حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ وَأَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الشِّغَارِ
زَادَ ابْنُ نُمَيْرٍ وَالشِّغَارُ أَنْ يَقُولَ الرَّجُلُ لِلرَّجُلِ زَوِّجْنِي ابْنَتَكَ وَأُزَوِّجُكَ ابْنَتِي أَوْ زَوِّجْنِي أُخْتَكَ وَأُزَوِّجُكَ أُخْتِي و حَدَّثَنَاه أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ عُبَيْدِ اللَّهِ وَهُوَ ابْنُ عُمَرَ بِهَذَا الْإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ زِيَادَةَ ابْنِ نُمَيْرٍ
மஹ்ரின்றி, பெண் கொடுத்துப் பெண் எடுக்கும் (ஷிஃகார் முறை) திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
குறிப்பு :
அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஒருவர் மற்றொருவரிடம், ‘நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும்’ என்றோ, ‘நான் என் சகோதரியை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் சகோதரியை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும்’ என்றோ (நிபந்தனையிட்டுக்) கூறுவதே ஷிஃகார் ஆகும்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அபூகுரைப் (ரஹ்) வழி அறிவிப்பில் அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அதிகப்படியான தகவல் இடம்பெறவில்லை.