அத்தியாயம்: 5, பாடம்: 25, ஹதீஸ் எண்: 922

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ :‏‏

دَخَلَتْ عَلَيَّ عَجُوزَانِ مِنْ عُجُزِ يَهُودِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏فَقَالَتَا إِنَّ أَهْلَ الْقُبُورِ يُعَذَّبُونَ فِي قُبُورِهِمْ قَالَتْ فَكَذَّبْتُهُمَا وَلَمْ أُنْعِمْ أَنْ أُصَدِّقَهُمَا فَخَرَجَتَا وَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ لَهُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عَجُوزَيْنِ مِنْ عُجُزِ يَهُودِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏دَخَلَتَا عَلَيَّ فَزَعَمَتَا أَنَّ أَهْلَ الْقُبُورِ يُعَذَّبُونَ فِي قُبُورِهِمْ فَقَالَ صَدَقَتَا إِنَّهُمْ يُعَذَّبُونَ عَذَابًا تَسْمَعُهُ الْبَهَائِمُ قَالَتْ فَمَا رَأَيْتُهُ بَعْدُ فِي صَلَاةٍ إِلَّا ‏ ‏يَتَعَوَّذُ مِنْ عَذَابِ الْقَبْرِ ‏


حَدَّثَنَا ‏ ‏هَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَشْعَثَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ وَفِيهِ قَالَتْ وَمَا صَلَّى صَلَاةً بَعْدَ ذَلِكَ إِلَّا سَمِعْتُهُ يَتَعَوَّذُ مِنْ عَذَابِ الْقَبْرِ

மதீனத்து யூதமூதாட்டிகள் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்தபோது), “மண்ணறைகளில் புதைக்கப்பட்டிருப்போர் வேதனை செய்யப்படுகின்றனர்” என்று கூறினர். அவர்கள் இருவரும் கூறியதை நான் நம்பவில்லை. அவர்கள் கூறியதை நம்புவதற்கு என் மனம் இடம்தரவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் வந்தபோது, “அல்லாஹ்வின் தூதரே! மதீனத்து யூதமூதாட்டியரில் இருவர் என்னிடம் வந்து மண்ணறைகளில் புதைக்கப்பட்டிருப்போர் வேதனை செய்யப்படுகின்றனர் என்று கூறினர்” என அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர்கள் சொன்னது உண்மையே! (மண்ணறைகளிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகின்றனர். அந்த வேதனை(ஓலங்)களை மிருகங்கள் செவியேற்கின்றன” என்று கூறினார்கள்.

அதற்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எந்தத் தொழுகையிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அபுல் அஹ்வஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “… அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதற்குப் பிறகு தொழுத எந்தத் தொழுகையிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 25, ஹதீஸ் எண்: 921

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏وَعَمْرُو بْنُ سَوَّادٍ ‏ ‏قَالَ ‏ ‏حَرْمَلَةُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعْدَ ذَلِكَ ‏ ‏يَسْتَعِيذُ مِنْ عَذَابِ الْقَبْرِ

(இதற்கு முந்தைய ஹதீஸ் எண் 920இல் குறிப்பிட்டுள்ள) அந்த நிகழ்வுக்குப் பின்னர், பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 25, ஹதீஸ் எண்: 920

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏قَالَ ‏ ‏هَارُونُ ‏ ‏حَدَّثَنَا وَقَالَ ‏ ‏حَرْمَلَةُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعِنْدِي امْرَأَةٌ مِنْ ‏ ‏الْيَهُودِ ‏ ‏وَهِيَ تَقُولُ هَلْ شَعَرْتِ أَنَّكُمْ ‏ ‏تُفْتَنُونَ ‏ ‏فِي الْقُبُورِ قَالَتْ ‏ ‏فَارْتَاعَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ إِنَّمَا تُفْتَنُ ‏ ‏يَهُودُ ‏ ‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَلَبِثْنَا ‏ ‏لَيَالِيَ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ شَعَرْتِ ‏ ‏أَنَّهُ أُوحِيَ إِلَيَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعْدُ يَسْتَعِيذُ مِنْ عَذَابِ الْقَبْرِ

என்னிடம் யூதப்பெண் ஒருவர், “உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்கள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுவீர்கள்” என்று கூறிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்கள். மேலும், “யூதர்கள்தாம் (மண்ணறைகளில்) வேதனை செய்யப்படுவார்கள்” என்றார்கள்.

சிலநாள்கள் கழிந்தபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனக்குத் தெரியுமா? மண்ணறைகளில் நீங்கள் வேதனை செய்யப்படுவீர்கள் என இறைவனால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று என்னிடம் கூறினார்கள். அதற்குப்பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)