அத்தியாயம்: 15, பாடம்: 15.21, ஹதீஸ் எண்: 2142

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏سَمِعَ ‏ ‏مُحَمَّدَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ‏ ‏قَالَ ‏

‏أَضْلَلْتُ بَعِيرًا لِي فَذَهَبْتُ أَطْلُبُهُ يَوْمَ ‏ ‏عَرَفَةَ ‏ ‏فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاقِفًا مَعَ النَّاسِ ‏ ‏بِعَرَفَةَ ‏ ‏فَقُلْتُ وَاللَّهِ إِنَّ هَذَا لَمِنْ ‏ ‏الْحُمْسِ ‏ ‏فَمَا شَأْنُهُ هَاهُنَا وَكَانَتْ ‏ ‏قُرَيْشٌ ‏ ‏تُعَدُّ مِنْ ‏ ‏الْحُمْسِ

நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஒருமுறை) எனது ஒட்டகம் ஒன்றைத் தொலைத்து விட்டேன். அரஃபா நாளன்று நான் எனது ஒட்டகத்தைத் தேடிக்கொண்டு சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபாப் பெருவெளியில் மக்களுடன் தங்கியிருப்பதைக் கண்டேன். அப்போது நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் (முஸ்தலிஃபாவில் தங்கும்) ‘ஹும்ஸு'(க் குறைஷி)களுள் ஒருவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?” என்று எண்ணிக் கொண்டேன். குறைஷியர், (கடினமான சமயப் பற்றுடைய) ஹும்ஸுகளாகவே கருதப் பட்டனர்.

அறிவிப்பாளர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.21, ஹதீஸ் எண்: 2141

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

‏كَانَتْ ‏ ‏الْعَرَبُ ‏ ‏تَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏عُرَاةً إِلَّا ‏ ‏الْحُمْسَ ‏ ‏وَالْحُمْسُ ‏ ‏قُرَيْشٌ ‏ ‏وَمَا وَلَدَتْ كَانُوا يَطُوفُونَ عُرَاةً إِلَّا أَنْ تُعْطِيَهُمْ الْحُمْسُ ثِيَابًا فَيُعْطِي الرِّجَالُ الرِّجَالَ وَالنِّسَاءُ النِّسَاءَ وَكَانَتْ ‏ ‏الْحُمْسُ ‏ ‏لَا يَخْرُجُونَ مِنْ ‏ ‏الْمُزْدَلِفَةِ ‏ ‏وَكَانَ النَّاسُ كُلُّهُمْ يَبْلُغُونَ ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏قَالَ ‏ ‏هِشَامٌ ‏ ‏فَحَدَّثَنِي أَبِي عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏ ‏الْحُمْسُ هُمْ الَّذِينَ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِيهِمْ …” ‏ثُمَّ ‏ ‏أَفِيضُوا ‏ ‏مِنْ حَيْثُ ‏ ‏أَفَاضَ ‏ ‏النَّاسُ“ ‏

قَالَتْ كَانَ النَّاسُ ‏ ‏يُفِيضُونَ ‏ ‏مِنْ ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏وَكَانَ ‏ ‏الْحُمْسُ ‏ ‏يُفِيضُونَ ‏ ‏مِنْ ‏ ‏الْمُزْدَلِفَةِ ‏ ‏يَقُولُونَ لَا ‏ ‏نُفِيضُ ‏ ‏إِلَّا مِنْ الْحَرَمِ فَلَمَّا نَزَلَتْ ‏ …” ‏‏ ‏أَفِيضُوا ‏ ‏مِنْ حَيْثُ ‏ ‏أَفَاضَ ‏ ‏النَّاسُ“ ‏رَجَعُوا إِلَى ‏ ‏عَرَفَاتٍ

இறையில்லம் கஅபாவை (அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின்போது) அரபியர் நிர்வாணமாகவே சுற்றிவருவார்கள் – (சமயப் பற்றில்) கடும்போக்குள்ள) ‘ஹும்ஸு’களைத் தவிர! ‘ஹும்ஸு’ என்போர் குறைஷியரும் அவர்கள் பெற்றெடுத்த மக்களும் ஆவர். ஹும்ஸுகள் ஏதேனும் ஆடை வழங்கினால் தவிர, அரபியர் நிர்வாணமாகவே (கஅபாவைச்) சுற்றிவருவார்கள். ஆண்கள் ஆண்களுக்கும், பெண்கள் பெண்களுக்கும் ஆடை வழங்குவர். கடினமான சமயப் பற்றுடைய ஹும்ஸுகள் (துல்ஹஜ் ஒன்பதாம் நாளில்) முஸ்தலிஃபாவிலிருந்து வெளியேறமாட்டார்கள். மற்ற அரபுகள் அனைவரும் அரஃபாத் சென்றடை(ந்து அங்குத் தங்கு)வார்கள்.

“வல்லமையும் மாண்புமுள்ள அல்லாஹ் ‘…பின்பு மக்கள் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்‘ என்று கூறியது ‘ஹும்ஸுகளைப் பற்றித்தான்” என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறுகின்றார்கள். (அரபு) மக்கள் அனைவரும் அரஃபாவிலிருந்தே திரும்பிச்செல்வார்கள். ஹும்ஸுகள் மட்டும் முஸ்தலிஃபாவிலிருந்து திரும்பிச்செல்வார்கள். அவர்கள், “நாங்கள் ‘ஹரம்’ (புனித) எல்லையிலிருந்தே திரும்பிச்செல்வோம்” என்று கூறுவார்கள். பின்னர் இந்த (2:199) வசனம் அருளப்பட்டதும் அரஃபாவிலிருந்தே அவர்களும் திரும்பிச்சென்றனர்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 15.21, ஹதீஸ் எண்: 2140

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏كَانَ ‏ ‏قُرَيْشٌ ‏ ‏وَمَنْ ‏ ‏دَانَ ‏ ‏دِينَهَا يَقِفُونَ ‏ ‏بِالْمُزْدَلِفَةِ ‏ ‏وَكَانُوا يُسَمَّوْنَ ‏ ‏الْحُمْسَ ‏ ‏وَكَانَ سَائِرُ ‏ ‏الْعَرَبِ ‏ ‏يَقِفُونَ ‏ ‏بِعَرَفَةَ ‏ ‏فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ نَبِيَّهُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يَأْتِيَ ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏فَيَقِفَ بِهَا ثُمَّ ‏ ‏يُفِيضَ ‏ ‏مِنْهَا فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ …” ‏ثُمَّ ‏ ‏أَفِيضُوا ‏ ‏مِنْ حَيْثُ ‏ ‏أَفَاضَ ‏ ‏النَّاسُ“

குறைஷியரும் அவர்களுடைய சமயச் சார்புடையோரும் (அறியாமைக் கால ஹஜ்ஜின்போது, தங்களை உயர்வாகக் கருதிக்கொண்டு) முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். அவர்கள் ‘(சமயப் பற்றில்) கடும்போக்குள்ள (ஹும்ஸு) குழுவினர்’ எனப் பெயர் பெற்றவர்கள். மற்ற எல்லா அரபியரும் அரஃபாப் பெருவெளியில் தங்குவார்கள். இஸ்லாம் வந்தபோது வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ், தன் தூதருக்கு (துல்ஹஜ் ஒன்பதாம் நாளில்) ‘அரஃபா’வுக்குச் சென்று, அங்குத் தங்கியிருந்துவிட்டு, அங்கிருந்தே புறப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டான்:.“… பின்பு மக்கள் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்” (2:199).

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)