அத்தியாயம்: 30, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3238

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الثَّقَفِيُّ، عَنْ وَرَّادٍ قَالَ :‏

كَتَبَ الْمُغِيرَةُ إِلَى مُعَاوِيَةَ سَلاَمٌ عَلَيْكَ أَمَّا بَعْدُ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ اللَّهَ حَرَّمَ ثَلاَثًا وَنَهَى عَنْ ثَلاَثٍ حَرَّمَ عُقُوقَ الْوَالِدِ وَوَأْدَ الْبَنَاتِ وَلاَ وَهَاتِ ‏.‏ وَنَهَى عَنْ ثَلاَثٍ قِيلٍ وَقَالٍ وَكَثْرَةِ السُّؤَالِ وَإِضَاعَةِ الْمَالِ ‏”‏ ‏

“ஸலாமுன் அலைக்க (உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்); இறைவாழ்த்துக்குப் பின்! அல்லாஹ் மூன்று விஷயங்களைத் தடை செய்துள்ளான்; மூன்றை (வெறுத்து) விலக்கியுள்ளான். பெற்றோரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுத்தவருக்குரியதைத் தனக்குத்) தருமாறு கேட்பது ஆகியவற்றைத் தடை செய்துள்ளான். ‘(அவ்வாறு) சொல்லப்பட்டது’, ‘அவர் சொன்னார்’ என(ஆதாரமற்றதை)ப் பேசுவதையும், அதிகமாக (வீண்) கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணாகச் செல்வழிப்பதையும் (வெறுத்து) விலக்கியுள்ளான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன்” என முஃகீரா (ரலி), முஆவியா (ரலி) அவர்களுக்கு (மடல்) எழுதினார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி) வழியாக அன்னாரின் எழுத்தர் வர்ராத் (ரஹ்)

அத்தியாயம்: 30, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3237

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، حَدَّثَنِي ابْنُ أَشْوَعَ، عَنِ الشَّعْبِيِّ، حَدَّثَنِي كَاتِبُ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ :‏

كَتَبَ مُعَاوِيَةُ إِلَى الْمُغِيرَةِ اكْتُبْ إِلَىَّ بِشَىْءٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَكَتَبَ إِلَيْهِ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلاَثًا قِيلَ وَقَالَ وَإِضَاعَةَ الْمَالِ وَكَثْرَةَ السُّؤَالِ ‏”‏ ‏

முஆவியா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற (ஹதீஸ்) ஒன்றை எனக்கு எழுதி அனுப்புங்கள்” என முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்.

அதற்கு முஃகீரா (ரலி), “அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை வெறுத்துள்ளான். ‘(அவ்வாறு) சொல்லப்பட்டது’, ‘அவர் சொன்னார்’ போன்ற(ஆதாரமற்ற)வற்றைப் பேசுவது, செல்வத்தை வீணாகச் செலவழிப்பது, அதிகமாக (வீண்)கேள்விகள் கேட்பது ஆகியவையே அவை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று பதில் எழுதினார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி) வழியாக அன்னாரின் எழுத்தர் வர்ராத் (ரஹ்)

அத்தியாயம்: 30, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3236

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ وَرَّادٍ، مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ :‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَرَّمَ عَلَيْكُمْ عُقُوقَ الأُمَّهَاتِ وَوَأْدَ الْبَنَاتِ وَمَنْعًا وَهَاتِ وَكَرِهَ لَكُمْ ثَلاَثًا قِيلَ وَقَالَ وَكَثْرَةَ السُّؤَالِ وَإِضَاعَةَ الْمَالِ ‏”‏ ‏.‏


وَحَدَّثَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنْ مَنْصُورٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ ‏.‏ غَيْرَ أَنَّهُ قَالَ وَحَرَّمَ عَلَيْكُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ وَلَمْ يَقُلْ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ ‏.‏

“அன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (பிறருக்கு உரியதைத் தர) மறுப்பது, (பிறருக்குரியதைத் தனக்குத் தருமாறு) கேட்பது ஆகியவற்றை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். மேலும், ‘(அவ்வாறு) சொல்லப்பட்டது’, ‘அவர் சொன்னார்’ போன்ற(ஆதாரமற்ற)தைப் பேசுவது, அதிகமாகக் கேள்வி கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகிய மூன்றையும் உங்களுக்கு அல்லாஹ் வெறுத்துள்ளான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)


குறிப்பு :

ஷைபான் (ரஹ்) வழி அறிவிப்பில், “… அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான்…” என்று இல்லாமல், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்களுக்குத் தடை செய்துள்ளார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 30, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3235

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنَّ اللَّهَ يَرْضَى لَكُمْ ثَلاَثًا وَيَكْرَهُ لَكُمْ ثَلاَثًا فَيَرْضَى لَكُمْ أَنْ تَعْبُدُوهُ وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلاَ تَفَرَّقُوا وَيَكْرَهُ لَكُمْ قِيلَ وَقَالَ وَكَثْرَةَ السُّؤَالِ وَإِضَاعَةَ الْمَالِ ‏”‏


وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُهَيْلٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ وَيَسْخَطُ لَكُمْ ثَلاَثًا ‏.‏ وَلَمْ يَذْكُرْ وَلاَ تَفَرَّقُوا ‏.‏

“அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை விரும்புகின்றான்; உங்களுக்கு மூன்று விஷயங்களை வெறுக்கின்றான்:

1-அல்லாஹ் ஒருவனையே வணங்குவதையும்
2-அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையும்
3- நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடிப்பதையும் பிரிந்துவிடாமலிருப்பதையும் விரும்புகின்றான்.

(1) ’சொல்லப்பட்டது’, ‘அவர் சொன்னார்’ என(ஆதாரமின்றி)ப் பேசுவதையும்,
(2) அதிகமாக(பயனற்ற)க் கேள்விகள் கேட்பதையும்,
(3) செல்வத்தை வீணாகச் செலவழிப்பதையும் அவன் வெறுக்கின்றான்”

என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அபூஅவானா (ரஹ்) வழி அறிவிப்பில், ‘வெறுக்கின்றான்’ என்பதைக் குறிக்க‚ ‘யக்ரஹு’ என்பதற்குப் பகரமாக ‘யஸ்க(த்)து’ என இடம்பெற்றுள்ளது. “பிரிந்துவிடாமலிருப்பதையும் …” என்பது இடம்பெறவில்லை.