அத்தியாயம்: 5, பாடம்: 37, ஹதீஸ் எண்: 999

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْفُضَيْلُ بْنُ مَرْزُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقِ بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ بْنِ عَازِبٍ ‏ ‏قَالَ ‏

نَزَلَتْ هَذِهِ الْآيَةُ ‏حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ ‏ ‏وَصَلَاةِ الْعَصْرِ فَقَرَأْنَاهَا مَا شَاءَ اللَّهُ ثُمَّ ‏ ‏نَسَخَهَا ‏ ‏اللَّهُ فَنَزَلَتْ ‏حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى ‏ فَقَالَ رَجُلٌ كَانَ جَالِسًا عِنْدَ شَقِيقٍ لَهُ هِيَ إِذَنْ صَلَاةُ الْعَصْرِ فَقَالَ ‏ ‏الْبَرَاءُ ‏ ‏قَدْ أَخْبَرْتُكَ كَيْفَ نَزَلَتْ وَكَيْفَ ‏ ‏نَسَخَهَا ‏ ‏اللَّهُ وَاللَّهُ أَعْلَمُ ‏

قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏وَرَوَاهُ ‏ ‏الْأَشْجَعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ الثَّوْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ بْنِ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقِ بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ بْنِ عَازِبٍ ‏ ‏قَالَ ‏ ‏قَرَأْنَاهَا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏زَمَانًا بِمِثْلِ حَدِيثِ ‏ ‏فُضَيْلِ بْنِ مَرْزُوقٍ‏

“அனைத்துத் தொழுகைகளையும் அஸ்ருத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள்” என்றுதான் இந்த (2:238ஆவது) வசனம் (முதலில்) அருளப்பெற்றது. அல்லாஹ் நாடிய(காலம்)வரை அவ்வாறே நாங்கள் ஓதி்வந்தோம். பின்னர் அல்லாஹ் அந்த வசனத்தை, “அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத்தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள்” என்று மாற்றி அருளினான் என்று பராஉ பின் ஆஸிப் (ரலி) கூறினார்கள்.

இந்த ஹதீஸை பராஉ (ரலி) அவர்கள் என்னிடம் அறிவித்துக்கொண்டிருந்தபோது) அருகில் அமர்ந்திருந்த ஒருவர் பராஉ (ரலி) அவர்களிடம், “அப்படியானால் நடுத் தொழுகை என்பது அஸ்ருத் தொழுகையையே குறிக்கிறது” என்று சொன்னார். அதற்கு பராஉ (ரலி) அவர்கள், “அவ்வசனம் (முதலில்) எவ்வாறு அருளப்பெற்றது; பின்னர் அல்லாஹ் அதை எவ்வாறு மாற்றினான் என்பதை நான் உமக்கு தெரிவித்துவிட்டேன். அல்லாஹ்வே அறிந்தவன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக ஷகீக் பின் உக்பா (ரஹ்)

குறிப்பு :

அல் அஸ்வத் பின் கைஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கொஞ்சகாலம் அந்த வசனத்தை ஓதி வந்தோம்” என்று பராஉ (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 37, ஹதீஸ் எண்: 998

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي يُونُسَ ‏ ‏مَوْلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏أَمَرَتْنِي ‏ ‏عَائِشَةُ ‏ ‏أَنْ أَكْتُبَ لَهَا مُصْحَفًا وَقَالَتْ إِذَا بَلَغْتَ هَذِهِ الْآيَةَ ‏ ‏فَآذِنِّي ‏ ‏حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى ‏ ‏فَلَمَّا بَلَغْتُهَا ‏ ‏آذَنْتُهَا

‏فَأَمْلَتْ عَلَيَّ ‏ ‏حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى ‏وَصَلَاةِ الْعَصْرِ ‏وَقُومُوا لِلَّهِ ‏ ‏قَانِتِينَ ‏ ‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஆயிஷா (ரலி) அவர்கள் குர்ஆன் பிரதியொன்றைத் தமக்காகப் படியெடுத்துத் தருமாறு என்னிடம் கூறினார்கள். மேலும், “அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள் எனும் (இந்த 2:238ஆவது) வசனத்தை நீ எட்டும்போது என்னிடம் தெரிவிப்பாயாக!” என்றும் கூறினார்கள். அவ்வாறே அந்த வசனம் வந்ததும் நான் அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், “அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் (அதாவது) அஸ்ருத் தொழுகையையும் பேணி(த் தொழுது) வாருங்கள். நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வழிபடுங்கள்” என்று எழுதுமாறு என்னிடம் கூறினார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், “இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளேன்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) வழியாக அபூயூனுஸ் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 37, ஹதீஸ் எண்: 997

و حَدَّثَنَا ‏ ‏عَوْنُ بْنُ سَلَّامٍ الْكُوفِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ طَلْحَةَ الْيَامِيُّ ‏ ‏عَنْ ‏ ‏زُبَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

