அத்தியாயம்: 22, பாடம்: 20, ஹதீஸ் எண்: 2996

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ‏ ‏قَالَ سَمِعْتُهُ يَقُولُ: ‏
سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏وَأَهْوَى ‏ ‏النُّعْمَانُ ‏ ‏بِإِصْبَعَيْهِ إِلَى أُذُنَيْهِ ‏ ‏إِنَّ الْحَلَالَ بَيِّنٌ وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لَا يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنْ النَّاسِ فَمَنْ اتَّقَى الشُّبُهَاتِ ‏ ‏اسْتَبْرَأَ ‏ ‏لِدِينِهِ ‏ ‏وَعِرْضِهِ ‏ ‏وَمَنْ وَقَعَ فِي ‏ ‏الشُّبُهَاتِ ‏ ‏وَقَعَ فِي الْحَرَامِ كَالرَّاعِي ‏ ‏يَرْعَى حَوْلَ ‏ ‏الْحِمَى ‏ ‏يُوشِكُ أَنْ ‏ ‏يَرْتَعَ ‏ ‏فِيهِ أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ ‏ ‏حِمًى ‏ ‏أَلَا وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمُهُ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ ‏ ‏مُضْغَةً ‏ ‏إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ


و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفٍ ‏ ‏وَأَبِي فَرْوَةَ الْهَمْدَانِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَجْلَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعِيدٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ غَيْرَ أَنَّ حَدِيثَ ‏ ‏زَكَرِيَّاءَ ‏ ‏أَتَمُّ مِنْ حَدِيثِهِمْ وَأَكْثَرُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏خَالِدُ بْنُ يَزِيدَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرٍ الشَّعْبِيِّ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏نُعْمَانَ بْنَ بَشِيرِ بْنِ سَعْدٍ ‏ ‏صَاحِبَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ يَخْطُبُ النَّاسَ ‏ ‏بِحِمْصَ ‏ ‏وَهُوَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ فَذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏زَكَرِيَّاءَ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏إِلَى قَوْلِهِ يُوشِكُ أَنْ يَقَعَ فِيهِ

“கூடும் என்பவை தெளிவாக்கப்பட்டுள்ளன; கூடாதவையும் தெளிவாக்கப்பட்டுள்ளன; இவ்விரண்டிற்கும் இடையில் ஐயத்திற்குரியவையும் உள்ளன. மக்களில் பெரும்பாலோர் அவற்றை அறியமாட்டார்கள்.

எனவே, ஐயத்திற்குரியவற்றைத் தவிர்த்துக்கொள்பவர், தமது மார்க்கத்தையும் தமது மானத்தையும் காப்பாற்றிக்கொண்டவர் ஆவார். (மாறாக) ஐயத்திற்குரியவற்றில் விழுபவர், கூடாதவற்றில் நுழைந்துவிடுகின்றார். வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர், வேலிக்குள்ளேயே மேயவிட நேர்ந்துவிடும். அறிக! ஒவ்வொரு மன்னனுக்கும் எல்லை வரம்பு உண்டு. அல்லாஹ்வின் எல்லை வரம்பென்பது அவனால் தடை விதிக்கப்பெற்றவையாகும். அறிக! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீரடைந்துவிட்டால் உடல் முழுவதும் சீரடைந்துவிடும். அது சீரழிந்துவிட்டால் முழு உடலும் சீரழிந்துவிடும். அறிக! அதுவே இதயம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)


குறிப்பு :

இதை நுஅமான் (ரலி) அறிவிக்கும்போது தம்மிரு காதுகளை இரு விரல்களால் சைகை செய்து (இந்தக் காதுகளால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மேற்கண்டவாறு) கூறியதைக் கேட்டேன் என்றார்கள்.

நுஅமான் (ரலி) ஹிம்ஸ் (சிரியா) நகரில் மக்களுக்கு உரையாற்றும்போது, “கூடும் என்பவை தெளிவாக்கப்பட்டுள்ளன; கூடாதவையும் தெளிவாக்கப்பட்டுள்ளன …” என்று தொடங்கும் மேற்கண்ட ஹதீஸை அறிவித்தார்கள். அந்த அறிவிப்பு, “ … வேலிக்கு உள்ளேயே மேயவிட நேர்ந்துவிடும்” என்பதோடு முடிவடைந்துவிடுகிறது. என்று ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) கூறினார்.