அத்தியாயம்: 3, பாடம்: 22, ஹதீஸ் எண்: 527

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ مَعْرُوفٍ ‏ ‏وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عِيَاضُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ كُلْثُومٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ ‏
‏إِنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الرَّجُلِ يُجَامِعُ أَهْلَهُ ثُمَّ ‏ ‏يُكْسِلُ ‏ ‏هَلْ عَلَيْهِمَا الْغُسْلُ ‏ ‏وَعَائِشَةُ ‏ ‏جَالِسَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنِّي لَأَفْعَلُ ذَلِكَ أَنَا وَهَذِهِ ثُمَّ نَغْتَسِلُ ‏

“தம் மனைவியுடன் உடலுறவு கொண்ட ஒருவர், விந்தை வெளியாக்காமல் எழுந்து விட்டார். இந்நிலையில் அவர்கள் இருவர் மீதும் குளியல் கடமையாகுமா?” என்று ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அப்போது நானும் அங்கு அமர்ந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் காட்டி, “இதோ இவளும் நானும் அவ்வாறு செய்த பின்னர் நாங்கள் குளிப்போம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உம்மு குல்ஸூம் பின்த் அபீபக்ர் (ரஹ்).

அத்தியாயம்: 3, பாடம்: 22, ஹதீஸ் எண்: 526

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عِبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ حَسَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُمَيْدُ بْنُ هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏وَهَذَا حَدِيثُهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ هِلَالٍ ‏ ‏قَالَ ‏ ‏وَلَا أَعْلَمُهُ إِلَّا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ ‏
‏اخْتَلَفَ فِي ذَلِكَ ‏ ‏رَهْطٌ ‏ ‏مِنْ ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏وَالْأَنْصَارِ ‏ ‏فَقَالَ ‏ ‏الْأَنْصَارِيُّونَ ‏ ‏لَا يَجِبُ الْغُسْلُ إِلَّا مِنْ الدَّفْقِ أَوْ مِنْ الْمَاءِ وَقَالَ ‏ ‏الْمُهَاجِرُونَ ‏ ‏بَلْ إِذَا ‏ ‏خَالَطَ ‏ ‏فَقَدْ وَجَبَ الْغُسْلُ قَالَ قَالَ ‏ ‏أَبُو مُوسَى ‏ ‏فَأَنَا ‏ ‏أَشْفِيكُمْ مِنْ ذَلِكَ فَقُمْتُ فَاسْتَأْذَنْتُ عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَأُذِنَ لِي فَقُلْتُ لَهَا يَا ‏ ‏أُمَّاهْ ‏ ‏أَوْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ ‏ ‏إِنِّي أُرِيدُ أَنْ أَسْأَلَكِ عَنْ شَيْءٍ وَإِنِّي ‏ ‏أَسْتَحْيِيكِ فَقَالَتْ لَا ‏ ‏تَسْتَحْيِي أَنْ تَسْأَلَنِي عَمَّا كُنْتَ سَائِلًا عَنْهُ أُمَّكَ الَّتِي وَلَدَتْكَ فَإِنَّمَا أَنَا أُمُّكَ قُلْتُ فَمَا يُوجِبُ الْغُسْلَ قَالَتْ عَلَى الْخَبِيرِ سَقَطْتَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا جَلَسَ بَيْنَ ‏ ‏شُعَبِهَا ‏ ‏الْأَرْبَعِ وَمَسَّ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ ‏

நபித்தோழர்களான முஹாஜிர்ககளையும் அன்ஸாரிகளையும் சார்ந்த குழுவினர் கருத்து வேறுபட்ட சொல்லாடல்களில் ஈடுபட்டிருந்தனர். “விந்து வெளியானால்தான் அல்லது சிலிர்ப்பு ஏற்பட்டால்தான் குளியல் கடமையாகும்” என்று அன்ஸாரிகள் கூறினர். “இல்லை; (இரு குறிகளும்) கலந்து விட்டாலே குளியல் கடமையாகி விடும்” என்று முஹாஜிர்கள் கூறினர்.

உடனே நான், “இதற்கு நான் தீர்வு கொண்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு எழுந்து அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது இல்லத்துக்குச் சென்று (உள்ளே வர) அனுமதி கோரினேன். எனக்கு அனுமதி கிடைத்தது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “என் அன்னையே!/இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! நான் தங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன். ஆனால் தங்களிடம் அதைக் கேட்க வெட்கமாக இருக்கிறது” என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “உங்களைப் பெற்றெடுத்த தாயிடம் நீங்கள் எதைப் பற்றிக் கேட்பீர்களோ அதைப் பற்றி என்னிடம் கேட்க நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு நானும் ஒரு தாய்தான்” என்றார்கள். எனவே, “குளியல் எதனால் கடமையாகும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பொருத்தமான ஆளிடம்தான் வந்தீர்கள். ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து (அவரது ஆண்) குறி (மனைவியின் பெண்)குறியைத் தொட்டு விட்டாலே (இருவர் மீதும்) குளியல் கடமையாகி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 22, ஹதீஸ் எண்: 525

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏وَمَطَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا جَلَسَ بَيْنَ ‏ ‏شُعَبِهَا ‏ ‏الْأَرْبَعِ ثُمَّ جَهَدَهَا فَقَدْ وَجَبَ عَلَيْهِ الْغُسْلُ ‏
‏وَفِي حَدِيثِ ‏ ‏مَطَرٍ ‏ ‏وَإِنْ لَمْ يُنْزِلْ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏مِنْ بَيْنِهِمْ بَيْنَ ‏ ‏أَشْعُبِهَا ‏ ‏الْأَرْبَعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَبَّادِ بْنِ جَبَلَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏وَهْبُ بْنُ جَرِيرٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ثُمَّ اجْتَهَدَ وَلَمْ يَقُلْ وَإِنْ لَمْ يُنْزِلْ ‏

“ஒருவர் தம் மனைவியின் நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து, (இன்பம் துய்க்கும்) முயன்று விட்டால் அவர் மீது குளியல் கடமையாகி விடும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

குறிப்பு:

மத்தர் (ரஹ்) வழி அறிவிப்பில், “விந்து வெளியாகாவிட்டாலும்” எனும் சொற்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

அபூஹுரைரா (ரலி) வழியாக ஷுஅபா (ரஹ்) அறிவிப்பதில், “‘பின்னர் அவர் (இன்பம் துய்க்க) முயன்று விட்டால்” என இடம் பெற்றுள்ளதே தவிர, “விந்து வெளியாகாவிட்டாலும்” என்பது இடம் பெறவில்லை.

“நான்கு கிளைகள்” என்பன மனைவியின் இரு கைகளும் இரு கால்களுமாகும்.