அத்தியாயம்: 15, பாடம்: 80, ஹதீஸ் எண்: 2407

‏و حَدَّثَنِيهِ ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي حَفْصَةَ ‏ ‏وَزَمْعَةُ بْنُ صَالِحٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ حُسَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أُسَامَةَ بْنِ زَيْدٍ ‏ ‏أَنَّهُ قَالَ: ‏

يَا رَسُولَ اللَّهِ أَيْنَ تَنْزِلُ غَدًا إِنْ شَاءَ اللَّهُ وَذَلِكَ زَمَنَ الْفَتْحِ قَالَ ‏ ‏وَهَلْ تَرَكَ لَنَا ‏ ‏عَقِيلٌ ‏ ‏مِنْ مَنْزِلٍ

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இன்ஷா அல்லாஹ் நாளைய தினம் எங்குத் தங்குவீர்கள்?” என்று கேட்டேன். -இது மக்கா வெற்றியின்போது நடந்ததாகும்.- அதற்கு நபி (ஸல்), “அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டுவைத்துள்ளாரா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)


குறிப்பு :

அகீல் என்பவர், நபி (ஸல்) அவர்களின் பெரிய தகப்பனார் அபூதாலிபின் மகனாவார்.

அத்தியாயம்: 15, பாடம்: 80, ஹதீஸ் எண்: 2406

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ مِهْرَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ حُسَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏أُسَامَةَ بْنِ زَيْدٍ ‏ ‏قُلْتُ: ‏

يَا رَسُولَ اللَّهِ أَيْنَ تَنْزِلُ غَدًا وَذَلِكَ فِي حَجَّتِهِ حِينَ دَنَوْنَا مِنْ ‏ ‏مَكَّةَ ‏ ‏فَقَالَ ‏ ‏وَهَلْ تَرَكَ لَنَا ‏ ‏عَقِيلٌ ‏ ‏مَنْزِلًا

நபி (ஸல்) செய்த ஹஜ்ஜின் போது, நாங்கள் மக்காவை நெருங்கிய வேளையில், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நாளை எங்குத் தங்குவீர்கள்?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டு வைத்துள்ளாரா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)


குறிப்பு :

அகீல் என்பவர், நபி (ஸல்) அவர்களின் பெரிய தகப்பனார் அபூதாலிபின் மகனாவார்.

அத்தியாயம்: 15, பாடம்: 80, ஹதீஸ் எண்: 2405

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يُونُسُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏عَلِيَّ بْنَ حُسَيْنٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏عَمْرَو بْنَ عُثْمَانَ بْنِ عَفَّانَ ‏ ‏أَخْبَرَهُ عَنْ ‏ ‏أُسَامَةَ بْنِ زَيْدِ بْنِ حَارِثَةَ ‏ ‏أَنَّهُ قَالَ: ‏

يَا رَسُولَ اللَّهِ أَتَنْزِلُ فِي دَارِكَ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏فَقَالَ ‏ ‏وَهَلْ تَرَكَ لَنَا ‏ ‏عَقِيلٌ ‏ ‏مِنْ ‏ ‏رِبَاعٍ ‏ ‏أَوْ دُورٍ ‏
‏وَكَانَ ‏ ‏عَقِيلٌ ‏ ‏وَرِثَ ‏ ‏أَبَا طَالِبٍ ‏ ‏هُوَ ‏ ‏وَطَالِبٌ ‏ ‏وَلَمْ يَرِثْهُ ‏ ‏جَعْفَرٌ ‏ ‏وَلَا ‏ ‏عَلِيٌّ ‏ ‏شَيْئًا لِأَنَّهُمَا كَانَا مُسْلِمَيْنِ وَكَانَ ‏ ‏عَقِيلٌ ‏ ‏وَطَالِبٌ ‏ ‏كَافِرَيْنِ

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் மக்காவில் தங்கள் (பெரிய தந்தையின்) வீட்டில் தங்குவீர்களா?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்), “குடியிருப்புகளில் அல்லது வீடுகளில் எதையேனும் (என் பெரிய தந்தை அபூதாலிபின் புதல்வர்) அகீல் நமக்காக விட்டுவைத்துள்ளாரா, என்ன?” என்று கேட்டார்கள்.

அபூதாலிபின் சொத்துகளுக்கு அகீலும் தாலிபும் வாரிசானார்கள். (அபூதாலிபின் மற்ற இரு புதல்வர்களான) ஜஅஃபர் (ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் முஸ்லிம்களாக இருந்ததால் (தம் தந்தையின் சொத்துகளில்) எதற்கும் வாரிசாக (முடிய)வில்லை. (அப்போது) அகீலும் தாலிபும் இறைமறுப்பாளர்களாக இருந்தனர்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)