அத்தியாயம்: 2, பாடம்: 15, ஹதீஸ் எண்: 376

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو نُعَيْمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْمُتَوَكِّلِ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏حَدَّثَهُ ‏:‏

أَنَّهُ بَاتَ عِنْدَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ لَيْلَةٍ فَقَامَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ آخِرِ اللَّيْلِ فَخَرَجَ فَنَظَرَ فِي السَّمَاءِ ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ فِي ‏ ‏آلِ ‏ ‏عِمْرَانَ ‏[إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ ‏ ‏حَتَّى بَلَغَ ‏ ‏فَقِنَا عَذَابَ النَّارِ] ‏‏ثُمَّ رَجَعَ إِلَى الْبَيْتِ فَتَسَوَّكَ وَتَوَضَّأَ ثُمَّ قَامَ فَصَلَّى ثُمَّ اضْطَجَعَ ثُمَّ قَامَ فَخَرَجَ فَنَظَرَ إِلَى السَّمَاءِ فَتَلَا هَذِهِ الْآيَةَ ثُمَّ رَجَعَ فَتَسَوَّكَ فَتَوَضَّأَ ثُمَّ قَامَ فَصَلَّى ‏

நான் (என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களில் இல்லத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். இரவின் இறுதிப் பகுதியில் நபி (ஸல்) எழுந்து வெளியே சென்று வானத்தைப் பார்த்தார்கள்.

பிறகு, “திண்ணமாக வானங்கள், பூமியின் படைப்பிலும் இரவு-பகல் மாறி மாறி வருவதிலும் …” என்று தொடங்கி “நரக வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாயாக!” என்ற ஆலு இம்ரான் (3ஆவது)அத்தியாயத்தின் (190,191) வசனங்களை ஓதினார்கள். பின்னர் வீட்டிற்குத் திரும்பி வந்து பல்துலக்கி, உளூச் செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள். பின்னர் சாய்ந்து படுத்துக் கொண்டார்கள். பிறகு எழுந்து (வீட்டிற்கு) வெளியே சென்று வானத்தைப் பார்த்தபடி அதே (3:190,191) வசனங்களை ஓதினார்கள். பிறகு திரும்பி வந்து பல் துலக்கி, உளூச் செய்தார்கள். பின்னர் நின்று தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 15, ஹதீஸ் எண்: 375

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏وَحُصَيْنٌ ‏ ‏وَالْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏إِذَا قَامَ مِنْ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கும் குச்சியைத் தம் வாயில் தேய்த்து (சுத்தம் செய்து) கொள்வார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 15, ஹதீஸ் எண்: 374

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ :‏ ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَامَ لِيَتَهَجَّدَ ‏ ‏يَشُوصُ ‏ ‏فَاهُ بِالسِّوَاكِ ‏


‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَامَ مِنْ اللَّيْلِ بِمِثْلِهِ وَلَمْ يَقُولُوا لِيَتَهَجَّدَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பின்னிரவு) தஹஜ்ஜுதுத் தொழுகைக்காக எழுந்ததும் பல் துலக்கும் குச்சியால் தமது வாயைத் தேய்த்து (சுத்தம் செய்து) கொள்வார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி)


குறிப்பு:

அல்-அஃமஷ் (ரஹ்) வழி அறிவிப்பில், “தஹஜ்ஜுது (பின்னிரவுத்) தொழுகைக்காக” என்று குறிப்பாகச் சொல்லாமல், “இரவில் எழுந்தால் …” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 15, ஹதீஸ் எண்: 373

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏غَيْلَانَ وَهُوَ ابْنُ جَرِيرٍ الْمَعْوَلِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ ‏:‏

دَخَلْتُ عَلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَطَرَفُ السِّوَاكِ عَلَى لِسَانِهِ ‏

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது பல் துலக்கும் குச்சியின் முனை அவர்களின் வாயில் இருந்தது.

அறிவிப்பாளர் : அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 15, ஹதீஸ் எண்: 372

و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏:‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا دَخَلَ بَيْتَهُ بَدَأَ بِالسِّوَاكِ

நபி (ஸல்) வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் பல் துலக்குவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 15, ஹதீஸ் எண்: 371

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏ ‏

سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قُلْتُ ‏ ‏بِأَيِّ شَيْءٍ كَانَ يَبْدَأُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا دَخَلَ بَيْتَهُ قَالَتْ بِالسِّوَاكِ ‏

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) வீட்டிற்குள் நுழைந்தால் அவர்கள் செய்யத் தொடங்கும் முதற் செயல் எது?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி), “பல் துலக்குவது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஷுரைஹ் (ரஹ்)

அத்தியாயம்: 2, பாடம்: 15, ஹதீஸ் எண்: 370

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏:‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى الْمُؤْمِنِينَ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏زُهَيْرٍ ‏ ‏عَلَى أُمَّتِي ‏ ‏لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ ‏

“இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிரமமாகி விடும் என்று நான் அஞ்சாமலிருந்தால் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குமாறு அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ஸுஹைர் (ரஹ்) வழி அறிவிப்பு, “இறைநம்பிக்கையாளர்களுக்கு …” என்றில்லாமல் “என் சமுதாயத்தாருக்கு …” என்று தொடங்குகிறது.