அத்தியாயம்: 16, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2550

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏وَإِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

تَزَوَّجَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهِيَ بِنْتُ سِتٍّ ‏ ‏وَبَنَى بِهَا ‏ ‏وَهِيَ بِنْتُ تِسْعٍ وَمَاتَ عَنْهَا وَهِيَ بِنْتُ ثَمَانَ عَشْرَةَ

நான் ஏழு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) என்னை மணந்துகொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளானபோது, என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நபி (ஸல்) என்னைவிட்டு இறந்தபோது நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2549

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ: ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَزَوَّجَهَا وَهِيَ بِنْتُ سَبْعِ سِنِينَ وَزُفَّتْ إِلَيْهِ وَهِيَ بِنْتُ تِسْعِ سِنِينَ وَلُعَبُهَا مَعَهَا وَمَاتَ عَنْهَا وَهِيَ بِنْتُ ثَمَانَ عَشْرَةَ

நான் ஏழு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளானபோது, அவர்களிடம் நான் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன.  நபி (ஸல்) என்னை விட்டு இறந்தபோது எனக்குப் பதினெட்டு வயது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2548

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ هُوَ ابْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

تَزَوَّجَنِي النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنَا بِنْتُ سِتِّ سِنِينَ ‏ ‏وَبَنَى بِي ‏ ‏وَأَنَا بِنْتُ تِسْعِ سِنِينَ

நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளானபோது, என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 10, ஹதீஸ் எண்: 2547

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ ‏ ‏وَجَدْتُ فِي كِتَابِي ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِسِتِّ سِنِينَ ‏ ‏وَبَنَى بِي ‏ ‏وَأَنَا بِنْتُ تِسْعِ سِنِينَ قَالَتْ فَقَدِمْنَا ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَوُعِكْتُ ‏ ‏شَهْرًا ‏ ‏فَوَفَى ‏ ‏شَعْرِي ‏ ‏جُمَيْمَةً ‏ ‏فَأَتَتْنِي ‏ ‏أُمُّ رُومَانَ ‏ ‏وَأَنَا عَلَى أُرْجُوحَةٍ وَمَعِي صَوَاحِبِي فَصَرَخَتْ بِي فَأَتَيْتُهَا وَمَا أَدْرِي مَا تُرِيدُ بِي فَأَخَذَتْ بِيَدِي فَأَوْقَفَتْنِي عَلَى الْبَابِ فَقُلْتُ هَهْ هَهْ حَتَّى ذَهَبَ نَفَسِي فَأَدْخَلَتْنِي بَيْتًا فَإِذَا نِسْوَةٌ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَقُلْنَ عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ وَعَلَى خَيْرِ ‏ ‏طَائِرٍ ‏ ‏فَأَسْلَمَتْنِي إِلَيْهِنَّ فَغَسَلْنَ رَأْسِي وَأَصْلَحْنَنِي فَلَمْ ‏ ‏يَرُعْنِي ‏ ‏إِلَّا وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ضُحًى فَأَسْلَمْنَنِي إِلَيْهِ

நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னை மணந்துகொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்கள் என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.

நாங்கள் (நாடு துறந்து) மதீனாவிற்கு வந்தபோது, ஒரு மாத காலம் எனக்குத் தொடர் காய்ச்சல் ஏற்பட்டு (என் தலை முடி உதிர்ந்து)விட்டது. பின்னர் என் தலைமுடி பிடரிவரை வளர்ந்தது. நான் என் தோழியர் சிலருடன் ஏற்றப் பலகையில் விளையாடிக்கொண்டிருந்தபோது, (என் தாயார்) உம்மு ரூமான் (ரலி) என்னிடம் வந்து என்னைச் சப்தமிட்டு அழைத்தார். நான் அவரிடம் சென்றேன். அவர் என்னை எதற்காக அழைத்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் எனது கையைப் பிடித்துக் கொண்டுவந்து, கதவுக்கருகில் என்னை நிறுத்தினார். (அவர் வேகமாக இழுத்துவந்ததால்) ஆஹ்… ஆஹ்… என்று மூச்சிறைத்தேன். மூச்சிறைப்பு நின்றதும் என்னை (எனது) அறைக்குள் அனுப்பினார். அங்குச் சில அன்ஸாரிப் பெண்கள் இருந்தனர். அவர்கள், “நன்மையுடனும் வளத்துடனும் வருக! (இறைவனின்) நற்பேறு உண்டாகட்டும்” என்று (வாழ்த்துக்) கூறினர். என் தாயார் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க, அவர்கள் எனது தலையைக் கழுவி என்னை அலங்கரித்துவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முற்பகல் நேரத்தில் என்னிடம் வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)