அத்தியாயம்: 4, பாடம்: 06, ஹதீஸ் எண்: 575

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادِ بْنِ سَلَمَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُغِيرُ ‏ ‏إِذَا طَلَعَ الْفَجْرُ وَكَانَ يَسْتَمِعُ الْأَذَانَ فَإِنْ سَمِعَ أَذَانًا أَمْسَكَ وَإِلَّا ‏ ‏أَغَارَ ‏ ‏فَسَمِعَ رَجُلًا يَقُولُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى الْفِطْرَةِ ثُمَّ قَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَرَجْتَ مِنْ النَّارِ فَنَظَرُوا فَإِذَا هُوَ رَاعِي مِعْزًى ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போர்க் காலத்தில்) ஃபஜ்ரு நேர உதயத்தின்போது போரைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். (போரை ஆரம்பிக்கு முன்) ஃபஜ்ருத் தொழுகையின் அழைப்பொலியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். தொழுகை அழைப்பொலியைக் கேட்டால் போரைத் தொடங்காமல் நிறுத்தி வைப்பார்கள்; இல்லையென்றால் போரைத் தொடங்குவார்கள்.

(ஒருமுறை) ஒருவர், “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்” என்று சொல்லக் கேட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீ இயற்கையில் (இஸ்லாத்தில்) இருக்கிறாய்” என்று சொன்னார்கள். பின்பு அவர், “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்” என்று சொன்னார். அதற்கு, “நீ நரகத்திலிருந்து (விடுதலை பெற்று) வெளியேறி விட்டாய்” என்று சொன்னார்கள். அவ்வாறு கூறியவர் யாரென்று நோக்கியபோது அவர் வெள்ளாடுகளை மேய்க்கும் ஓர் இடையர் என்பது தெரிந்தது.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)