அத்தியாயம்: 45, பாடம்: 27, ஹதீஸ் எண்: 4697

حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ أُمَّهُ أُمَّ كُلْثُومٍ بِنْتَ عُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ، وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ الأُوَلِ اللاَّتِي بَايَعْنَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ :‏ ‏

أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يَقُولُ ‏ “‏ لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ وَيَقُولُ خَيْرًا وَيَنْمِي خَيْرًا ‏”‏ ‏.‏ قَالَ ابْنُ شِهَابٍ وَلَمْ أَسْمَعْ يُرَخَّصُ فِي شَىْءٍ مِمَّا يَقُولُ النَّاسُ كَذِبٌ إِلاَّ فِي ثَلاَثٍ الْحَرْبُ وَالإِصْلاَحُ بَيْنَ النَّاسِ وَحَدِيثُ الرَّجُلِ امْرَأَتَهُ وَحَدِيثُ الْمَرْأَةِ زَوْجَهَا


حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ شِهَابٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ صَالِحٍ وَقَالَتْ وَلَمْ أَسْمَعْهُ يُرَخِّصُ فِي شَىْءٍ مِمَّا يَقُولُ النَّاسُ إِلاَّ فِي ثَلاَثٍ ‏.‏ بِمِثْلِ مَا جَعَلَهُ يُونُسُ مِنْ قَوْلِ ابْنِ شِهَابٍ

وَحَدَّثَنَاهُ عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ إِلَى قَوْلِهِ ‏ “‏ وَنَمَى خَيْرًا ‏”‏ ‏.‏ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ ‏‏

நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த முதன்மையான முஹாஜிர்களில் ஒருவரான என் தாயார் உம்மு குல்ஸூம் பின்த்தி உக்பா பின் அபீமுஐத் (ரலி) கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(பிணங்கிக் கொண்ட இரு தரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கின்றார்; நன்மையையே எடுத்துரைக்கின்றார்” என்று கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பாளர் : உம்மு குல்ஸூம் பின்த்தி உக்பா (ரலி) வழியாக ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்)


குறிப்புகள் :

இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகின்றார்:

மூன்று பொய்களைத் தவிர மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதையும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ள பொய்யாக நான் கேள்விப்படவில்லை.

  1. போரில் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும்) பொய்.
  2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.
  3. கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் (குடும்ப ஒற்றுமைக்காகச்) சொல்லும் பொய்.

ஸாலிஹ் பின் கைஸான் (ரஹ்) வழி அறிவிப்பில், “உம்மு குல்ஸூம் (ரலி), ‘மக்கள் பேசும் பொய்களில் மூன்றைத் தவிர வேறெதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுமதியளித்ததை நான் கேட்டதில்லை; (மேற்கண்ட) மூன்று விஷயங்களில் தவிர’ என்று கூறினார்கள்” என இடம்பெற்றுள்ளது.

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர் நன்மையையே எடுத்துரைக்கின்றார்” என்பதுவரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பிறகுள்ளவை இடம்பெறவில்லை.