அத்தியாயம்: 48, பாடம்: 7, ஹதீஸ் எண்: 4832

حَدَّثَنَا أَبُو الْخَطَّابِ، زِيَادُ بْنُ يَحْيَى الْحَسَّانِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُمَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَادَ رَجُلاً مِنَ الْمُسْلِمِينَ قَدْ خَفَتَ فَصَارَ مِثْلَ الْفَرْخِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ هَلْ كُنْتَ تَدْعُو بِشَىْءٍ أَوْ تَسْأَلُهُ إِيَّاهُ ‏”‏ ‏.‏ قَالَ نَعَمْ كُنْتُ أَقُولُ اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الآخِرَةِ فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ سُبْحَانَ اللَّهِ لاَ تُطِيقُهُ – أَوْ لاَ تَسْتَطِيعُهُ – أَفَلاَ قُلْتَ اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ‏”‏ ‏.‏ قَالَ فَدَعَا اللَّهَ لَهُ فَشَفَاهُ ‏


حَدَّثَنَاهُ عَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا حُمَيْدٌ، بِهَذَا الإِسْنَادِ إِلَى قَوْلِهِ ‏ “‏ وَقِنَا عَذَابَ النَّارِ ‏”‏ ‏.‏ وَلَمْ يَذْكُرِ الزِّيَادَةَ ‏

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ عَلَى رَجُلٍ مِنْ أَصْحَابِهِ يَعُودُهُ وَقَدْ صَارَ كَالْفَرْخِ ‏.‏ بِمَعْنَى حَدِيثِ حُمَيْدٍ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ “‏ لاَ طَاقَةَ لَكَ بِعَذَابِ اللَّهِ ‏”‏ ‏.‏ وَلَمْ يَذْكُرْ فَدَعَا اللَّهَ لَهُ فَشَفَاهُ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا سَالِمُ بْنُ نُوحٍ الْعَطَّارُ، عَنْ سَعِيدِ، بْنِ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا الْحَدِيثِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஸ்லிம்களில் ஒருவரை உடல்நலம் விசாரிப்பதற்காகச் சென்றார்கள். அவர் கோழிக்குஞ்சைப் போன்று நலிந்து பலவீனத்துடன் காணப்பட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ ஏதேனும் பிரார்த்தித்தாயா? அல்லது இறைவனிடம் ஏதேனும் வேண்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “ஆம்; நான், இறைவா! நீ மறுமையில் அளிக்கவிருக்கும் தண்டனையை முன்கூட்டி இவ்வுலகிலேயே எனக்குத் தந்துவிடு என்று பிரார்த்திப்பது வழக்கம்” என்று கூறினார்.

அதைக்கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (வியப்புடன்), “ஸுப்ஹானல்லாஹ்! உன்னால் அதைத் தாங்க முடியாது / உன்னால் அதற்கு இயலாது” என்று கூறிவிட்டு, “நீ, இறைவா! இம்மையிலும் மறுமையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எம்மைக் காப்பாயாக! என்று பிரார்த்தித்திருக்கக் கூடாதா?“ என்று கேட்டார்கள்.

பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்; அவருக்கு அல்லாஹ் குணமளித்தான்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்புகள் :

காலித் பின் அல் ஹாரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “நரக வேதனையிலிருந்து எம்மைக் காப்பாயாக!” என்பதற்குப் பின்னுள்ள சொற்கள் இடம் பெறவில்லை.

ஸாபித் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் தோழர்களில் ஒருவரை உடல் நலம் விசாரிப்பதற்காகச் சென்றார்கள். அவர் கோழிக்குஞ்சைப் போன்று மாறிவிட்டிருந்தார் …” என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸின் சொற்றொடருடன் தொடர்கிறது.

மேலும், “இறைவனின் வேதனையைத் தாங்க உனக்குச் சக்தி இல்லை” என்று நபி (ஸல்) கூறியதாகக் காணப்படுகிறது. ஆனால், “பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அவருக்கு அல்லாஹ் குணமளித்தான்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.