அத்தியாயம்: 22, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2974

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ أَبِي تَمِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الدِّينَارُ بِالدِّينَارِ لَا ‏ ‏فَضْلَ ‏ ‏بَيْنَهُمَا وَالدِّرْهَمُ بِالدِّرْهَمِ لَا ‏ ‏فَضْلَ ‏ ‏بَيْنَهُمَا ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مَالِكَ بْنَ أَنَسٍ ‏ ‏يَقُولُ حَدَّثَنِي ‏ ‏مُوسَى بْنُ أَبِي تَمِيمٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

“தங்க நாணயத்தைத் தங்க நாணயத்திற்கு, அவற்றுக்கிடையே ஏற்றத்தாழ்வின்றி விற்கலாம்; வெள்ளி நாணயத்தை வெள்ளி நாணயத்திற்கு, அவற்றுக்கிடையே ஏற்றத்தாழ்வின்றி விற்கலாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

நாணயத்தை நாணயத்திற்கு ‘விற்பது’ என்பதை, சில்லரையாக ‘மாற்றிக்கொள்வது’ எனப் பொருள் கொள்ள வேண்டும். 100 ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்து, 10 ரூபாய் நோட்டில் 10ஐப் பெற்றுக்கொள்வது என்பது, 100 ரூபாயை ‘விற்பது’ ஆகாது.

சில்லரை தட்டுப்பாடு ஏற்படும்போது சிலர், 100 ரூபாய்க்கு, சில்லரையாக 90 ரூபாய் மட்டும் கொடுப்பார்கள். இதுவே பணத்தைப் பணத்திற்கு விற்கும் வட்டியாகும்.

அத்தியாயம்: 22, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2973

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَوَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي نُعْمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الذَّهَبُ بِالذَّهَبِ وَزْنًا بِوَزْنٍ مِثْلًا بِمِثْلٍ وَالْفِضَّةُ بِالْفِضَّةِ وَزْنًا بِوَزْنٍ مِثْلًا بِمِثْلٍ فَمَنْ زَادَ أَوْ اسْتَزَادَ فَهُوَ رِبًا

“தங்கத்தைத் தங்கத்திற்குச் சரிக்குச் சரியான எடைக்கு (விற்கலாம்). வெள்ளியை வெள்ளிக்குச் சரிக்குச் சரியான எடைக்கு (விற்கலாம்). ஒருவர் கூடுதலாகக் கொடுத்தாலோ, கூடுதலாகக் கேட்டாலோ அது வட்டியாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2972

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏وَوَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏التَّمْرُ بِالتَّمْرِ وَالْحِنْطَةُ بِالْحِنْطَةِ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ وَالْمِلْحُ بِالْمِلْحِ مِثْلًا بِمِثْلٍ يَدًا بِيَدٍ فَمَنْ زَادَ أَوْ اسْتَزَادَ فَقَدْ ‏ ‏أَرْبَى ‏ ‏إِلَّا مَا اخْتَلَفَتْ أَلْوَانُهُ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُحَارِبِيُّ ‏ ‏عَنْ ‏ ‏فُضَيْلِ بْنِ غَزْوَانَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَذْكُرْ يَدًا بِيَدٍ

“பேரீச்சம் பழத்தைப் பேரீச்சம் பழத்திற்கும், கோதுமையைக் கோதுமைக்கும், பார்லியை பார்லிக்கும், உப்பை உப்புக்கும் சரிக்குச் சரியாக உடனுக்குடன் விற்கலாம். அவற்றின் இனங்கள் வேறுபட்டிருந்தால் தவிர, கூடுதலாகக் கொடுப்பவரோ கூடுதலாகக் கேட்பவரோ வட்டி வாங்கிவிட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அல் முஹாரிபீ (ரஹ்) வழி அறிவிப்பில், ‘உடனுக்குடன்’ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 22, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2971

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ مُسْلِمٍ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْمُتَوَكِّلِ النَّاجِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الذَّهَبُ بِالذَّهَبِ وَالْفِضَّةُ بِالْفِضَّةِ ‏ ‏وَالْبُرُّ ‏ ‏بِالْبُرِّ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ وَالتَّمْرُ بِالتَّمْرِ وَالْمِلْحُ بِالْمِلْحِ مِثْلًا بِمِثْلٍ يَدًا بِيَدٍ فَمَنْ زَادَ أَوْ اسْتَزَادَ فَقَدْ ‏ ‏أَرْبَى ‏ ‏الْآخِذُ وَالْمُعْطِي فِيهِ سَوَاءٌ ‏


حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُلَيْمَانُ الرَّبَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْمُتَوَكِّلِ النَّاجِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الذَّهَبُ بِالذَّهَبِ مِثْلًا بِمِثْلٍ فَذَكَرَ ‏ ‏بِمِثْلِهِ

“தங்கத்தைத் தங்கத்திற்கும், வெள்ளியை வெள்ளிக்கும், கோதுமையைக் கோதுமைக்கும், பார்லியை பார்லிக்கும், பேரீச்சம் பழத்தைப் பேரீச்சம் பழத்திற்கும், உப்பை உப்புக்கும் சரிக்குச் சரியாக உடனுக்குடன் விற்கலாம். கூடுதலாகக் கொடுப்பவரோ கூடுதலாகக் கேட்பவரோ வட்டியில் வீழ்ந்தவர் ஆவார். இ(ந்தப் பாவத்)தில் வாங்கியவரும் கொடுத்தவரும் சமமானவர்கள் ஆவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

ஸுலைமான் அர்ரபயீ (ரஹ்) வழி அறிவிப்பு, “தங்கத்தைத் தங்கத்திற்குச் சரிக்குச் சரியாக விற்கலாம்…” என ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 22, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2970

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ الْحَذَّاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَشْعَثِ ‏ ‏عَنْ ‏ ‏عُبَادَةَ بْنِ الصَّامِتِ ‏ ‏قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الذَّهَبُ بِالذَّهَبِ وَالْفِضَّةُ بِالْفِضَّةِ وَالْبُرُّ بِالْبُرِّ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ وَالتَّمْرُ بِالتَّمْرِ وَالْمِلْحُ بِالْمِلْحِ مِثْلًا بِمِثْلٍ سَوَاءً بِسَوَاءٍ يَدًا بِيَدٍ فَإِذَا اخْتَلَفَتْ هَذِهِ الْأَصْنَافُ فَبِيعُوا كَيْفَ شِئْتُمْ إِذَا كَانَ يَدًا بِيَدٍ

“தங்கத்தைத் தங்கத்திற்கும், வெள்ளியை வெள்ளிக்கும், கோதுமையைக் கோதுமைக்கும், பார்லியை பார்லிக்கும், பேரீச்சம் பழத்தைப் பேரீச்சம் பழத்திற்கும், உப்பை உப்பிற்கும் சரிக்குச் சரியாக  உடனுக்குடன் விற்கலாம். இந்த இனங்கள் மாறுபட்டிருக்கும்போது உடனுக்குடன் மாற்றிக்கொண்டால் நீங்கள் விரும்பியபடி விற்றுக்கொள்ளலாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2969

