அத்தியாயம்: 36, பாடம்: 17, ஹதீஸ் எண்: 3782

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِشَرَابٍ فَشَرِبَ مِنْهُ وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ وَعَنْ يَسَارِهِ أَشْيَاخٌ فَقَالَ لِلْغُلاَمِ ‏”‏ أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَ هَؤُلاَءِ ‏”‏ ‏.‏ فَقَالَ الْغُلاَمُ لاَ ‏.‏ وَاللَّهِ لاَ أُوثِرُ بِنَصِيبِي مِنْكَ أَحَدًا ‏”‏ ‏.‏ قَالَ فَتَلَّهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي يَدِهِ ‏


حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، ح وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا يَعْقُوبُ، – يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ – كِلاَهُمَا عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِهِ وَلَمْ يَقُولاَ فَتَلَّهُ ‏.‏ وَلَكِنْ فِي رِوَايَةِ يَعْقُوبَ قَالَ فَأَعْطَاهُ إِيَّاهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஒரு முறை) ஒரு பானம் கொண்டுவரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களுக்கு வலப் பக்கம் ஒரு சிறுவரும் இடப் பக்கத்தில் முதியோர் சிலரும் இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அச்சிறுவரிடம், “இ(ந்தப் பானத்தை இம்முதிய)வர்களுக்கு அளிக்க என்னை நீ அனுமதிப்பாயா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அச்சிறுவர், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்த நற்பேற்றை வேறெவருக்கும் நான் விட்டுத் தரமாட்டேன்” என்று பதிலளித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அதை அச்சிறுவனின் கையிலேயே அழுத்தி வைத்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி)


குறிப்பு :

குதைபா (ரஹ்) & யஅகூப் (ரஹ்) வழி அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதை (அச்சிறுவனின் கையிலேயே) அழுத்தி வைத்துவிட்டார்கள்” எனும் குறிப்பு இடம் பெறவில்லை. மாறாக,  யஅகூப் (ரஹ்) வழி அறிவிப்பில், “எனவே, அ(ச் சிறு)வருக்கே அதைக் கொடுத்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 36, பாடம்: 17, ஹதீஸ் எண்: 3781

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – وَهُوَ ابْنُ جَعْفَرٍ – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرِ بْنِ حَزْمٍ أَبِي طُوَالَةَ الأَنْصَارِيِّ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، ح

وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا سُلَيْمَانُ، – يَعْنِي ابْنَ بِلاَلٍ – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يُحَدِّثُ قَالَ :‏

أَتَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي دَارِنَا فَاسْتَسْقَى فَحَلَبْنَا لَهُ شَاةً ثُمَّ شُبْتُهُ مِنْ مَاءِ بِئْرِي هَذِهِ  – قَالَ – فَأَعْطَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَشَرِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ عَنْ يَسَارِهِ وَعُمَرُ وُجَاهَهُ وَأَعْرَابِيٌّ عَنْ يَمِينِهِ فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ شُرْبِهِ قَالَ عُمَرُ هَذَا أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ يُرِيهِ إِيَّاهُ فَأَعْطَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الأَعْرَابِيَّ وَتَرَكَ أَبَا بَكْرٍ وَعُمَرَ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ الأَيْمَنُونَ الأَيْمَنُونَ الأَيْمَنُونَ ‏”‏ ‏.‏ قَالَ أَنَسٌ فَهِيَ سُنَّةٌ فَهِيَ سُنَّةٌ فَهِيَ سُنَّةٌ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்கள் வீட்டுக்கு வந்தபோது, அருந்துவதற்கு நீர் கேட்டார்கள். ஆகவே, அவர்களுக்காக நாங்கள் ஓர் ஆட்டின் பாலைக் கறந்தோம். பிறகு எனது இந்தக் கிணற்றிலிருந்து நீரெடுத்து, அதில் கலந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அருந்தினார்கள். அப்போது அபூபக்ரு (ரலி) நபியவர்களின் இடப் பக்கத்திலும், உமர் (ரலி) நபியவர்களின் முன் பக்கத்திலும், ஒரு கிராமவாசி நபியவர்களுக்கு வலப் பக்கத்திலும் இருந்தனர். அப்போது உமர் (ரலி), “இதோ அபூபக்ரு (அவருக்கு மீதியுள்ள பாலைக் கொடுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (இடப் பக்கத்திலிருந்த) அபூபக்ரு (ரலி) அவர்களைக் காட்டிக் கூறினார்கள். எனினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (வலப் பக்கமிருந்த) அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். அபூபக்ரு (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் கொடுக்கவில்லை.

