அத்தியாயம்: 2, பாடம்: 03, ஹதீஸ் எண்: 332

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ ‏ ‏عَنْ ‏ ‏حُمْرَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏عُثْمَانَ ‏ ‏أَنَّهُ رَأَى ‏ ‏عُثْمَانَ ‏:‏ ‏

دَعَا بِإِنَاءٍ فَأَفْرَغَ عَلَى كَفَّيْهِ ثَلَاثَ مِرَارٍ فَغَسَلَهُمَا ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الْإِنَاءِ فَمَضْمَضَ ‏ ‏وَاسْتَنْثَرَ ‏ ‏ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ‏

உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டு வரச் சொல்லி (ஆரம்பமாகத்) தம்முடைய முன் கைகளில் மூன்று முறை தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் பாத்திரத்தினுள் செலுத்தி (தண்ணீர் அள்ளி) வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். மேலும், இரு (கைகளையும்) முழங்கை மூட்டுவரை மூன்றுமுறை கழுவினார்கள். பிறகு தலையை (ஈரக் கையால் தடவி) மஸஹு செய்தார்கள். பிறகு தம்மிரு கால்களையும் மூன்று முறை கழுவினார்கள்.

பின்னர், “யார் எனது இந்த உளூவைப் போன்று உளூச் செய்து வேறு எந்த (கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ, அவர் செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள் என்று தெரிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக அன்னாரின் பணியாள் ஹும்ரான் (ரஹ்)

அத்தியாயம்: 2, பாடம்: 03, ஹதீஸ் எண்: 331

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ سَرْحٍ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏عَطَاءَ بْنَ يَزِيدَ اللَّيْثِيَّ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏حُمْرَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏عُثْمَانَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏عُثْمَانَ بْنَ عَفَّانَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏:‏ ‏

دَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ مَضْمَضَ ‏ ‏وَاسْتَنْثَرَ ‏ ‏ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى إِلَى ‏ ‏الْمِرْفَقِ ‏ ‏ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ ثُمَّ مَسَحَ رَأْسَهُ ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى إِلَى الْكَعْبَيْنِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ‏


قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَكَانَ عُلَمَاؤُنَا يَقُولُونَ هَذَا الْوُضُوءُ ‏ ‏أَسْبَغُ ‏ ‏مَا يَتَوَضَّأُ بِهِ أَحَدٌ لِلصَّلَاةِ ‏

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) உளூச் செய்வதற்காகத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி உளூச் செய்தார்கள். (முதலில்) தம்முடைய இரு முன்கைகளை மூன்று முறை கழுவினார்கள். பிறகு வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது வலக்கரத்தை முழங்கை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். அடுத்து, தமது இடக்கரத்தையும் அதைப் போன்றே (மூன்று முறை) கழுவினார்கள். பின்னர் தலையை (ஈரக்கையால் தடவி) மஸஹு செய்தார்கள். பிறகு தமது வலக்காலை கணுக்கால் வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு இடக்காலையும் அதைப் போன்றே (மூன்று முறை) கழுவினார்கள்.

பின்னர், “நான் செய்த இந்த உளூவைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உளூச் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன். மேலும், ‘யார் நான் செய்த இந்த உளூவைப் போன்று உளூச் செய்து, பின்னர் வேறு எந்த(க்கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் நின்று தொழுகிறாரோ அவர் செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)


குறிப்பு :

“இவ்வாறு உளூச் செய்வது தான் தொழுகைக்காக ஒருவர் உளூச் செய்யும் முறைகளிலேயே நிறைவானதாகும்” என்று தம் சமகால அறிஞர்கள் கூறியதாக அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் (ரஹ்) கூறுகின்றார்.