حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُمَا أَخْبَرَاهُ عَنْ أَبِي هُرَيْرَةَ :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَمَّنَ الْإِمَامُ فَأَمِّنُوا فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلَائِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
قَالَ ابْنُ شِهَابٍ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ آمِينَ حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي ابْنُ الْمُسَيَّبِ وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ حَدِيثِ مَالِكٍ وَلَمْ يَذْكُرْ قَوْلَ ابْنِ شِهَابٍ
“இமாம், (அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதி முடித்து) ‘ஆமீன்’ கூறும்போது நீங்களும் ‘ஆமீன்’ கூறுங்கள். ஏனெனில், எவருடைய ஆமீன் (கூறும் வேளையானது) வானவர்கள் கூறும் ஆமீனுடன் பொருந்தி விடுகிறதோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
குறிப்பு :
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதி முடித்து) ஆமீன் கூறுபவர்களாக இருந்தார்கள்” என்பதாக இபுனு ஷிஹாப் (ரஹ்) வழி அறிவிப்பொன்றில் மட்டும் காணப்படுகிறது. இப்னுல் முஸையிப் (ரஹ்), அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) ஆகிய இருவர் வழி அறிவிப்பில் இபுனு ஷிஹாப் (ரஹ்) அவர்களின் கூற்று இடம்பெறவில்லை.