அத்தியாயம்: 13, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1821

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا الْبَخْتَرِيِّ ‏ ‏قَالَ ‏

‏أَهْلَلْنَا ‏ ‏رَمَضَانَ وَنَحْنُ ‏ ‏بِذَاتِ عِرْقٍ ‏ ‏فَأَرْسَلْنَا رَجُلًا إِلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَسْأَلُهُ فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اللَّهَ قَدْ أَمَدَّهُ لِرُؤْيَتِهِ فَإِنْ أُغْمِيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ

நாங்கள் ‘தாத்து இர்க்’ எனும் இடத்தில் இருந்தபோது ரமளான் (முதல்) பிறையைக் கண்டோம். அதைப் பற்றிக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவரை அனுப்பினோம். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), “பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் சிறிது நேரம் தென்படச் செய்கிறான். உங்களுக்கு (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்களின்) எண்ணிக்கையை (முப்பதாக) முழுமையாக்கிக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அபுல் பக்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 06, ஹதீஸ் எண்: 1820

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏
‏حُصَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْبَخْتَرِيِّ ‏ ‏قَالَ ‏
‏خَرَجْنَا لِلْعُمْرَةِ فَلَمَّا نَزَلْنَا ‏ ‏بِبَطْنِ نَخْلَةَ ‏ ‏قَالَ تَرَاءَيْنَا الْهِلَالَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلَاثٍ وَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ لَيْلَتَيْنِ قَالَ فَلَقِينَا ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏فَقُلْنَا إِنَّا رَأَيْنَا الْهِلَالَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلَاثٍ وَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ لَيْلَتَيْنِ فَقَالَ أَيَّ لَيْلَةٍ رَأَيْتُمُوهُ قَالَ فَقُلْنَا لَيْلَةَ كَذَا وَكَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ اللَّهَ مَدَّهُ لِلرُّؤْيَةِ فَهُوَ لِلَيْلَةٍ رَأَيْتُمُوهُ

நாங்கள் உம்ராவிற்காகப் புறப்பட்டுச் சென்றோம். (வழியில்) நாங்கள் ‘பத்னு நக்லா’ எனுமிடத்தில் தங்கியிருந்தபோது, பிறையைப் பார்ப்பதற்காக ஒன்றுகூடினோம். அப்போது (பிறையைப் பார்த்த) மக்களில் சிலர், “அது மூன்றாவது பிறை”’ என்று கூறினர். வேறுசிலர், “(அல்ல) அது இரண்டாவது பிறை” என்று கூறினர். பின்னர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, “நாங்கள் பிறை பார்த்தோம். மக்களில் சிலர், ‘அது மூன்றாவது பிறை’ என்றனர். வேறுசிலர், ‘அது இரண்டாவது பிறை’ என்று கூறினர்” என்று சொன்னோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “எந்த இரவில் நீங்கள் பிறை கண்டீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “இன்ன (மாதத்தின்) இன்ன இரவில்” என்று பதிலளித்தோம். அப்போது, “பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் சிறிது நேரம் தென்படச் செய்கிறான். ஆகவே, அது நீங்கள் கண்ட இரவுக்குரியதே ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அபுல் பக்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்)