حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ :
أُصِيبَ أَبِي يَوْمَ أُحُدٍ فَجَعَلْتُ أَكْشِفُ الثَّوْبَ عَنْ وَجْهِهِ، وَأَبْكِي، وَجَعَلُوا يَنْهَوْنَنِي وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يَنْهَانِي – قَالَ – وَجَعَلَتْ فَاطِمَةُ بِنْتُ عَمْرٍو تَبْكِيهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ تَبْكِيهِ أَوْ لاَ تَبْكِيهِ مَا زَالَتِ الْمَلاَئِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا حَتَّى رَفَعْتُمُوهُ ”
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، كِلاَهُمَا عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، . بِهَذَا الْحَدِيثِ غَيْرَ أَنَّ ابْنَ جُرَيْجٍ، لَيْسَ فِي حَدِيثِهِ ذِكْرُ الْمَلاَئِكَةِ وَبُكَاءُ الْبَاكِيَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ جِيءَ بِأَبِي يَوْمَ أُحُدٍ مُجَدَّعًا فَوُضِعَ بَيْنَ يَدَىِ النَّبِيِّ صلى الله عليه وسلم . فَذَكَرَ نَحْوَ حَدِيثِهِمْ
என் தந்தை உஹுதுப் போரில் கொல்லப்பட்டார்கள், (அவர்களது உடல் கொண்டுவரப்பட்டபோது) அவர்களின் முகத்திலிருந்த துணியை விலக்கி நான் அழலானேன். மக்கள் என்னைத் தடுக்கலாயினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னைத் தடுக்கவில்லை. (என் அத்தை) ஃபாத்திமா பின்த்தி அம்ரு பின் ஹராம் (ரலி) அவர்களும் அழலானார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ அழுதாலும் அழாவிட்டாலும் அவரை நீங்கள் தூக்கும்வரை வானவர்கள் தம் இறக்கைகளை விரித்து அவருக்கு நிழல் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
குறிப்புகள் :
மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில், வானவர்களைப் பற்றியோ அப்பெண்மணி அழுதது பற்றியோ குறிப்பு இல்லை.
அப்துல் கரீம் (ரஹ்) வழி அறிவிப்பு, “உஹுதுப் போர் நாளில் காது, மூக்கு ஆகிய உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டு வரப்பட்டு நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டது…” என்று ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.