அத்தியாயம்: 33, பாடம்: 51, ஹதீஸ் எண்: 3537

حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، – يَعْنِي ابْنَ زِيَادٍ – حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ قَالَتْ :‏

قَالَ لِي أَنَسُ بْنُ مَالِكٍ بِمَا مَاتَ يَحْيَى بْنُ أَبِي عَمْرَةَ قَالَتْ قُلْتُ بِالطَّاعُونِ ‏.‏ قَالَتْ فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ الطَّاعُونُ شَهَادَةٌ لِكُلِّ مُسْلِمٍ ‏”‏ ‏


وَحَدَّثَنَاهُ الْوَلِيدُ بْنُ شُجَاعٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عَاصِمٍ، فِي هَذَا الإِسْنَادِ بِمِثْلِهِ ‏

அனஸ் பின் மாலிக் (ரலி) என்னிடம், “(உங்கள் சகோதரர்) யஹ்யா பின் அபீஅம்ரா எதனால் இறந்தார்?” என்று கேட்டார்கள். நான், “கொள்ளை நோயால் இறந்தார்” என்று பதிலளித்தேன். அவர்கள், “கொள்ளை நோய் (மரணம்), ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வீரமரணமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகச் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஹஃப்ஸா பின்த்தி ஸீரீன் (ரஹ்)

அத்தியாயம்: 33, பாடம்: 51, ஹதீஸ் எண்: 3536

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَا تَعُدُّونَ الشَّهِيدَ فِيكُمْ ‏”‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ قَالَ ‏”‏ إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ ‏”‏ ‏.‏ قَالُوا فَمَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ مَاتَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ مَاتَ فِي الطَّاعُونِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ مَاتَ فِي الْبَطْنِ فَهُوَ شَهِيدٌ ‏”‏ ‏.‏ قَالَ ابْنُ مِقْسَمٍ أَشْهَدُ عَلَى أَبِيكَ فِي هَذَا الْحَدِيثِ أَنَّهُ قَالَ ‏”‏ وَالْغَرِيقُ شَهِيدٌ ‏”‏


حَدَّثَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ سُهَيْلٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ غَيْرَ أَنَّ فِي حَدِيثِهِ قَالَ سُهَيْلٌ قَالَ عُبَيْدُ اللَّهِ بْنُ مِقْسَمٍ أَشْهَدُ عَلَى أَبِيكَ أَنَّهُ زَادَ فِي هَذَا الْحَدِيثِ ‏ “‏ وَمَنْ غَرِقَ فَهُوَ شَهِيدٌ ‏”‏ ‏.‏

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا سُهَيْلٌ، بِهَذَا الإِسْنَادِ وَفِي حَدِيثِهِ قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مِقْسَمٍ، عَنْ أَبِي صَالِحٍ، وَزَادَ، فِيهِ ‏ “‏ وَالْغَرِقُ شَهِيدٌ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்களிடம்), “உயிர்த் தியாகி (ஷஹீத்) குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டவர் உயிர்த் தியாகி ஆவார்” என்று பதிலளித்தனர்.

“அப்படியானால், என் சமுதாயத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்கள் (எண்ணிக்கையில்) குறைந்துவிடுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

மக்கள், “அவ்வாறாயின், உயிர்த் தியாகிகள் யாவர், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டவர் உயிர்த் தியாகி ஆவார். அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர் உயிர்த் தியாகி ஆவார். கொள்ளை நோயால் இறந்தவரும் உயிர்த் தியாகி ஆவார். வயிற்றோட்டத்தால் இறந்தவரும் உயிர்த் தியாகி ஆவார்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

உபைதுல்லாஹ் பின் மிக்ஸம் (ரஹ்), (தமக்கு இதை அறிவித்த) ஸுஹைல் (ரஹ்) அவர்களிடம், “இந்த ஹதீஸின் தொடரில், ‘வெள்ளத்தில் மூழ்கி இறந்தவரும் உயிர்த் தியாகி ஆவார்’ என உங்கள் தந்தை (அபூ ஸாலிஹ் – ரஹ்) அறிவித்தார்கள் என நான் சாட்சியம் அளிக்கின்றேன்” என்று கூறினார்கள்.

ஸுஹைல் பின் அபீஸாலிஹ் (ரஹ்) கூறினார்கள்: உபைதுல்லாஹ் பின் மிக்ஸம்! இந்த ஹதீஸின் தொடரில் உங்கள் தந்தை (அபூஸாலிஹ் – ரஹ்) ‘வெள்ளத்தில் மூழ்கி இறந்தவரும் உயிர்த் தியாகி ஆவார்’ என்று அறிவித்தார் என நான் சாட்சியம் அளிக்கின்றேன்”.

பஹ்ஸு (ரஹ்) வழி அறிவிப்பிலும், “வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர் உயிர்த் தியாகி ஆவார் என்று அபூஸாலிஹ் (ரஹ்) கூறினார்கள்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 33, பாடம்: 51, ஹதீஸ் எண்: 3535

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ:‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَّرَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ ‏”‏ ‏.‏ وَقَالَ ‏”‏ الشُّهَدَاءُ خَمْسَةٌ الْمَطْعُونُ وَالْمَبْطُونُ وَالْغَرِقُ وَصَاحِبُ الْهَدْمِ وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ ‏”‏

“ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் முட்கிளை ஒன்றைக் கண்டு அதை அப்புறப்படுத்தினார். (அவரது இந்த நற்செயலை) அல்லாஹ் பாராட்டுதலோடு ஏற்று, அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.

உயிர்த் தியாகிகள் ஐவர் ஆவர்:

  1. கொள்ளை நோயால் இறந்தவர்
  2. வயிற்றுப்போக்கால் இறந்தவர்
  3. வெள்ளத் தில் மூழ்கி இறந்தவர்
  4. இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்
  5. அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) உயிர்த் தியாகம் செய்தவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)