حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ كَانَ يَقُولُ:
بِئْسَ الطَّعَامُ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى إِلَيْهِ الْأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْمَسَاكِينُ فَمَنْ لَمْ يَأْتِ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ
و حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ قُلْتُ لِلزُّهْرِيِّ يَا أَبَا بَكْرٍ كَيْفَ هَذَا الْحَدِيثُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْأَغْنِيَاءِ فَضَحِكَ فَقَالَ لَيْسَ هُوَ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْأَغْنِيَاءِ قَالَ سُفْيَانُ وَكَانَ أَبِي غَنِيًّا فَأَفْزَعَنِي هَذَا الْحَدِيثُ حِينَ سَمِعْتُ بِهِ فَسَأَلْتُ عَنْهُ الزُّهْرِيَّ فَقَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ مَالِكٍ و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ عَنْ عَبْدِ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ح وَعَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ نَحْوَ حَدِيثِ مَالِكٍ و حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ نَحْوَ ذَلِكَ
ஏழைகளை விடுத்து, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் மணவிருந்து உணவே, கெட்ட உணவாகும். (அழைப்பை ஏற்றபின்) விருந்துக்குச் செல்லாதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
குறிப்பு :
ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) கூறியதாவது:
நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் “அபூபக்ரு அவர்களே! செல்வந்தர்கள் (அழைக்கப்படும்) உணவே உணவுகளில் தீயதாகும் எனும் இந்த ஹதீஸ் எப்படி (சரிதானா)?” என்று கேட்டேன். அதைக் கேட்டு அவர்கள் சிரித்துவிட்டு,“அந்த ஹதீஸ், ‘செல்வந்தர்களின் உணவே உணவுகளில் மிகத் தீயதாகும்’ என்பதாக இல்லை” என்றார்கள்.
என் தந்தையும் செல்வந்தராயிருந்ததால் அந்த ஹதீஸைக் கேட்டு நான் பதற்றமடைந்திருந்தேன். எனவே, ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் அந்த ஹதீஸைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் அப்துர் ரஹ்மான் அல்அஃரஜ் (ரஹ்) தம்மிடம் கூறினார்கள் என மேற்கண்ட அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் ஹதீஸில் உள்ளதைப் போன்றே (அதாவது எழைகளை விடுத்து, செல்வர்கள் மட்டுமே அழைக்கப்படும் மணவிருந்து உணவுதான் கெட்ட உணவாகும் என்று) அறிவித்தார்கள்.