و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرٍ يُحَدِّثُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي الدَّرْدَاءِ:
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ أَتَى بِامْرَأَةٍ مُجِحٍّ عَلَى بَابِ فُسْطَاطٍ فَقَالَ لَعَلَّهُ يُرِيدُ أَنْ يُلِمَّ بِهَا فَقَالُوا نَعَمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ هَمَمْتُ أَنْ أَلْعَنَهُ لَعْنًا يَدْخُلُ مَعَهُ قَبْرَهُ كَيْفَ يُوَرِّثُهُ وَهُوَ لَا يَحِلُّ لَهُ كَيْفَ يَسْتَخْدِمُهُ وَهُوَ لَا يَحِلُّ لَهُ
و حَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو دَاوُدَ جَمِيعًا عَنْ شُعْبَةَ فِي هَذَا الْإِسْنَادِ
ஒரு கூடாரத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்த, மகப்பேறு காலத்தை நெருங்கிய ஒரு பெண் கைதியைக் கடந்து நபி (ஸல்) சென்றார்கள். அப்போது நபி (ஸல்), “அவ(ளைச் சிறைப்பிடித்தவ)ர் அவளுடன் உறவுகொள்ள விரும்பக் கூடும்!” என்றார்கள். அதற்கு மக்கள், “ஆம்” என்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அவரது சவக்குழிக்குள்ளும் நுழையக் கூடிய கடுமையான சாபமாக நான் அவரைச் சபிக்க நினைத்தேன். (ஏனெனில்) அவர் தமக்கு அனுமதிக்கப்படாத ஒருவனை எவ்வாறு தம் வாரிசாக ஆக்கிக்கொள்ள முடியும்? அவர் தமக்கு அனுமதிக்கப்படாத ஒருவனை எப்படித் தம்முடைய ஊழியனாக்கிக் கொள்ள முடியும்?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பாளர் : அபுத்தர்தா (ரலி)