அத்தியாயம்: 44, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4453

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ :‏ ‏

أَنَّهَا كَانَتْ تَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ وَكَانَتْ تَأْتِينِي صَوَاحِبِي فَكُنَّ يَنْقَمِعْنَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُسَرِّبُهُنَّ إِلَىَّ ‏‏


حَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، ح وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، كُلُّهُمْ عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ فِي حَدِيثِ جَرِيرٍ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ فِي بَيْتِهِ وَهُنَّ اللُّعَبُ ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன். என்னுடன் (விளையாட வரும்) என் தோழியர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டு (பயந்துபோய்) ஒளிவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என் தோழியரை (கூப்பிட்டு, என்னுடன் சேர்ந்து விளையாட) என்னிடம் அனுப்பிவைப்பார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் நபி (ஸல்) அவர்களது இல்லத்தில் பொம்மைகளை வைத்து விளையாடுவேன்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 44, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4452

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ وَجَدْتُ فِي كِتَابِي عَنْ أَبِي أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏ ‏

قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنِّي لأَعْلَمُ إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً وَإِذَا كُنْتِ عَلَىَّ غَضْبَى ‏”‏ ‏.‏ قَالَتْ فَقُلْتُ وَمِنْ أَيْنَ تَعْرِفُ ذَلِكَ قَالَ ‏”‏ أَمَّا إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً فَإِنَّكِ تَقُولِينَ لاَ وَرَبِّ مُحَمَّدٍ وَإِذَا كُنْتِ غَضْبَى قُلْتِ لاَ وَرَبِّ إِبْرَاهِيمَ ‏”‏ ‏.‏ قَالَتْ قُلْتُ أَجَلْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ مَا أَهْجُرُ إِلاَّ اسْمَكَ ‏


وَحَدَّثَنَاهُ ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، بِهَذَا الإِسْنَادِ إِلَى قَوْلِهِ لاَ وَرَبِّ إِبْرَاهِيمَ ‏.‏ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ ‏

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எப்போது நீ என்மீது திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என்மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று நான் நன்றாக அறிந்துவைத்துள்ளேன்” என்று சொன்னார்கள்.

அதற்கு நான், “எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என்மீது நீ திருப்தியுடன் இருக்கும் போது (எதையேனும் நீ மறுத்தால்), “முஹம்மதின் அதிபதிமீது சத்தியமாக, இல்லை!’ என்று கூறுவாய். என்மீது கோபமாய் இருந்தால், “இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அதிபதிமீது சத்தியமாக, இல்லை! என்று கூறுவாய்” என்று சொன்னார்கள்.

நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்), அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களது பெயரைத்தான் கோபித்துக்கொள்வேன் (உங்களையன்று)” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அப்தத்து (ரஹ்) வழி அறிவிப்பில் “இப்ராஹீம் (அலை) அவர்களின் அதிபதிமீது சத்தியமாக, இல்லை!” என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 44, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4451

حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ، وَأَبُو الرَّبِيعِ، جَمِيعًا عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، – وَاللَّفْظُ لأَبِي الرَّبِيعِ – حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ أُرِيتُكِ فِي الْمَنَامِ ثَلاَثَ لَيَالٍ جَاءَنِي بِكِ الْمَلَكُ فِي سَرَقَةٍ مِنْ حَرِيرٍ فَيَقُولُ هَذِهِ امْرَأَتُكَ ‏.‏ فَأَكْشِفُ عَنْ وَجْهِكِ فَإِذَا أَنْتِ هِيَ فَأَقُولُ إِنْ يَكُ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ يُمْضِهِ ‏”‏ ‏


حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، جَمِيعًا عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என்னிடம்) கூறினார்கள்: மூன்று இரவுகள் உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். வானவர் ஒருவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் (சுற்றி) என்னிடம் எடுத்து வந்து, “இவர் உங்கள் மனைவி” என்று கூறுகிறார். அப்போது நான் உன் முக்காட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான், “இ(க்கனவான)து அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதை அல்லாஹ் நனவாக்குவான்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)