حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ :
كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَرِّ الظَّهْرَانِ وَنَحْنُ نَجْنِي الْكَبَاثَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ” عَلَيْكُمْ بِالأَسْوَدِ مِنْهُ ” . قَالَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ كَأَنَّكَ رَعَيْتَ الْغَنَمَ قَالَ ” نَعَمْ وَهَلْ مِنْ نَبِيٍّ إِلاَّ وَقَدْ رَعَاهَا ” . أَوْ نَحْوَ هَذَا مِنَ الْقَوْلِ
நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘மர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் ‘அல்கபாஸ்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக்கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்), “இதில் கறுப்பு நிறத்தைப் பறியுங்கள்” என்று சொன்னார்கள்.
நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஆடு மேய்த்துள்ளீர்கள் போலிருக்கிறதே?” என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்), “ஆம், ஆடு மேய்க்காத இறைத் தூதரும் உண்டா?” என்றோ அது போன்றோ (திருப்பிக்) கேட்டார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)