அத்தியாயம்: 17, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2635

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏أَنَّهَا سَمِعَتْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏تَقُولُ ‏ ‏وَهِيَ تَذْكُرُ الَّذِي يُحَرِّمُ مِنْ الرَّضَاعَةِ قَالَتْ ‏ ‏عَمْرَةُ: ‏

‏فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏نَزَلَ فِي الْقُرْآنِ عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ ثُمَّ نَزَلَ أَيْضًا خَمْسٌ مَعْلُومَاتٌ ‏


و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يَحْيَى بْنَ سَعِيدٍ ‏ ‏قَالَ أَخْبَرَتْنِي ‏ ‏عَمْرَةُ ‏ ‏أَنَّهَا سَمِعَتْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏تَقُولُ ‏ ‏بِمِثْلِهِ

எத்தனை முறை பால் குடித்தால் பால்குடி உறவு உண்டாகும்? என்பதைப் பற்றி ஆயிஷா (ரலி) விளக்கும்போது, “ஐயத்திற்கு இடமில்லாத பத்து தடவைகள் (பெண்ணின் மார்பிலிருந்து) பால் அருந்தினால்தான் (பால்குடி உறவு உண்டாகும்) என்ற சட்டம் குர்ஆனில் இடம்பெற்றிருந்தது. பின்னர், ‘ஐயமின்றி ஐந்து தடவைகள்’ என்ற சட்டம் அருளப்பெற்றது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அம்ரா பின்த்தி அப்திர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 17, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2634

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ: ‏

‏أَنَّهَا قَالَتْ ‏ ‏كَانَ فِيمَا أُنْزِلَ مِنْ الْقُرْآنِ عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ ثُمَّ نُسِخْنَ بِخَمْسٍ مَعْلُومَاتٍ فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُنَّ فِيمَا يُقْرَأُ مِنْ الْقُرْآنِ

“ஐயத்திற்கு இடமில்லாத பத்துத் தடவைகள் (பெண்ணின் மார்பிலிருந்து) பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்” என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, ‘ஐயமில்லாத ஐந்து தடவைகள்’ என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பை வலுப்படுத்தக் கூடிய வேறு சான்றுகள் ஏதுமில்லை.