ‏ ‏فِي السَّبْعِ الْأَوَاخِرِ فَمَنْ كَانَ ‏ ‏مُتَحَرِّيَهَا ‏ ‏فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الْأَوَاخِرِ

நபித்தோழர்களில் சிலர், (ரமளானின்) இறுதி ஏழு இரவுகளில் (ஒன்றில்) லைலத்துல் கத்ரு இரவு இருப்பதாகக் கனவில் காட்டப்பெற்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறுதி ஏழு இரவுகளில் (ஒன்று) என்பதில் உங்கள் கனவுகள் ஒத்திருப்பதை நான் காண்கிறேன். ஆகவே, அதைத் தேடுபவர் (ரமளானின்) இறுதி ஏழு இரவுகளில் தேடிக்கொள்ளட்டும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)