அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2048

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو الرَّبِيعِ ‏ ‏وَخَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏
‏كَأَنِّي أَنْظُرُ إِلَى ‏ ‏وَبِيصِ ‏ ‏الطِّيبِ فِي مَفْرِقِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ مُحْرِمٌ وَلَمْ يَقُلْ خَلَفٌ وَهُوَ مُحْرِمٌ وَلَكِنَّهُ قَالَ وَذَاكَ طِيبُ إِحْرَامِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூண்டிருந்தபோது அவர்களது தலைமுடி வகிட்டில் நறுமணப் பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் என் மனக்கண்ணால் காண்கின்றேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு : கலஃப் பின் ஹிஷாம் (ரஹ்) அறிவிப்பில், “அவர்கள் இஹ்ராம் பூண்டிருந்தபோது …” எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை. அதற்குப் பகரமாக “அது அவர்கள் இஹ்ராம் பூண்டபோது பூசிய நறுமணமாகும்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2047

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الضَّحَّاكُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الرِّجَالِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏طَيَّبْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِحُرْمِهِ حِينَ أَحْرَمَ ‏ ‏وَلِحِلِّهِ ‏ ‏قَبْلَ أَنْ ‏ ‏يُفِيضَ ‏ ‏بِأَطْيَبِ مَا وَجَدْتُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூண்டபோதும் தவாஃபுல் இஃபாளா செய்வதற்கு முன்பு இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் எனக்குக் கிடைத்தவற்றில் மிக நல்ல நறுமணத்தை அவர்களுக்குப் பூசிவிட்டேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2046

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ عُرْوَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عُرْوَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏كُنْتُ أُطَيِّبُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِأَطْيَبِ مَا أَقْدِرُ عَلَيْهِ قَبْلَ أَنْ يُحْرِمَ ثُمَّ يُحْرِمُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூணுவதற்கு முன் என்னால் இயன்றளவு மிக நல்ல வாசனைப் பொருளை(த் தேர்ந்து) அவர்களுக்குப் பூசிவந்தேன். அதற்குப் பின்னரே அவர்கள் இஹ்ராம் பூணுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2045

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

‏سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏بِأَيِّ شَيْءٍ طَيَّبْتِ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عِنْدَ حُرْمِهِ قَالَتْ بِأَطْيَبِ الطِّيبِ

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூண்டபோது எதனால் அவர்களுக்கு நறுமணம் பூசினீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆகச் சிறந்த வாசனைப் பொருளால் (நறுமணம் பூசிவிட்டேன்)” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக, உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2044

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُرْوَةَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عُرْوَةَ ‏ ‏وَالْقَاسِمَ ‏ ‏يُخْبِرَانِ عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏
‏طَيَّبْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدِي ‏ ‏بِذَرِيرَةٍ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ لِلْحِلِّ وَالْإِحْرَامِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘விடைபெறும் ஹஜ்’ஜிற்காக இஹ்ராம் பூண்டபோதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் நான் எனது கையால் அவர்களுக்கு தரீரா (எனும்) வாசனைத் தூளைப் பூசிவிட்டேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2043

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْقَاسِمَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏طَيَّبْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِحِلِّهِ ‏ ‏وَلِحُرْمِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இஹ்ராமின் போதும் அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன்.

அறிவிப்பளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக, காசிம் பின் முஹம்மது (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2042

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏كُنْتُ أُطَيِّبُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِإِحْرَامِهِ قَبْلَ أَنْ يُحْرِمَ ‏ ‏وَلِحِلِّهِ ‏ ‏قَبْلَ أَنْ ‏ ‏يَطُوفَ ‏ ‏بِالْبَيْتِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூணுவதற்கு முன் நான் அவர்களுக்கு நறுமணம் பூசுவேன்; அவர்கள் கஅபாவைச் சுற்றுவதற்கு (தவாஃபுல் இஃபாளா செய்வதற்கு) முன்பு இஹ்ராமிலிருந்து விடுபடும்போதும் அவர்களுக்கு நான் நறுமணம் பூசுவேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக, காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ரு (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2041

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَفْلَحُ بْنُ حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ ‏

‏طَيَّبْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدِي لِحُرْمِهِ حِينَ أَحْرَمَ ‏ ‏وَلِحِلِّهِ ‏ ‏حِينَ أَحَلَّ قَبْلَ أَنْ ‏ ‏يَطُوفَ ‏ ‏بِالْبَيْتِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூணும்போது அவர்களுக்கு என் கையால் நறுமணம் பூசிவிட்டேன். கஅபாவைச் சுற்றுவதற்கு (தவாஃபுல் இஃபாளா செய்வதற்கு) முன்பு அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும்போதும் அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக காசிம் பின் முஹம்மது பின் அபீபக்ரு (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 07, ஹதீஸ் எண்: 2040

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏طَيَّبْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِحُرْمِهِ حِينَ أَحْرَمَ ‏ ‏وَلِحِلِّهِ ‏ ‏قَبْلَ أَنْ ‏ ‏يَطُوفَ ‏ ‏بِالْبَيْتِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூணும்போது அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன்; கஅபாவைச் சுற்றுவதற்கு (தவாஃபுல் இஃபாளா செய்வதற்கு) முன்பு அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது, அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)