அத்தியாயம்: 22, பாடம்: 26, ஹதீஸ் எண்: 3013

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو الأَشْعَثِيُّ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ مَعْمَرِ بْنِ عَبْدِ اللَّهِ:‏ ‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ يَحْتَكِرُ إِلاَّ خَاطِئٌ ‏”‏‏


قَالَ إِبْرَاهِيمُ قَالَ مُسْلِمٌ وَحَدَّثَنِي بَعْضُ، أَصْحَابِنَا عَنْ عَمْرِو بْنِ عَوْنٍ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ مَعْمَرِ، بْنِ أَبِي مَعْمَرٍ أَحَدِ بَنِي عَدِيِّ بْنِ كَعْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏.‏ فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ عَنْ يَحْيَى

“பாவிதான் (உணவுப் பொருள்களைப்) பதுக்குவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 26, ஹதீஸ் எண்: 3012

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، – يَعْنِي ابْنَ بِلاَلٍ – عَنْ يَحْيَى، – وَهُوَ ابْنُ سَعِيدٍ – قَالَ كَانَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ يُحَدِّثُ أَنَّ مَعْمَرًا قَالَ:‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَنِ احْتَكَرَ فَهُوَ خَاطِئٌ ‏”‏ ‏ فَقِيلَ لِسَعِيدٍ فَإِنَّكَ تَحْتَكِرُ قَالَ سَعِيدٌ إِنَّ مَعْمَرًا الَّذِي كَانَ يُحَدِّثُ هَذَا الْحَدِيثَ كَانَ يَحْتَكِرُ ‏

ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘பதுக்கல் செய்பவன் பாவியாவான்’ என்று சொன்னார்கள் என மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறினார்கள்” என்றார்கள். அப்போது ஸயீத் பின் அல் முஸய்யப் (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் பதுக்குகிறீர்களே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ஸயீத் (ரஹ்), “இந்த ஹதீஸை அறிவித்துவந்த மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களும் பதுக்குபவராகவே இருந்தார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி) வழியாக யஹ்யா பின் ஸயீத் (ரஹ்)


குறிப்பு :

ஸயீத் பின் அல் முஸய்யப் (ரஹ்) அவர்களும் மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களும் உணவுப் பொருட்களைப் பதுக்கவில்லை; மாறாக ஒலிவ எண்ணெயை சேமித்து வைப்பவர்களாக இருந்தனர்.