حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى بْنِ عُمَارَةَ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ الْأَنْصَارِيِّ وَكَانَتْ لَهُ صُحْبَةٌ قَالَ:
قِيلَ لَهُ تَوَضَّأْ لَنَا وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَا بِإِنَاءٍ فَأَكْفَأَ مِنْهَا عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا ثَلَاثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ وَاحِدَةٍ فَفَعَلَ ذَلِكَ ثَلَاثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَغَسَلَ يَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَمَسَحَ بِرَأْسِهِ فَأَقْبَلَ بِيَدَيْهِ وَأَدْبَرَ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ ثُمَّ قَالَ هَكَذَا كَانَ وُضُوءُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
و حَدَّثَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ عَنْ سُلَيْمَانَ هُوَ ابْنُ بِلَالٍ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ الْكَعْبَيْنِ و حَدَّثَنِي إِسْحَقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ حَدَّثَنَا مَعْنٌ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ مَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلَاثًا وَلَمْ يَقُلْ مِنْ كَفٍّ وَاحِدَةٍ وَزَادَ بَعْدَ قَوْلِهِ فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ ثُمَّ ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ ثُمَّ رَدَّهُمَا حَتَّى رَجَعَ إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ وَغَسَلَ رِجْلَيْهِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ حَدَّثَنَا بَهْزٌ حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى بِمِثْلِ إِسْنَادِهِمْ وَاقْتَصَّ الْحَدِيثَ وَقَالَ فِيهِ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ مِنْ ثَلَاثِ غَرَفَاتٍ وَقَالَ أَيْضًا فَمَسَحَ بِرَأْسِهِ فَأَقْبَلَ بِهِ وَأَدْبَرَ مَرَّةً وَاحِدَةً قَالَ بَهْزٌ أَمْلَى عَلَيَّ وُهَيْبٌ هَذَا الْحَدِيثَ و قَالَ وُهَيْبٌ أَمْلَى عَلَيَّ عَمْرُو بْنُ يَحْيَى هَذَا الْحَدِيثَ مَرَّتَيْنِ
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி), ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து சிறிதளவு நீரைத் தம்மிரு (முன்)கைகளில் ஊற்றி, கைகளை மூன்று முறை கழுவினார்கள். பிறகு (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்து ஒரு கையளவு நீர் அள்ளி வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சீந்தினார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பின்னர் (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்து நீர் எடுத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்னர் (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்து நீர் எடுத்து தம் முழங்கைகள்வரை இரு கைகளையும் இரண்டிரண்டு முறை கழுவினார்கள். பிறகு (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்தெடுத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவினார்கள். (அதாவது) தம் இரு கைகளையும் முன்னிலிருந்து பின்னே கொண்டு சென்றார்கள்; பின்னிலிருந்து முன்னே கொண்டு வந்தார்கள். பின்னர் இரு கால்களையும் கணுக்கால் வரை கழுவினார்கள். பிறகு, “இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது உளூ இருந்தது” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸைத் அல்-அன்ஸாரீ (ரலி)
குறிப்புகள் :
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உளூச் செய்ததைப் போன்று எங்களுக்கு நீங்கள் செய்து காட்டுங்கள்!” என்று அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டபோது மேற்கண்டவாறு செயல்முறை விளக்கம் செய்து காட்டியதாக அறிவிப்பாளர் யஹ்யா பின் உமாரா (ரஹ்) கூறுகின்றார்.
ஸுலைமான் பின் பிலால் (ரஹ்) வழி அறிவிப்பில், “இரு கணுக்கால்வரை” என்பது விடுபட்டுள்ளது.
அம்ரு பின் யஹ்யா (ரஹ்) வழி அறிவிப்பில், “ஒரு கையளவு நீரினால்” என்பது இடம்பெறாமல், “மூன்று முறை வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சீந்தினார்கள்” என்று இடம் பெற்றுள்ளது. ஈரக்கைகளால் தடவுதல் எனும் மஸஹுச் செய்வதைக் குறிப்பிடும்போது, “முன்னிருந்து பின்னே கொண்டு சென்றார்கள். பின்னிருந்து முன்னே கொண்டு வந்தார்கள்” எனும் சொற்றொடருக்குப் பிறகு, “தம் இரு கைகளையும் முன் தலையில் வைத்து அப்படியே அவற்றைப் பிடரிவரை கொண்டு சென்றார்கள். பிறகு ஆரம்பித்த இடத்திற்கே திரும்பக் கொண்டு வந்தார்கள். பின்னர் இரு கால்களையும் கழுவினார்கள்” என்று கூடுதல் விளக்கம் இடம் பெற்றுள்ளது.
உஹைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “மூன்று முறை கையால் நீர் அள்ளி வாயைக் கொப்புளித்தார்கள்; மூக்கிற்கு நீர் செலுத்தினார்கள்” என இடம் பெற்றுள்ளது. மேலும், “மஸஹுச் செய்யும்போது ஒரேயொரு முறை முன்னிருந்து பின்னே, பின்னிருந்து முன்னே (ஈரக்கையைக்) கொண்டு சென்றார்கள்” எனவும் இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸைத் தமக்கு அம்ரு பின் யஹ்யா (ரஹ்) இரு தடவைகள் சொல்லிக் கொடுத்ததாக அறிவிப்பாளர்களுள் ஒருவரான உஹைப் (ரஹ்) குறிப்பிடுகின்றார். இதை உஹைப் (ரஹ்) தமக்கு அறிவித்ததாக பஹ்ஸு (ரஹ்) கூறுகின்றார்.