அத்தியாயம்: 15, பாடம்: 65, ஹதீஸ் எண்: 2347

‏و حَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ بْنُ شَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ أَعْيَنَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْقِلٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏قَالَ: ‏

‏سَأَلْتُ ‏ ‏جَابِرًا ‏ ‏عَنْ رُكُوبِ ‏ ‏الْهَدْيِ ‏ ‏فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏ارْكَبْهَا بِالْمَعْرُوفِ حَتَّى تَجِدَ ‏ ‏ظَهْرًا

நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் பலிப் பிராணியில் ஏறிச் செல்வதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு, “நபி (ஸல்) (வேறு) பயண வாகனம் கிடைக்கும்வரை அதில் ஏறிச் செல்ல நியாயமுண்டு என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபுஸ்ஸுபைர் (ரஹ்) & மஅகில் பின் உபைதில்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 65, ஹதீஸ் எண்: 2346

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏قَالَ: ‏

‏سَمِعْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏سُئِلَ عَنْ رُكُوبِ ‏ ‏الْهَدْيِ ‏ ‏فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏ارْكَبْهَا بِالْمَعْرُوفِ إِذَا أُلْجِئْتَ إِلَيْهَا حَتَّى تَجِدَ ‏ ‏ظَهْرًا

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் பலிப் பிராணியில் ஏறிச் செல்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அவர்கள், “நீங்கள் அதில் ஏறிச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால், (வேறு) பயண வாகனம் கிடைக்கும்வரை அதில் ஏறிச் செல்ல நியாயமுண்டு”  என்று நபி (ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபுஸ்ஸுபைர் (ரஹ்) & இப்னு ஜுரைஜ் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 65, ஹதீஸ் எண்: 2345

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرِ بْنِ الْأَخْنَسِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ سَمِعْتُهُ يَقُولُ: ‏

‏مُرَّ عَلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِبَدَنَةٍ ‏ ‏أَوْ هَدِيَّةٍ ‏ ‏فَقَالَ ‏ ‏ارْكَبْهَا قَالَ إِنَّهَا ‏ ‏بَدَنَةٌ ‏ ‏أَوْ هَدِيَّةٌ ‏ ‏فَقَالَ وَإِنْ ‏

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏بُكَيْرُ بْنُ الْأَخْنَسِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏يَقُولُا ‏ ‏مُرَّ عَلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِبَدَنَةٍ ‏ ‏فَذَكَرَ ‏ ‏مِثْلَهُ

நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பலிப் பிராணி/ஒட்டகம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது (அதை நடத்திச் சென்றுகொண்டிருந்தவரிடம்) நபி (ஸல்), “அதில் ஏறிச் செல்!” என்றார்கள். அவர், “இது பலி ஒட்டகம்” என்றோ “பலிப் பிராணி” என்றோ பதிலுரைத்தார். அதற்கு நபி (ஸல்), “இருக்கட்டும், (அதில் ஏறிச் செல்!)” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

இப்னு பிஷ்ரு (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பலி ஒட்டகம் கொண்டுசெல்லப்பட்டது …” என்று ஆரம்பிக்கிறது

அத்தியாயம்: 15, பாடம்: 65, ஹதீஸ் எண்: 2344

‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَسُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حُمَيْدٌ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏وَأَظُنُّنِي قَدْ سَمِعْتُهُ مِنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ الْبُنَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ: ‏

‏مَرَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِرَجُلٍ يَسُوقُ ‏ ‏بَدَنَةً ‏ ‏فَقَالَ ‏ ‏ارْكَبْهَا فَقَالَ إِنَّهَا ‏ ‏بَدَنَةٌ ‏ ‏قَالَ ارْكَبْهَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பலி ஒட்டகமொன்றை நடத்திக்கொண்டு சென்றுகொண்டிருந்த ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவரிடம், “அதில் ஏறிச் செல்க!” என்றார்கள். அதற்கு அவர், “இது பலி ஒட்டகமாயிற்றே?” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதில் ஏறிச் செல்க!” என இரண்டு, அல்லது மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 65, ஹதீஸ் எண்: 2343

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا ‏ ‏وَقَالَ: بَيْنَمَا رَجُلٌ يَسُوقُ ‏ ‏بَدَنَةً ‏ ‏مُقَلَّدَةً ‏ ‏قَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَيْلَكَ ارْكَبْهَا فَقَالَ ‏ ‏بَدَنَةٌ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ قَالَ وَيْلَكَ ارْكَبْهَا وَيْلَكَ ارْكَبْهَا

ஒருவர், கழுத்தில் அடையாள மாலை தொங்கவிடப்பட்ட ஒரு பலி ஒட்டகத்தை நடத்திச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனக்கு (என்ன) கேடு! அதில் ஏறிச் செல்!” என்றார்கள். அதற்கு அவர், “(இது) பலி ஒட்டகமாயிற்றே, அல்லாஹ்வின் தூதரே?” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனக்கு (என்ன) கேடு! அதில் ஏறிச் செல்!; உனக்கு (என்ன) கேடு!. அதில் ஏறிச் செல்!” என்று (மீண்டும் மீண்டும்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இது, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எமக்கு அறிவித்த ஹதீஸ்களுள் ஒன்றாகும் என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 65, ஹதீஸ் எண்: 2342

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَأَى رَجُلًا يَسُوقُ ‏ ‏بَدَنَةً ‏ ‏فَقَالَ ‏ ‏ارْكَبْهَا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا ‏ ‏بَدَنَةٌ ‏ ‏فَقَالَ ارْكَبْهَا وَيْلَكَ فِي الثَّانِيَةِ أَوْ فِي الثَّالِثَةِ ‏

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏بَيْنَمَا رَجُلٌ يَسُوقُ ‏ ‏بَدَنَةً ‏ ‏مُقَلَّدَةً

ஒருவர் ஒரு பலி ஒட்டகத்தை நடத்திக் கொண்டு செல்வதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அவரிடம்), “அதில் ஏறிச் செல்!” என்றார்கள். அவர் “அல்லாஹ்வின் தூதரே! இது, பலி ஒட்டகமாயிற்றே!” என்றார். அதற்கு “அதில் ஏறிச்செல்!” என்று (மீண்டும்) கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இரண்டாவது அல்லது மூன்றாவது தடவை “உனக்கு (அதில் ஏறிச்செல்ல என்ன) கேடு!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

முகீரா (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருவர், கழுத்தில் அடையாள மாலை தொங்கவிடப்பட்ட ஒரு பலி ஒட்டகத்தை நடத்திச் சென்றபோது…” என்று தொடங்குகிறது.