حَبَسَ الْمُشْرِكُونَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ صَلَاةِ الْعَصْرِ حَتَّى احْمَرَّتْ الشَّمْسُ أَوْ اصْفَرَّتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَغَلُونَا عَنْ الصَّلَاةِ الْوُسْطَى صَلَاةِ الْعَصْرِ مَلَأَ اللَّهُ أَجْوَافَهُمْ وَقُبُورَهُمْ نَارًا ‏ ‏أَوْ قَالَ حَشَا اللَّهُ أَجْوَافَهُمْ وَقُبُورَهُمْ نَارًا

இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூரியன் செந்நிறமாகும் நேரம்வரை / மஞ்சள்நிறமாகும் நேரம்வரை அஸ்ருத் தொழுகையைத் தொழவிடாமல் தடுத்து விட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நடுத் தொழுகையான அஸ்ருத் தொழுகையிலிருந்து அவர்கள் நம்மைத் திசைதிருப்பிவிட்டார்கள். அல்லாஹ் அவர்களுடைய வயிறுகளையும் புதைகுழிகளையும் நெருப்பால் நிரப்புவானாக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 37, ஹதீஸ் எண்: 996

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمِ بْنِ صُبَيْحٍ ‏ ‏عَنْ ‏ ‏شُتَيْرِ بْنِ شَكَلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏قَالَ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ الْأَحْزَابِ ‏ ‏شَغَلُونَا عَنْ الصَّلَاةِ الْوُسْطَى صَلَاةِ الْعَصْرِ مَلَأَ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا ثُمَّ صَلَّاهَا بَيْنَ الْعِشَاءَيْنِ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஹ்ஸாப் (எனும் அகழ்ப்) போரின்போது “(எதிரிகளான) அவர்கள் நடுத்தொழுகையான அஸ்ருத் தொழுகையிலிருந்து நம்மைத் திசைதிருப்பிவிட்டார்கள். அவர்களுடைய வீடுகளையும் புதைகுழிகளையும் அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!” என்று கூறினார்கள். பிறகு அத்தொழுகையை இரு இரவுத் தொழுகைகளான மஃக்ரிபுக்கும் இஷாவுக்கும் இடையே தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 37, ஹதீஸ் எண்: 995

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ الْجَزَّارِ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏سَمِعَ ‏ ‏عَلِيًّا ‏ ‏يَقُولُا ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ الْأَحْزَابِ وَهُوَ قَاعِدٌ عَلَى ‏ ‏فُرْضَةٍ ‏ ‏مِنْ ‏ ‏فُرَضِ ‏ ‏الْخَنْدَقِ ‏ ‏شَغَلُونَا عَنْ ‏ ‏الصَّلَاةِ الْوُسْطَى ‏ ‏حَتَّى غَرَبَتْ الشَّمْسُ مَلَأَ اللَّهُ قُبُورَهُمْ وَبُيُوتَهُمْ ‏ ‏أَوْ قَالَ قُبُورَهُمْ وَبُطُونَهُمْ نَارًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஹ்ஸாப் (எனும் அகழ்ப்) போரின்போது அகழின் நுழைவாயில்களில் ஒன்றில் அமர்ந்தவாறு, “(எதிரிகளான) அவர்கள் சூரியன் மறையும் நேரம்வரை நடுத்தொழுகை(யான அஸ்ருத் தொழுகை)யிலிருந்து நம்மைத் திசைதிருப்பிவிட்டார்கள். அவர்களுடைய புதைகுழிகளையும் வீடுகளையும் / அவர்களுடைய புதைகுழிகளையும் வயிறுகளையும் அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 37, ஹதீஸ் எண்: 994

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَتَادَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِي حَسَّانَ ‏ ‏عَنْ ‏ ‏عَبِيدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏قَالَ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ الْأَحْزَابِ ‏ ‏شَغَلُونَا عَنْ ‏ ‏صَلَاةِ الْوُسْطَى ‏ ‏حَتَّى ‏ ‏آبَتْ ‏ ‏الشَّمْسُ مَلَأَ اللَّهُ قُبُورَهُمْ نَارًا ‏ ‏أَوْ بُيُوتَهُمْ أَوْ بُطُونَهُمْ شَكَّ ‏ ‏شُعْبَةُ ‏ ‏فِي الْبُيُوتِ وَالْبُطُونِ ‏

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ وَلَمْ يَشُكَّ

அஹ்ஸாப் (எனும் அகழ்ப்) போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(எதிரிகளான) அவர்கள் சூரியன் மறையும் நேரம்வரை நடுத் தொழுகை(யான அஸ்ருத் தொழுகை)யிலிருந்து நம்மைத் திசைதிருப்பி விட்டார்கள். அவர்களுடைய புதைகுழிகளை/அவர்களுடைய வீடுகளை/அவர்களுடைய வயிறுகளை அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)

குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஷுஅபா (ரஹ்), “… அவர்களுடைய வீடுகளையோ வயிறுகளையோ” என்று ஐயத்துடன் அறிவிக்கிறார்.

கதாதா (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர்களுடைய வீடுகளையும் வயிறுகளையும்” என்று உம்மைத் தொடராக உறுதியோடு இடம்பெற்றுள்ளது.