அத்தியாயம்: 44, பாடம்: 44, ஹதீஸ் எண்: 4552

وَحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ حَدَّثَنَا يَعْقُوبُ، – وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ – حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ قَالَ أَبُو سَلَمَةَ وَعُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ سَمِعَا أَبَا هُرَيْرَةَ يَقُولُ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي مَجْلِسٍ عَظِيمٍ مِنَ الْمُسْلِمِينَ ‏”‏ أُحَدِّثُكُمْ بِخَيْرِ دُورِ الأَنْصَارِ ‏”‏ ‏.‏ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ بَنُو عَبْدِ الأَشْهَلِ ‏”‏ ‏.‏ قَالُوا ثُمَّ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ ثُمَّ بَنُو النَّجَّارِ ‏”‏ ‏.‏ قَالُوا ثُمَّ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ ثُمَّ بَنُو الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ ‏”‏ ‏.‏ قَالُوا ثُمَّ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ ثُمَّ بَنُو سَاعِدَةَ ‏”‏ ‏.‏ قَالُوا ثُمَّ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ ثُمَّ فِي كُلِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ ‏”‏ ‏.‏ فَقَامَ سَعْدُ بْنُ عُبَادَةَ مُغْضَبًا فَقَالَ أَنَحْنُ آخِرُ الأَرْبَعِ حِينَ سَمَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم دَارَهُمْ فَأَرَادَ كَلاَمَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ رِجَالٌ مِنْ قَوْمِهِ اجْلِسْ أَلاَ تَرْضَى أَنْ سَمَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم دَارَكُمْ فِي الأَرْبَعِ الدُّورِ الَّتِي سَمَّى فَمَنْ تَرَكَ فَلَمْ يُسَمِّ أَكْثَرُ مِمَّنْ سَمَّى ‏.‏ فَانْتَهَى سَعْدُ بْنُ عُبَادَةَ عَنْ كَلاَمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), முஸ்லிம்கள் திரளாகக் குழுமியிருந்த ஓர் அவையில், “அன்ஸாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்ததைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(அவர்கள்) பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பத்தார் ஆவர்” என்றார்கள். மக்கள், “பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பிறகு பனுந் நஜ்ஜார் குடும்பத்தார்” என்றார்கள். மக்கள், “பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, “பிறகு பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குடும்பத்தார்” என்றார்கள்.

“பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று மக்கள் கேட்டதற்கு, “பிறகு பனூ ஸாஇதா குடும்பத்தார்” என்று விடையளித்தார்கள்.  “பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று மக்கள் கேட்க, “பிறகு அன்ஸாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது” என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தம் குலத்தாரின் பெயரை நான்காவதாகக் கூறியதைக் கேட்டு ஸஅத் பின் உபாதா (ரலி) கோபத்துடன் எழுந்து, “நான்கு குடும்பங்களில் நாங்கள் தான் கடைசியா?” என்று கேட்டபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அது பற்றிப்) பேச முனைந்தார்.

அப்போது அவர்களுடைய குலத்தைச் சேர்ந்த சிலர், “அமருங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உங்கள் குடும்பத்தை நான்கு குடும்பங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டதே உங்களுக்குத் திருப்தியளிக்கவில்லையா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெயர் குறிப்பிடாமல் விட்ட குடும்பத்தாரின் எண்ணிக்கையே, பெயர் குறிப்பிட்ட குடும்பங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும்” என்று கூறினர்.

ஆகவே, ஸஅத் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அது குறித்து ஏதும்) பேசாமல் விலகிக்கொண்டார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 44, ஹதீஸ் எண்: 4551

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، قَالَ شَهِدَ أَبُو سَلَمَةَ لَسَمِعَ أَبَا أُسَيْدٍ الأَنْصَارِيَّ يَشْهَدُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ:‏

“‏ خَيْرُ دُورِ الأَنْصَارِ بَنُو النَّجَّارِ ثُمَّ بَنُو عَبْدِ الأَشْهَلِ ثُمَّ بَنُو الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ ثُمَّ بَنُو سَاعِدَةَ وَفِي كُلِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ ‏”‏ ‏.


