அத்தியாயம்: 45, பாடம்: 7, ஹதீஸ் எண்: 4622

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ لاَ تَحَاسَدُوا وَلاَ تَبَاغَضُوا وَلاَ تَقَاطَعُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا ‏”‏ ‏


حَدَّثَنِيهِ عَلِيُّ بْنُ نَصْرٍ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ وَزَادَ ‏”‏ كَمَا أَمَرَكُمُ اللَّهُ ‏”‏

“ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள்; உறவை முறித்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு செலுத்துவதில்) சகோதரர்களாய் இருங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

வஹ்பு பின் ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளதைப் போன்று (சகோதரர்களாய் இருங்கள்)” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 45, பாடம்: 7, ஹதீஸ் எண்: 4621

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ تَبَاغَضُوا وَلاَ تَحَاسَدُوا وَلاَ تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثٍ ‏”‏ ‏


حَدَّثَنَا حَاجِبُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ح

وَحَدَّثَنِيهِ حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ مَالِكٍ ‏‏

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ أَبِي عُمَرَ، وَعَمْرٌو النَّاقِدُ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ وَزَادَ ابْنُ عُيَيْنَةَ ‏ “‏ وَلاَ تَقَاطَعُوا ‏”‏ ‏

حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ، بْنُ حُمَيْدٍ كِلاَهُمَا عَنْ عَبْدِ الرَّزَّاقِ، جَمِيعًا عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ أَمَّا رِوَايَةُ يَزِيدَ عَنْهُ فَكَرِوَايَةِ سُفْيَانَ عَنِ الزُّهْرِيِّ يَذْكُرُ الْخِصَالَ الأَرْبَعَةَ جَمِيعًا وَأَمَّا حَدِيثُ عَبْدِ الرَّزَّاقِ ‏ “‏ وَلاَ تَحَاسَدُوا وَلاَ تَقَاطَعُوا وَلاَ تَدَابَرُوا ‏”‏

“ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; பிணங்கிக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (பிணங்கி,) மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்ட செயலன்று” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்புகள் :

இபுனு உயைனா (ரஹ்) வழி அறிவிப்பில், “உறவை முறித்துக்கொள்ளாதீர்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

மஅமர் (ரஹ்) வழியாக அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில், “ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்; உறவை முறித்துக்கொள்ளாதீர்கள்; பிணங்கிக்கொள்ளாதீர்கள்” என்று (மூன்று குணங்கள் மட்டுமே) இடம்பெற்றுள்ளன.

மஅமர் (ரஹ்) வழியாக யஸீத் பின் ஸுரைஉ (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில் மேற்கண்ட (கோபம், பொறாமை, பிணக்கு, உறவை முறித்தல் ஆகிய) நான்கு குணங்களும் இடம்பெற்றுள்ளன.