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏قَالَ: ‏ ‏كُنْتُ ‏ ‏بِالشَّامِ ‏ ‏فِي حَلْقَةٍ فِيهَا ‏ ‏مُسْلِمُ بْنُ يَسَارٍ ‏ ‏فَجَاءَ ‏ ‏أَبُو الْأَشْعَثِ ‏ ‏قَالَ ‏ ‏قَالُوا ‏ ‏أَبُو الْأَشْعَثِ ‏ ‏أَبُو الْأَشْعَثِ ‏ ‏فَجَلَسَ فَقُلْتُ لَهُ حَدِّثْ أَخَانَا حَدِيثَ ‏ ‏عُبَادَةَ بْنِ الصَّامِتِ ‏ ‏قَالَ ‏ ‏نَعَمْ غَزَوْنَا غَزَاةً وَعَلَى النَّاسِ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏فَغَنِمْنَا غَنَائِمَ كَثِيرَةً فَكَانَ فِيمَا غَنِمْنَا آنِيَةٌ مِنْ فِضَّةٍ فَأَمَرَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏رَجُلًا أَنْ يَبِيعَهَا فِي ‏ ‏أَعْطِيَاتِ ‏ ‏النَّاسِ فَتَسَارَعَ النَّاسُ فِي ذَلِكَ فَبَلَغَ ‏ ‏عُبَادَةَ بْنَ الصَّامِتِ ‏ ‏فَقَامَ ‏ ‏فَقَالَ إِنِّي ‏
‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَنْهَى عَنْ بَيْعِ الذَّهَبِ بِالذَّهَبِ وَالْفِضَّةِ بِالْفِضَّةِ ‏ ‏وَالْبُرِّ ‏ ‏بِالْبُرِّ ‏ ‏وَالشَّعِيرِ بِالشَّعِيرِ وَالتَّمْرِ بِالتَّمْرِ وَالْمِلْحِ بِالْمِلْحِ إِلَّا سَوَاءً بِسَوَاءٍ ‏ ‏عَيْنًا بِعَيْنٍ ‏ ‏فَمَنْ زَادَ أَوْ ازْدَادَ فَقَدْ ‏ ‏أَرْبَى ‏ ‏فَرَدَّ النَّاسُ مَا أَخَذُوا ‏
‏فَبَلَغَ ذَلِكَ ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏فَقَامَ خَطِيبًا فَقَالَ أَلَا مَا بَالُ رِجَالٍ يَتَحَدَّثُونَ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحَادِيثَ قَدْ كُنَّا نَشْهَدُهُ وَنَصْحَبُهُ فَلَمْ نَسْمَعْهَا مِنْهُ فَقَامَ ‏ ‏عُبَادَةُ بْنُ الصَّامِتِ ‏ ‏فَأَعَادَ الْقِصَّةَ ثُمَّ قَالَ لَنُحَدِّثَنَّ بِمَا سَمِعْنَا مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَإِنْ كَرِهَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏أَوْ قَالَ وَإِنْ رَغِمَ ‏ ‏مَا أُبَالِي أَنْ لَا أَصْحَبَهُ فِي جُنْدِهِ لَيْلَةً سَوْدَاءَ


قَالَ ‏ ‏حَمَّادٌ ‏ ‏هَذَا أَوْ نَحْوَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْوَهَّابِ الثَّقَفِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

நான் ஷாம் (சிரியா) நாட்டில் ஓர் அவையில் இருந்தேன். அங்கு முஸ்லிம் பின் யஸார் (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபுல் அஷ்அஸ் (ரஹ்) வந்தார்கள். மக்கள், “அபுல் அஷ்அஸ்! அபுல் அஷ்அஸ் (வந்துவிட்டார்)!” என்றனர். அவர்கள் (வந்து) அமர்ந்ததும் அவர்களிடம் நான், “எங்கள் சகோதர(ர் முஸ்லிம் பின் யஸா)ருக்கு உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அறிவித்த ஹதீஸைச் சொல்லுங்கள்” என்றேன். அதற்கு அவர்கள், “சரி!” எனக் கூறிவிட்டுப் பின்வருமாறு அறிவித்தார்கள்:

நாங்கள் ஒரு போருக்காகச் சென்றிருந்தோம். (அப்போரில்) மக்களுக்கு முஆவியா (ரலி) தளபதியாக இருந்தார்கள். போரின் முடிவில் நாங்கள் ஏராளமான போர்ச் செல்வங்களைப் பெற்றோம். நாங்கள் பெற்ற போர்ச் செல்வத்தில் ஒரு வெள்ளிப் பாத்திரமும் இருந்தது. மக்கள் போர்ச் செல்வங்களைப் பெற்றுக்கொள்ள வரும் நாள்வரை (தவணை சொல்லி, வெள்ளி நாணயங்களுக்கு) அ(ந்தப் பாத்திரத்)தை விற்று விடுமாறு முஆவியா (ரலி) கூறினார்கள். மக்கள் அதைப் பெறுவதற்காக விரைந்தனர்.

