அத்தியாயம்: 33, பாடம்: 39, ஹதீஸ் எண்: 3512

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ حُرْمَةُ نِسَاءِ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ كَحُرْمَةِ أُمَّهَاتِهِمْ وَمَا مِنْ رَجُلٍ مِنَ الْقَاعِدِينَ يَخْلُفُ رَجُلاً مِنَ الْمُجَاهِدِينَ فى أَهْلِهِ فَيَخُونُهُ فِيهِمْ إِلاَّ وُقِفَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ فَيَأْخُذُ مِنْ عَمَلِهِ مَا شَاءَ فَمَا ظَنُّكُمْ ‏”‏ ‏


وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ – يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم ‏.‏ بِمَعْنَى حَدِيثِ الثَّوْرِيِّ

وَحَدَّثَنَاهُ سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ قَعْنَبٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، بِهَذَا الإِسْنَادِ ‏”‏ فَقَالَ فَخُذْ مِنْ حَسَنَاتِهِ مَا شِئْتَ ‏”‏ ‏.‏ فَالْتَفَتَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ فَمَا ظَنُّكُمْ ‏”‏

“போருக்குச் செல்லாமல் (ஊரில்) இருப்போர், போருக்குச் சென்ற வீரர்களின் துணைவியரைத் தம் தாயை மதிப்பதைப் போன்று மதிக்க வேண்டும். அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய குடும்பத்தாரின் நலம் காக்கும் ஒருவர், வீரரின் துணைவியர் விஷயத்தில் அவருக்குத் துரோகமிழைத்தால் அவ்வீரருக்காக மறுமை நாளில் அவர் நிறுத்தப்படுவார். அப்போது அவருடைய நற்செயல்(களின் நன்மை)களில் தாம் நாடிய அளவுக்கு எடுத்துக்கொள்(ள இவர் உரிமை அளிக்கப்படு)வார். (அவருடைய நன்மைகள் அனைத்தையுமே இவர் எடுத்துக்கொள்வாரே!) நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?“ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : புரைதா (ரலி)


குறிப்பு :

கஅனப் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவ்வீரரிடம், இவருடைய நற்செயல்களிலிருந்து நீங்கள் விரும்பிய அளவுக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லப்படும்” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களை நோக்கித் திரும்பி, “நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?“ எனக் கேட்டார்கள் என்று காணப்படுகிறது.