وَحَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَيَّارٍ قَالَ : كُنْتُ أَمْشِي مَعَ ثَابِتٍ الْبُنَانِيِّ فَمَرَّ بِصِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ . وَحَدَّثَ ثَابِتٌ
أَنَّهُ كَانَ يَمْشِي مَعَ أَنَسٍ فَمَرَّ بِصِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ . وَحَدَّثَ أَنَسٌ أَنَّهُ كَانَ يَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَمَرَّ بِصِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ
நான் ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்களுடன் (ஒரு முறை) நடந்து சென்றபோது அவர்கள் சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு, பின்வருமாறு அறிவித்தார்கள் :
“நான் அனஸ் (ரலி) அவர்களுடன் (ஒரு முறை) நடந்து சென்றபோது அனஸ் (ரலி) சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் அச்சிறுவர்களுக்கு ஸலாம் கூறினார்கள். மேலும், அனஸ் (ரலி), “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரு முறை) நடந்து சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அச்சிறுவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸலாம் கூறினார்கள் என்றும் கூறினார்கள்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஸய்யார் பின் அபீஸய்யார் (ரஹ்)