மேலும், “(பரிமாறும்போது முதலில்) வலப் பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்). வலப் பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்). வலப் பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்)” என்று கூறினார்கள்.

நான், “இதுவே நபிவழியாகும்; இதுவே நபிவழியாகும்; இதுவே நபிவழியாகும்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 17, ஹதீஸ் எண்: 3780

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ – وَاللَّفْظُ لِزُهَيْرٍ – قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ قَالَ :‏

قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَأَنَا ابْنُ عَشْرٍ وَمَاتَ وَأَنَا ابْنُ عِشْرِينَ وَكُنَّ أُمَّهَاتِي يَحْثُثْنَنِي عَلَى خِدْمَتِهِ فَدَخَلَ عَلَيْنَا دَارَنَا فَحَلَبْنَا لَهُ مِنْ شَاةٍ دَاجِنٍ وَشِيبَ لَهُ مِنْ بِئْرٍ فِي الدَّارِ فَشَرِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ عُمَرُ وَأَبُو بَكْرٍ عَنْ شِمَالِهِ يَا رَسُولَ اللَّهِ أَعْطِ أَبَا بَكْرٍ ‏.‏ فَأَعْطَاهُ أَعْرَابِيًّا عَنْ يَمِينِهِ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ الأَيْمَنَ فَالأَيْمَنَ ‏”‏‏

நபி (ஸல்) மதீனாவுக்கு வந்தபோது நான் பத்து வயதுடையவனாக இருந்தேன். நான் இருபது வயதுடையவனாக இருந்தபோது அவர்கள் இறந்தார்கள். என் (தாய், தாயின் சகோதரி உள்ளிட்ட) அன்னையர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்யுமாறு என்னைத் தூண்டிக்கொண்டே இருந்தார்கள்.

இந்நிலையில் (ஒரு நாள்) நபி (ஸல்) எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களுக்காக (எங்கள்) வீட்டில் வளர்ந்த ஓர் ஆட்டிலிருந்து நாங்கள் பால் கறந்து, வீட்டிலிருந்த ஒரு கிணற்றிலிருந்து நீரெடுத்து அதில் கலந்து (அடர்த்தி நீக்கி, குளுமையாக்கி) அவர்களுக்குக் கொடுத்தோம். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பருகினார்கள். அப்போது அவர்களிடம் உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ருக்குக் கொடுங்கள்” என்று சொன்னார்கள்.

அப்போது அபூபக்ரு (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் இருந்தார்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமக்கு வலப் பக்கத்திலிருந்த) கிராமவாசி ஒருவருக்கே கொடுத்தார்கள். மேலும், “(பானங்களைப் பரிமாறும்போது முதலில்) வலப் பக்கம் இருப்பவருக்கும் அடுத்து (அவருக்கு) வலப் பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுக்க வேண்டும்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 17, ஹதீஸ் எண்: 3779

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِلَبَنٍ قَدْ شِيبَ بِمَاءٍ وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ وَعَنْ يَسَارِهِ أَبُو بَكْرٍ فَشَرِبَ ثُمَّ أَعْطَى الأَعْرَابِيَّ وَقَالَ ‏ “‏ الأَيْمَنَ فَالأَيْمَنَ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீர் கலந்த பால் கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்களுக்கு வலப் பக்கம் கிராமவாசி ஒருவரும் இடப் பக்கம் அபூபக்ரு (ரலி) அவர்களும் இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பாலைப்) பருகிய பின் (மீதியை வலப் பக்கமிருந்த) அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டு, “(பரிமாறும்போது முதலில்) வலப் பக்கம் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப் பக்கமிருப்பவருக்கும் (கொடுக்க வேண்டும்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)