அத்தியாயம்: 15, பாடம்: 58, ஹதீஸ் எண்: 2308

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ يُوسُفَ الْأَزْرَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ ‏ ‏قَالَ: ‏

‏سَأَلْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏قُلْتُ أَخْبِرْنِي عَنْ شَيْءٍ ‏ ‏عَقَلْتَهُ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيْنَ صَلَّى الظُّهْرَ ‏ ‏يَوْمَ التَّرْوِيَةِ ‏ ‏قَالَ ‏ ‏بِمِنًى ‏ ‏قُلْتُ فَأَيْنَ صَلَّى الْعَصْرَ ‏ ‏يَوْمَ النَّفْرِ ‏ ‏قَالَ ‏ ‏بِالْأَبْطَحِ ‏ ‏ثُمَّ قَالَ افْعَلْ مَا يَفْعَلُ أُمَرَاؤُكَ

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்த ஏதேனும் ஒரு செய்தியை என்னிடம் கூறுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தர்வியாவுடைய (துல் ஹஜ் எட்டாவது) நாளில் எங்கு லுஹ்ருத் தொழுதார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “மினாவில்” என்று பதிலளித்தார்கள். நான், “மினாவிலிருந்து புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்கு அஸ்ருத் தொழுதார்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “அல்அப்தஹ் எனுமிடத்தில்” என்று பதிலளித்துவிட்டு, “உன்னுடைய தலைவர்கள் செய்வதைப் போன்று நீயும் செய்துகொள்” என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 58, ஹதீஸ் எண்: 2307

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَفَاضَ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏ ‏ثُمَّ رَجَعَ فَصَلَّى الظُّهْرَ ‏ ‏بِمِنًى ‏

قَالَ ‏ ‏نَافِعٌ ‏ ‏فَكَانَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏يُفِيضُ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏ ‏ثُمَّ يَرْجِعُ فَيُصَلِّي الظُّهْرَ ‏ ‏بِمِنًى ‏ ‏وَيَذْكُرُ أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَعَلَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ச் செய்துவிட்டுத் திரும்பிச் சென்று மினாவில் லுஹ்ருத் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

“இப்னு உமர் (ரலி) அவர்களும் நஹ்ருடைய நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ச் செய்து விட்டுத் திரும்பிச் சென்று மினாவில் லுஹ்ருத் தொழுவார்கள். இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள் என்றும் அவர்கள் குறிப்பிடுவார்கள்” என்று இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) கூறுகின்றார்.