இச்செய்தி உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள் எழுந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘தங்கத்தைத் தங்கத்திற்கு விற்பதையும் வெள்ளியை வெள்ளிக்கும், கோதுமையைக் கோதுமைக்கும், பார்லியை பார்லிக்கும், பேரீச்சம் பழத்தைப் பேரீச்சம் பழத்திற்கும், உப்பை உப்பிற்கும் விற்பதைத் தடை செய்தார்கள்; உடனுக்குடன் சரிக்குச் சரியாக மாற்றிக்கொண்டால் தவிர. யார் அதைவிடக் கூடுதலாகக் கொடுக்கிறாரோ அல்லது கூடுதலாகக் கேட்கிறாரோ அவர் வட்டியில் வீழ்ந்தவர் ஆவார்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

உடனே மக்கள் தாம் பெற்றதை திருப்பிக் கொடுத்துவிட்டனர். இச்செய்தி முஆவியா (ரலி) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் (மக்களிடையே) நின்று உரையாற்றினார்கள். அப்போது, “சிலருக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என அவர்கள் பல ஹதீஸ்களை அறிவிக்கின்றனர். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களுடன் அவர்களது தோழமையில் இருந்திருக்கிறோம். ஆனால், இத்தகைய ஹதீஸ்களை அவர்களிடமிருந்து நாங்கள் கேட்டதில்லை” என்றார்கள்.

உடனே உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) எழுந்து, மீண்டும் அந்த ஹதீஸைக் கூறினார்கள். பிறகு “முஆவியா வெறுத்தாலும் முரண்பட்டாலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதை நிச்சயமாக நாம் அறிவிப்போம். இருள் கப்பிய ஓர் இரவில் முஆவியா அவர்களது படையில் அவர்களுடன் நான் பங்கு பெறாமல் போவது பற்றி எனக்குக் கவலையில்ல” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) வழியாக அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்)


குறிப்பு :

“இவ்வாறே / இதைப் போன்றே அய்யூப் (ரஹ்) அறிவித்தார்கள்” என இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) கூறினார்.

அத்தியாயம்: 22, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2968

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَوْسِ بْنِ الْحَدَثَانِ ‏ ‏أَنَّهُ قَالَ: ‏‏
 ‏أَقْبَلْتُ أَقُولُ مَنْ ‏ ‏يَصْطَرِفُ ‏ ‏الدَّرَاهِمَ فَقَالَ ‏ ‏طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ ‏ ‏وَهُوَ عِنْدَ ‏ ‏عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏أَرِنَا ذَهَبَكَ ثُمَّ ائْتِنَا إِذَا جَاءَ خَادِمُنَا نُعْطِكَ ‏ ‏وَرِقَكَ ‏ ‏فَقَالَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏كَلَّا وَاللَّهِ لَتُعْطِيَنَّهُ ‏ ‏وَرِقَهُ ‏ ‏أَوْ لَتَرُدَّنَّ إِلَيْهِ ذَهَبَهُ ‏
‏فَإِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الْوَرِقُ ‏ ‏بِالذَّهَبِ رِبًا إِلَّا ‏ ‏هَاءَ وَهَاءَ ‏ ‏وَالْبُرُّ ‏ ‏بِالْبُرِّ رِبًا إِلَّا ‏ ‏هَاءَ وَهَاءَ ‏ ‏وَالشَّعِيرُ بِالشَّعِيرِ رِبًا إِلَّا ‏ ‏هَاءَ وَهَاءَ ‏ ‏وَالتَّمْرُ بِالتَّمْرِ رِبًا إِلَّا ‏ ‏هَاءَ وَهَاءَ ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

நான் “வெள்ளி நாணயமாக (என்னிடமுள்ள தங்கத்தை) மாற்றித் தருபவர் யார்?” என்று கேட்டபடி வந்தேன். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்கு அருகிலிருந்த தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி), “உமது தங்கத்தைக் கொண்டுவந்து காட்டுவீராக! எம் ஊழியர் (வெளியூரிலிருந்து) வந்ததும் அதற்குரிய(நாணயத்)தைத் தருவோம்” என்று கூறினார்கள்.

அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி), “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு வெள்ளி நாணயத்தை(உடனடியாக)க் கொடுத்துவிடு. அல்லது அவரது தங்கத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘உடனுக்குடன் அல்லாமல் (காலந் தாழ்த்தி) தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (காலந் தாழ்த்தி) கோதுமைக்குக் கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (காலந் தாழ்த்தி) பார்லிக்கு பார்லியை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (காலந் தாழ்த்தி) பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்’ என்று கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உமர் (ரலி) வழியாக மாலிக் பின் அவ்ஸு பின் அல்ஹதஸான் (ரஹ்)