அத்தியாயம்: 48, பாடம்: 6, ஹதீஸ் எண்: 4828

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ، عَنْ يَزِيدَ بْنِ الأَصَمِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنَّ اللَّهَ يَقُولُ أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ إِذَا دَعَانِي ‏”‏

“என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கின்றானோ அப்படியே நான் அவனிடம் நடந்து கொள்வேன். அவன் என்னிடம் பிரார்த்திக்கும்போது அவனுடன் நான் இருக்கின்றேன்” என்று அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 6, ஹதீஸ் எண்: 4831

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَأَزِيدُ وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَجَزَاؤُهُ سَيِّئَةٌ مِثْلُهَا أَوْ أَغْفِرُ وَمَنْ تَقَرَّبَ مِنِّي شِبْرًا تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا وَمَنْ تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا وَمَنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً وَمَنْ لَقِيَنِي بِقُرَابِ الأَرْضِ خَطِيئَةً لاَ يُشْرِكُ بِي شَيْئًا لَقِيتُهُ بِمِثْلِهَا مَغْفِرَةً ‏”‏


قَالَ إِبْرَاهِيمُ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا وَكِيعٌ بِهَذَا الْحَدِيثِ ‏

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ “‏ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا أَوْ أَزِيدُ ‏”‏ ‏

ஒரு நன்மை செய்தவருக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் உண்டு. அதைவிடக் கூடுதலாகவும் நான் வழங்குவேன். ஒரு தீமையைச் செய்தவருக்கு அதைப் போன்ற ஒரு தீமை(க்கான தண்டனை)யே உண்டு. அல்லது (அவரை) நான் மன்னித்துவிடுவேன்.

யார் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்குகின்றாரோ நான் அவரிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகின்றேன். யார் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகின்றாரோ நான் அவரிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்குகின்றேன். யார் என்னிடம் நடந்து வருகின்றாரோ நான் அவரிடம் ஓடிச்செல்கின்றேன். ஒருவர் எதையும் எனக்கு இணைவைக்காமால் பூமி நிறைய (சிறு) பாவங்களுடன் என்னிடம் வந்தாலும் அதைப் போன்று (பூமி நிறைய) மன்னிப்புடன் நான் அவரை எதிர் கொள்கின்றேன்” என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)


குறிப்பு :

அஃமஷ் (ரஹ்) வழி அறிவிப்பில், “… அதைப் போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் அவருக்கு உண்டு. அல்லது நான் அதையும்விடக் கூடுதலாக (அவருக்கு) வழங்குவேன்” என்று (சிறு வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 48, பாடம்: 6, ஹதீஸ் எண்: 4830

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ – وَاللَّفْظُ لأَبِي كُرَيْبٍ – قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي وَأَنَا مَعَهُ حِينَ يَذْكُرُنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلإٍ ذَكَرْتُهُ فِي مَلإٍ خَيْرٍ مِنْهُ وَإِنِ اقْتَرَبَ إِلَىَّ شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا وَإِنِ اقْتَرَبَ إِلَىَّ ذِرَاعًا اقْتَرَبْتُ إِلَيْهِ بَاعًا وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً ‏”‏

“என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கின்றானோ அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்கிறேன். அவன் என்னை நினைவுகூரும்போது அவனுடன் நான் இருப்பேன். அவன் தனது உள்ளூர என்னை நினைவு கூர்ந்தால் நானும் எனது உள்ளூர அவனை நினைவுகூர்வேன். என்னை ஓர் அவையோரிடையே அவன் நினைவுகூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையோரிடையே அவனை நான் நினைவுகூர்வேன்.

அவன் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் ஒரு முழம் நெருங்குவேன். அவன் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்குவேன். அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச்செல்வேன்” என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 6, ஹதீஸ் எண்: 4829

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارِ بْنِ عُثْمَانَ الْعَبْدِيُّ، حَدَّثَنَا يَحْيَى، – يَعْنِي ابْنَ سَعِيدٍ – وَابْنُ أَبِي عَدِيٍّ عَنْ سُلَيْمَانَ، – وَهُوَ التَّيْمِيُّ – عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِذَا تَقَرَّبَ عَبْدِي مِنِّي شِبْرًا تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا وَإِذَا تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا – أَوْ بُوعًا – وَإِذَا أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً ‏”‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الْقَيْسِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ ‏ “‏ إِذَا أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً ‏”‏ ‏‏

“என் அடியான் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகின்றேன். அவன் என்னிடம் ஒரு முழம் நெருங்கினால் நான் அவனிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்குகின்றேன். அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச்செல்கின்றேன்” என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

முஅத்தமர் (ரஹ்) வழி அறிவிப்பில்,  “அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச்செல்கின்றேன்” எனும் இறுதி வரி இடம்பெறவில்லை.