قَالَ أَبُو سَلَمَةَ قَالَ أَبُو أُسَيْدٍ أُتَّهَمُ أَنَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَوْ كُنْتُ كَاذِبًا لَبَدَأْتُ بِقَوْمِي بَنِي سَاعِدَةَ ‏.‏ وَبَلَغَ ذَلِكَ سَعْدَ بْنَ عُبَادَةَ فَوَجَدَ فِي نَفْسِهِ وَقَالَ خُلِّفْنَا فَكُنَّا آخِرَ الأَرْبَعِ أَسْرِجُوا لِي حِمَارِي آتِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ وَكَلَّمَهُ ابْنُ أَخِيهِ سَهْلٌ فَقَالَ أَتَذْهَبُ لِتَرُدَّ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَعْلَمُ أَوَلَيْسَ حَسْبُكَ أَنْ تَكُونَ رَابِعَ أَرْبَعٍ ‏.‏ فَرَجَعَ وَقَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ وَأَمَرَ بِحِمَارِهِ فَحُلَّ عَنْهُ ‏

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ، حَدَّثَنِي أَبُو دَاوُدَ، حَدَّثَنَا حَرْبُ بْنُ شَدَّادٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا أُسَيْدٍ الأَنْصَارِيَّ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ خَيْرُ الأَنْصَارِ أَوْ خَيْرُ دُورِ الأَنْصَارِ ‏”‏ ‏.‏ بِمِثْلِ حَدِيثِهِمْ فِي ذِكْرِ الدُّورِ وَلَمْ يَذْكُرْ قِصَّةَ سَعْدِ بْنِ عُبَادَةَ رضى الله عنه

“அன்ஸாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனுந் நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பிறகு பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குடும்பமாகும். பிறகு பனூ ஸாஇதா குடும்பமாகும். அன்ஸாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஉஸைத் அல்அன்ஸாரீ (ரலி)


குறிப்புகள் :

“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)மீது இட்டுக்கட்டுவேனா? நான் பொய்யுரைப்பவனாயிருந்தால், என் பனூ ஸாஇதா குடும்பத்தாரையே முதலில் கூறியிருப்பேன்” என்று அபூஉஸைத் (ரலி) கூறினார்கள் என்று இதன் அறிவிப்பாளரான அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்) கூறுகின்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இவ்வாறு கூறிய செய்தி ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் மன வேதனைப்பட்டார்கள். மேலும், “(பனூ ஸாஇதா குலத்தாராகிய) நாங்கள் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டோம். என் கழுதையில் சேணம் பூட்டுங்கள்; நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்லப்போகிறேன்” என்று கூறினார்கள்.

அப்போது அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் மகன் ஸஹ்லு (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்க நீங்கள் செல்லப்போகின்றீர்களா? அல்லாஹ்வின் தூதர்தான் (இதைப் பற்றி) நன்கு அறிந்தவர்கள். (சிறப்பித்துக் கூறப்பட்ட) நான்கு குடும்பங்களில் நான்காவது குடும்பமாக நீங்கள் இருப்பது போதுமாகவில்லையா?” என்று கேட்டார்கள்.

உடனே ஸஅத் பின் உபாதா (ரலி), “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறிவிட்டுத் திரும்பிவிட்டார்கள். மேலும், தமது கழுதையை அவிழ்த்துவிடும்படியும் கட்டளையிட்டார்கள். அவ்வாறே அது அவிழ்த்துவிடப்பட்டது.

யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) வழி அறிவிப்பு, “அன்ஸாரிகளில் சிறந்தவர்கள் அல்லது அன்ஸாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது…” என்று ஆரம்பமாகி, கிளைக் குடும்பங்கள் தொடர்பான மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், ஸஅத் பின் உபாதா (ரலி) பற்றிய நிகழ்வு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 44, பாடம்: 44, ஹதீஸ் எண்: 4550

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، وَمُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ، – وَاللَّفْظُ لاِبْنِ عَبَّادٍ – حَدَّثَنَا حَاتِمٌ، – وَهُوَ ابْنُ إِسْمَاعِيلَ – عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ، قَالَ سَمِعْتُ أَبَا أُسَيْدٍ :‏

خَطِيبًا عِنْدَ ابْنِ عُتْبَةَ فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ خَيْرُ دُورِ الأَنْصَارِ دَارُ بَنِي النَّجَّارِ وَدَارُ بَنِي عَبْدِ الأَشْهَلِ وَدَارُ بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ وَدَارُ بَنِي سَاعِدَةَ ‏”‏ ‏


وَاللَّهِ لَوْ كُنْتُ مُؤْثِرًا بِهَا أَحَدًا لآثَرْتُ بِهَا عَشِيرَتِي ‏

“அன்ஸாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனூ அப்தில் அஷ்ஹல் அந்நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குடும்பமும் பனூ ஸாஇதா குடும்பமும் ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஉஸைத் (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்ராஹீம் பின் முஹம்மது பின் தல்ஹா (ரஹ்) கூறுகின்றார்:

இந்த ஹதீஸை அபூஉஸைத் (ரலி), (மதீனா ஆட்சியரான) வலீத் பின் உத்பாவுக்கு அருகில் உரையாற்றியபோது கூறினார்கள். மேலும், அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அன்ஸாரிகளின் கிளைக் குடும்பங்களில் ஒன்றுக்கு நான் முதலிடம் தருவதாக இருந்தால், (பனூ ஸாஇதா எனும்) என் குடும்பத்தாருக்கே முதலிடம் அளித்திருப்பேன்” என்றும் சொன்னார்கள்.

அத்தியாயம்: 44, பாடம்: 44, ஹதீஸ் எண்: 4549

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ أَبِي أُسَيْدٍ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ خَيْرُ دُورِ الأَنْصَارِ بَنُو النَّجَّارِ ثُمَّ بَنُو عَبْدِ الأَشْهَلِ ثُمَّ بَنُو الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ ثُمَّ بَنُو سَاعِدَةَ وَفِي كُلِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ ‏”‏ ‏.‏ فَقَالَ سَعْدٌ مَا أُرَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ قَدْ فَضَّلَ عَلَيْنَا ‏.‏ فَقِيلَ قَدْ فَضَّلَكُمْ عَلَى كَثِيرٍ ‏


حَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ أَنَسًا، يُحَدِّثُ عَنْ أَبِي أُسَيْدٍ الأَنْصَارِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ ‏.‏

حَدَّثَنَا قُتَيْبَةُ، وَابْنُ رُمْحٍ عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، يَعْنِي ابْنَ مُحَمَّدٍ ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَابْنُ أَبِي عُمَرَ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، كُلُّهُمْ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ لاَ يَذْكُرُ فِي الْحَدِيثِ قَوْلَ سَعْدٍ ‏

“அன்ஸாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பிறகு பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குடும்பமாகும். பிறகு பனூ ஸாஇதா குடும்பமாகும். அன்ஸாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள்.

அப்போது (பனூ ஸாஇதா குடும்பத்தைச் சேர்ந்தவரான) ஸஅத் (பின் உபாதா (ரலி)), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களைவிட (மற்ற மூன்று குலங்களைச்) சிறப்பித்துக் கூறியதாகவே நான் நினைக்கின்றேன்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இங்கே குறிப்பிடப்படாத இன்னும்) பலரையும்விட உங்களைச் சிறப்பித்துக் கூறி விட்டார்களே!” என்று சொல்லப்பட்டது.

அறிவிப்பாளர் : அபூஉஸைத் மாலிக் பின் ரபீஆ அல்அன்ஸாரீ (ரலி)


குறிப்பு :

யஹ்யா பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்களின் கூற்று இடம்பெறவில்லை.