அத்தியாயம்: 3, பாடம்: 24, ஹதீஸ் எண்: 538

و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ حَلْحَلَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَمَعَ عَلَيْهِ ثِيَابَهُ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ فَأُتِيَ بِهَدِيَّةٍ خُبْزٍ وَلَحْمٍ فَأَكَلَ ثَلَاثَ لُقَمٍ ثُمَّ صَلَّى بِالنَّاسِ وَمَا مَسَّ مَاءً ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ كَثِيرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ ‏ ‏قَالَ كُنْتُ مَعَ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏ابْنِ حَلْحَلَةَ ‏ ‏وَفِيهِ أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏شَهِدَ ذَلِكَ مِنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ صَلَّى وَلَمْ يَقُلْ بِالنَّاسِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு தொழுகைக்குப் புறப்பட்டார்கள். அப்போது அவர்களுக்காக ரொட்டியும் இறைச்சியும் அன்பளிப்பாகக் கொண்டு வரப்பட்டன. அவர்கள் அதிலிருந்து மூன்று கவளம் சாப்பிட்டு விட்டுப் பின்னர் மக்களுக்காகத் தொழுகை நடத்தினார்கள். அவர்கள் (மீண்டும் உளூச் செய்வதற்காகத்) தண்ணீரைத் தொடவில்லை.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி).

குறிப்பு:

“நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோடு இருந்தபோது இதே போன்ற ஹதீஸை அவர்கள் அறிவித்தார்கள். மேற்காணும் நிகழ்வில், நபி (ஸல்) அவர்களுடன் தாம் இருந்ததாகவும் கூறினார்கள்” என முஹம்மது பின் அம்ரு பின் அதா (ரஹ்) குறிப்பிடுகிறார். அந்த அறிவிப்பில், “மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்” என்று இல்லாமல் “தொழுதார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 24, ஹதீஸ் எண்: 537

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏
‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَرِبَ لَبَنًا ثُمَّ دَعَا بِمَاءٍ فَتَمَضْمَضَ وَقَالَ إِنَّ لَهُ دَسَمًا ‏
‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏وَأَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏بِإِسْنَادِ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏مِثْلَهُ

நபி (ஸல்) அவர்கள் பால் அருந்திய பின்னர் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வாய் கொப்பளித்தார்கள். பிறகு, “(காரணம்) இதில் கொழுப்பு இருக்கிறது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 24, ஹதீஸ் எண்: 536

قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي غَطَفَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَافِعٍ ‏ ‏قَالَ ‏
‏أَشْهَدُ لَكُنْتُ ‏ ‏أَشْوِي لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَطْنَ ‏ ‏الشَّاةِ ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ ‏

நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்காக ஆட்டு ஈரல் குலையைப் பொரித்துக் கொடுத்தேன். (அவர்கள் அதை உண்டுவிட்டு மீண்டும்) உளூச் செய்யாமல் தொழுதார்கள் என்பதை உறுதி கூறுகிறேன்.

அறிவிப்பாளர் : அபூராஃபிஉ (ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 24, ஹதீஸ் எண்: 535

قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏بُكَيْرُ بْنُ الْأَشَجِّ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏
‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَكَلَ عِنْدَهَا كَتِفًا ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ ‏
‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنِي ‏ ‏جَعْفَرُ بْنُ رَبِيعَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَعْقُوبَ بْنِ الْأَشَجِّ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِذَلِكَ

நபி (ஸல்) அவர்கள் என் இல்லத்தில் (சமைத்த ஆட்டுச்) சப்பையை உண்ட பின்னர் (மீண்டும்) உளூச் செய்யாமல் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை மைமூனா (ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 24, ஹதீஸ் எண்: 534

حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏
‏رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَحْتَزُّ مِنْ كَتِفِ شَاةٍ فَأَكَلَ مِنْهَا فَدُعِيَ إِلَى الصَّلَاةِ فَقَامَ وَطَرَحَ السِّكِّينَ وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ ‏
‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِذَلِكَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்டின் சப்பையை(க் கத்தியால்) துண்டுகளாக்கி உண்டு கொண்டிருந்தபோது தொழுகைக்காக அழைப்புக் கொடுக்கப் பட்டது. உடனே அவர்கள் எழுந்து கத்தியைப் போட்டுவிட்டு (மீண்டும்) உளூச் செய்யாமல் தொழுததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் உமய்யா அள்ளம்ரீ(ரலி).

குறிப்பு:

இபுனு அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன் அலீ (ரஹ்) இதே ஹதீஸைத் தமக்கு அறிவித்ததாக இபுனு ஷிஹாப் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 3, பாடம்: 24, ஹதீஸ் எண்: 533

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏
‏أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَحْتَزُّ ‏ ‏مِنْ كَتِفٍ يَأْكُلُ مِنْهَا ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்டுச் சப்பையை விண்டு உண்டதையும் உண்டபின் (மீண்டும்) உளூச் செய்யாமலேயே தொழுதையும் நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் உமய்யா அள்ளம்ரீ(ரலி) வழியாக அவரின் மகன் ஜஅஃபர் (ரஹ்).

அத்தியாயம்: 3, பாடம்: 24, ஹதீஸ் எண்: 532

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏وَهْبُ بْنُ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏
‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَكَلَ ‏ ‏عَرْقًا ‏ ‏أَوْ لَحْمًا ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ وَلَمْ يَمَسَّ مَاءً ‏

நபி (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) இறைச்சியை/எலும்பில் ஒட்டிக் கொண்டிருந்த இறைச்சியை உண்டு விட்டுத் தொழுதார்கள். (தொழுகைக்காக மீண்டும்) உளூச் செய்யவில்லை; தண்ணீரைத் தொடவுமில்லை.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 24, ஹதீஸ் எண்: 531

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَكَلَ كَتِفَ شَاةٍ ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஆட்டுச்சப்பை இறைச்சியை உண்டு விட்டு, (தொழுகைக்காக மீண்டும்) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி).