அத்தியாயம்: 22, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2981

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمَعَافِرِيِّ ‏ ‏وَعَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏وَغَيْرِهِمَا ‏ ‏أَنَّ ‏ ‏عَامِرَ بْنَ يَحْيَى الْمَعَافِرِيَّ ‏ ‏أَخْبَرَهُمْ عَنْ ‏ ‏حَنَشٍ ‏ ‏أَنَّهُ قَالَ: ‏‏
كُنَّا مَعَ ‏ ‏فَضَالَةَ بْنِ عُبَيْدٍ ‏ ‏فِي غَزْوَةٍ ‏ ‏فَطَارَتْ ‏ ‏لِي وَلِأَصْحَابِي قِلَادَةٌ فِيهَا ذَهَبٌ ‏ ‏وَوَرِقٌ ‏ ‏وَجَوْهَرٌ فَأَرَدْتُ أَنْ أَشْتَرِيَهَا فَسَأَلْتُ ‏ ‏فَضَالَةَ بْنَ عُبَيْدٍ ‏ ‏فَقَالَ انْزِعْ ذَهَبَهَا فَاجْعَلْهُ فِي كِفَّةٍ وَاجْعَلْ ذَهَبَكَ فِي كِفَّةٍ ثُمَّ لَا تَأْخُذَنَّ إِلَّا مِثْلًا بِمِثْلٍ ‏ ‏فَإِنِّي ‏
‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَأْخُذَنَّ إِلَّا مِثْلًا بِمِثْلٍ

நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ஒரு போரில் இருந்தோம். எனக்கும் என் தோழர்களுக்கும் (போர்ச் செல்வத்தின் பங்காக) தங்க மாலை ஒன்று கிடைத்தது. அதில் பொன், வெள்ளி, மாணிக்கக் கற்கள் ஆகியன பதித்திருந்தன. அதை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். எனவே, ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன்.

அப்போது அவர்கள், மாலையிலுள்ள தங்கத்தைத் தனியே எடுத்து, அதைத் தராசின் ஒரு தட்டிலும், உனது தங்கத்தை மற்றொரு தட்டிலும் வைப்பீராக. பிறகு சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்) நீ (தங்கத்தைத் தங்கத்திற்கு) பெற்றுக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில் தங்கத்தைத் தங்கத்திற்கும் வெள்ளியை வெள்ளிக்கும்) பெற வேண்டாம்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஃபளாலா பின் உபைத் (ரலி) வழியாக ஹனஷ் பின் அப்தில்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 22, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2980

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْجُلَاحِ أَبِي كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏حَنَشٌ الصَّنْعَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏فَضَالَةَ بْنِ عُبَيْدٍ ‏ ‏قَالَ: ‏
كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏نُبَايِعُ ‏ ‏الْيَهُودَ ‏ ‏الْوُقِيَّةَ ‏ ‏الذَّهَبَ بِالدِّينَارَيْنِ وَالثَّلَاثَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلَّا وَزْنًا بِوَزْنٍ

நாங்கள் கைபர் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது, (பொன்னும் மணியும் பதித்த) தங்க ஊக்கியாவை இரண்டு மூன்று தீனார்களுக்கு யூதர்களிடம் விற்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எடைக்கு எடை சரியாகவே தவிர (வேறு முறையில்) தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2979

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي شُجَاعٍ سَعِيدِ بْنِ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ ‏ ‏عَنْ ‏ ‏حَنَشٍ الصَّنْعَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏فَضَالَةَ بْنِ عُبَيْدٍ ‏ ‏قَالَ: ‏
اشْتَرَيْتُ يَوْمَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏قِلَادَةً بِاثْنَيْ عَشَرَ دِينَارًا فِيهَا ذَهَبٌ وَخَرَزٌ فَفَصَّلْتُهَا فَوَجَدْتُ فِيهَا أَكْثَرَ مِنْ اثْنَيْ عَشَرَ دِينَارًا فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏لَا تُبَاعُ حَتَّى تُفَصَّلَ ‏


حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ مُبَارَكٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ يَزِيدَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

நான் கைபர் போர் நாளில் பன்னிரண்டு தீனாருக்கு ஒரு கழுத்து மாலையை வாங்கினேன். அதில் பொன்னும் மணிகளும் (பதித்து) இருந்தன. அவற்றை நான் தனித் தனியே பிரித்தெடுத்தேன். அவை பன்னிரண்டு தீனாரைவிடக் கூடுதல் மதிப்புடையவையாக இருப்பதைக் கண்டேன். ஆகவே, இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது, தனியே பிரித்தெடுக்காமல் (பொன்னும் மணியும் பதித்த ஆபரணங்கள்) விற்கப்படக் கூடாது” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2978

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو هَانِئٍ الْخَوْلَانِيُّ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عُلَيَّ بْنَ رَبَاحٍ اللَّخْمِيَّ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏فَضَالَةَ بْنَ عُبَيْدٍ الْأَنْصَارِيَّ ‏ ‏يَقُولُ: ‏
أُتِيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ ‏ ‏بِخَيْبَرَ ‏ ‏بِقِلَادَةٍ فِيهَا خَرَزٌ وَذَهَبٌ وَهِيَ مِنْ الْمَغَانِمِ تُبَاعُ فَأَمَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالذَّهَبِ الَّذِي فِي الْقِلَادَةِ فَنُزِعَ وَحْدَهُ ثُمَّ قَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الذَّهَبُ بِالذَّهَبِ وَزْنًا بِوَزْنٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபரில் இருந்தபோது, அவர்களிடம் கழுத்து மாலை ஒன்று கொண்டுவரப்பட்டது. அதில் பொன்னும் மணியும் (பதித்து) இருந்தன. அது போர்ச் செல்வங்களுடன் விற்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்த மாலையில் இருந்த தங்கத்தைத் தனியே கழற்றி எடுத்துவிடுமாறு உத்தரவிட்டார்கள். பிறகு மக்களிடம் “எடைக்கு எடை தங்கத்தைத் தங்கத்திற்கு விற்கலாம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஃபளாலா பின் உபைத் அல்அன்ஸாரீ (ரலி)