அத்தியாயம்: 15, பாடம்: 33, ஹதீஸ் எண்: 2192

‏حَدَّثَنِي ‏ ‏حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏قَالَ ‏
‏كُنْتُ عِنْدَ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏فَأَتَاهُ آتٍ فَقَالَ إِنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏وَابْنَ الزُّبَيْرِ ‏ ‏اخْتَلَفَا فِي ‏ ‏الْمُتْعَتَيْنِ ‏ ‏فَقَالَ ‏ ‏جَابِرٌ ‏ ‏فَعَلْنَاهُمَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ نَهَانَا عَنْهُمَا ‏ ‏عُمَرُ ‏ ‏فَلَمْ نَعُدْ لَهُمَا

நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களோடு இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் (இடைக்காலத் திருமணம், இடைக்காலப் பயனடையும் ஹஜ் ஆகிய) இரு ‘முத்ஆ’க்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடு இருக்கின்றது” என்றார்.

அதற்கு ஜாபிர் (ரலி), “நாங்கள் அவ்விரண்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இருக்கும் காலத்தில்) செய்தோம். பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அவ்விரண்டையும் செய்யக் கூடாதென எங்களுக்குத் தடை விதித்தார்கள். எனவே, அதற்குப் பின்னர் நாங்கள் அவ்விரண்டையும் செய்யவில்லை” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபூநள்ரா (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 33, ஹதீஸ் எண்: 2191

‏و حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَلَّى بْنُ أَسَدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏وَعَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَا ‏
‏قَدِمْنَا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَنَحْنُ نَصْرُخُ بِالْحَجِّ صُرَاخًا

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்காக உரத்த குரலில் தல்பியா முழங்கியவர்களாகப் புறப்பட்டோம்.

அறிவிப்பாளர்கள் : ஜாபிர் (ரலி) & அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 33, ஹதீஸ் எண்: 2190

‏حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ ‏
‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَصْرُخُ بِالْحَجِّ صُرَاخًا فَلَمَّا قَدِمْنَا ‏ ‏مَكَّةَ ‏ ‏أَمَرَنَا أَنْ نَجْعَلَهَا عُمْرَةً إِلَّا مَنْ سَاقَ ‏ ‏الْهَدْيَ ‏ ‏فَلَمَّا كَانَ ‏ ‏يَوْمُ التَّرْوِيَةِ ‏ ‏وَرُحْنَا إِلَى ‏ ‏مِنًى ‏ ‏أَهْلَلْنَا ‏ ‏بِالْحَجِّ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உரத்த குரலில் ஹஜ்ஜுக்காகத் தல்பியா முழங்கியவர்களாகப் புறப்பட்டோம்.

நாங்கள் மக்காவிற்கு வந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), எங்களில் தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டு வந்திருப்பவரைத் தவிர மற்றவர்கள் தமது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

துல்ஹஜ் எட்டாவது நாளன்று நாங்கள் மினாவுக்குச் சென்றபோது (செல்ல நாடிய போது), ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டு தல்பியாச் சொன்னோம்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 33, ஹதீஸ் எண்: 2189

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الْحَسَنُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّ ‏ ‏مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ ‏ ‏أَخْبَرَهُ قَالَ ‏
‏قَصَّرْتُ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِشْقَصٍ ‏ ‏وَهُوَ عَلَى ‏ ‏الْمَرْوَةِ ‏ ‏أَوْ رَأَيْتُهُ يُقَصَّرُ عَنْهُ ‏ ‏بِمِشْقَصٍ ‏ ‏وَهُوَ عَلَى ‏ ‏الْمَرْوَةِ

முஆவியா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடியை நான் கத்தரிக்கோலால் கத்தரித்துக் குறைத்தேன்; அப்போது அவர்கள் மர்வாவின் மீதிருந்தார்கள் அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடி கத்தரிக்கோலால் குறைக்கப்படுவதை நான் கண்டேன்; அப்போது அவர்கள் மர்வாவின் மீதிருந்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 33, ஹதீஸ் எண்: 2188

حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ حُجَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏قَالَ لِي ‏ ‏مُعَاوِيَةُ ‏
‏أَعَلِمْتَ أَنِّي ‏ ‏قَصَّرْتُ ‏ ‏مِنْ رَأْسِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عِنْدَ ‏ ‏الْمَرْوَةِ ‏ ‏بِمِشْقَصٍ ‏ ‏فَقُلْتُ لَهُ لَا أَعْلَمُ هَذَا إِلَّا حُجَّةً عَلَيْكَ

என்னிடம் முஆவியா (ரலி), “நான் ‘மர்வா’ பகுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடியைக் கத்தரிக்கோலால் கத்தரித்துக் குறைத்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். “அவ்வாறெனில், அது உங்களுக்கு எதிரான ஆதாரமாக அமையும் என்று கருதுகின்றேன்” என்று நான் சொன்னேன்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)