حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي شَبَابَةُ، حَدَّثَنِي وَرْقَاءُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “ بَيْنَمَا امْرَأَتَانِ مَعَهُمَا ابْنَاهُمَا جَاءَ الذِّئْبُ فَذَهَبَ بِابْنِ إِحْدَاهُمَا . فَقَالَتْ هَذِهِ لِصَاحِبَتِهَا إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ أَنْتِ . وَقَالَتِ الأُخْرَى إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ . فَتَحَاكَمَتَا إِلَى دَاوُدَ فَقَضَى بِهِ لِلْكُبْرَى فَخَرَجَتَا عَلَى سُلَيْمَانَ بْنِ دَاوُدَ عَلَيْهِمَا السَّلاَمُ فَأَخْبَرَتَاهُ فَقَالَ ائْتُونِي بِالسِّكِّينِ أَشُقُّهُ بَيْنَكُمَا . فَقَالَتِ الصُّغْرَى لاَ يَرْحَمُكَ اللَّهُ هُوَ ابْنُهَا . فَقَضَى بِهِ لِلصُّغْرَى ” . قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ وَاللَّهِ إِنْ سَمِعْتُ بِالسِّكِّينِ قَطُّ إِلاَّ يَوْمَئِذٍ مَا كُنَّا نَقُولُ إِلاَّ الْمُدْيَةَ .
وَحَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي حَفْصٌ، – يَعْنِي ابْنَ مَيْسَرَةَ الصَّنْعَانِيَّ – عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، ح وَحَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا رَوْحٌ، – وَهُوَ ابْنُ الْقَاسِمِ – عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، جَمِيعًا عَنْ أَبِي الزِّنَادِ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَ مَعْنَى حَدِيثِ وَرْقَاءَ .
“”இரண்டு பெண்கள் (இறைத்தூதர் தாவூத் (அலை) காலத்தில்) வாழ்ந்தனர். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மகன்கள் இருந்தனர். (ஒரு நாள்) ஓநாய் ஒன்று வந்து அவ்விருவரின் மகன்களில் ஒருவரைக் கொண்டுசென்று விட்டது. அவர்களில் ஒருத்தி, மற்றவளிடம், “உன் மகனைத்தான் ஓநாய் கொண்டுசென்று விட்டது” என்று கூற, அதற்கு மற்றவள் “உன் மகனைத்தான் ஓநாய் கொண்டுசென்றுவிட்டது” என்று சொன்னாள்.
ஆகவே, இருவரும் தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றார்கள். தாவூத் (அலை) அவ்விரு பெண்களில் மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (இந்தத் தீர்ப்பின்மீது கருத்து வேறுபாடு கொண்ட) அப்பெண்கள் இருவரும் தாவூத் (அலை) அவர்களின் மகனார் ஸுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்கச்) சென்று, அவ்விருவரும் விஷயத்தைத் தெரிவித்தனர்.
அப்போது ஸுலைமான் (அலை), “என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டுவாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (ஒரு மகனை ஆளுக்குப் பாதியாக) பிளந்து(பங்கிட்டு)விடுகிறேன்” என்று கூறினார்கள். உடனே இளையவள், (பதறிப்போய்) “அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். அவ்வாறு செய்துவிடாதீர்கள். இவன் அவளுடைய மகன்தான்” என்று கூறினாள். ஸுலைமான் (அலை), (பதறிய தாயுள்ளத்தை அறிந்துகொண்டு) குழந்தை இளையவளுக்குரியது எனத் தீர்ப்பளித்தார்கள்”“ என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
குறிப்பு :
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! அன்றுதான் நான் (கத்திக்கு) ‘ஸிக்கீன்’ எனும் சொல்லை(நபியவர்கள் வாயிலாக)ச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) ‘முத்யா’ எனும் சொல்லையே நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தோம்” என்று கூறினார்கள்.