அத்தியாயம்: 4, பாடம்: 03, ஹதீஸ் எண்: 572

حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ مَالِكُ بْنُ عَبْدِ الْوَاحِدِ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو غَسَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذٌ ‏ ‏وَقَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ صَاحِبِ الدَّسْتَوَائِيِّ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏عَامِرٍ الْأَحْوَلِ ‏ ‏عَنْ ‏ ‏مَكْحُولٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مُحَيْرِيزٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَحْذُورَةَ ‏:‏

‏أَنَّ نَبِيَّ اللَّهِ عَلَّمَهُ هَذَا الْأَذَانَ ‏ ‏اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏أَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏ثُمَّ يَعُودُ فَيَقُولُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏أَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏حَيَّ عَلَى الصَّلَاةِ مَرَّتَيْنِ حَيَّ عَلَى الْفَلَاحِ مَرَّتَيْنِ ‏


‏زَادَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ‏

நபி (ஸல்) எனக்குக் கீழ்க்காணும் தொழுகை அழைப்பு (அதான்) முறையைக் கற்றுத் தந்தார்கள்:

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்).

(மெதுவாக) அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழி கூறுகிறேன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழி கூறுகிறேன்).

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் (முஹம்மது (ஸல்) இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழி கூறுகிறேன், முஹம்மது (ஸல்) இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழி கூறுகிறேன்)

பின்னர் மீண்டும் (சப்தமாக) அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்.

பின்னர் ‘ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழ வாருங்கள்) என்று இருமுறையும், ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று இருமுறையும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ மஹ்தூரா (ரலி)


குறிப்பு :

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில், (ஹய்ய அலல் ஃபலாஹ்வுக்குப் பிறகு) “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று நபி (ஸல்) அதான் சொல்லக் கற்றுக் கொடுத்தார்கள்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.