அத்தியாயம்: 2, பாடம்: 02, ஹதீஸ் எண்: 330

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ بْنُ هَمَّامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرُ بْنُ رَاشِدٍ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏أَخِي ‏ ‏وَهْبِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏
‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تُقْبَلُ صَلَاةُ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ ‏

“உங்களில் ஒருவருக்குச் சிறு துடக்கு (காற்றுப் பிரிதல்) ஏற்பட்டு விட்டால், அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து கொள்ளாதவரை அவரது தொழுகை ஏற்கப்படாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு:

“அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறித்த ஹதீஸ்களுள் மேற்காண்பதும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) கூறினார்.

அத்தியாயம்: 2, பாடம்: 02, ஹதீஸ் எண்: 329

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِسَعِيدٍ ‏ ‏قَالُوا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكِ بْنِ حَرْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مُصْعَبِ بْنِ سَعْدٍ ‏ ‏قَالَ ‏
‏دَخَلَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏عَلَى ‏ ‏ابْنِ عَامِرٍ ‏ ‏يَعُودُهُ وَهُوَ مَرِيضٌ فَقَالَ أَلَا تَدْعُو اللَّهَ لِي يَا ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏قَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ ‏ ‏غُلُولٍ ‏
‏وَكُنْتَ عَلَى ‏ ‏الْبَصْرَةِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏ح ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏إِسْرَائِيلَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكِ بْنِ حَرْبٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏

நோயுற்றிருந்த இப்னு ஆமிர் (ரஹ்) அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) சென்றபோது இப்னு ஆமிர் (ரஹ்), “இப்னு உமர் அவர்களே! எனக்காகத் தாங்கள் அல்லாஹ்விடம் (தொழுது) பிரார்த்திக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி), “அங்கத் தூய்மை (உளூ) செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது; மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்தத் தானதர்மமும் ஏற்கப்படாது” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். அப்போது நீங்கள் பஸ்ராவி(ன் ஆட்சிப் பொறுப்பி)ல் இருந்தீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி).